என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 73 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்
    X

    டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடந்த முகாமில் ஒரு பெண்ணுக்கு பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் 73 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்

    • நெல்லை மாவட்டத்தில் நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக் கப்பட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி பகுதியில் 21 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இன்று 73 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத் தில் நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக் கப்பட்டு காய்ச்சல் அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி பகுதியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் 21 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மற்றும் மக்கள் அதிகம் கொண்ட தெருக்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் முகாம் நடந்தது.

    இதனை கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நடமாடும் முகாம்கள் மூலம் அதிகம் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதி களில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை, மாலை என இரண்டு வேளைகளாக பிரிக்கப்பட்டு மருத்துவ முகாம் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதி களில் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு முகாம்களிலேயே தேவை யான மருந்து, மாத்திரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் சளி பரிசோதனை செய்ய வும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இது தவிர சுகாதார பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர், ஓ.ஆர்.எஸ். குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×