search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fees"

    • கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிதாக தொழிற் பள்ளிகள் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிற் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீடிப்பு வழங்கவும் கூடுதல் அலகுகள் சேர்க்கவும் 28.02.2023 வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    அங்கீகாரம் பெற ஒரு தொழிற் பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.

    என்.இ.எப்.டி மூலம் தொழிற்பள்ளி பணம் ( விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ) செலுத்தும்போது தொழிற்பள்ளியின் வங்கிக் கணக்கிலிருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் எந்த தொழிற் பள்ளிகளுக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை வங்கி ஸ்டேட்மெண்ட் -ல் கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து ஆர்.டி.ஜி.எஸ், என்.இ.எப்.டி மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள புரோஸ்பெக்டஸ்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.02.2023. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    மேலும் விபரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருச்சி மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விபரம் பெறலாம்.

    தொலைபேசி எண் :0431-2422171 மின்னஞ்சல் :tnjadtrg2018@gmail.com ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யாதவர்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
    • இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

    கூறியிருப்பதாவது :-

    2022-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் முதல் கட்ட கலந்தாய்வில் சேர்க்கை முடிந்துள்ளது.

    மீதி உள்ள காலியிடங்களில் சேர 2-ம் கட்டமாக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் இணையதளம் வாயிலாக வருகிற 25ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    முதல் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெறாதவர்களும், தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யாதவர்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

    www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கணினி மையங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    உரிய ஆவணங்களுடன் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலம் அல்லது கடன் அட்டை வாயிலாக விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.

    மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

    மேலும் விவரங்களுக்கு தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர், முதல்வரை 9994043023, 9840950504, 8056451988, 9943130145, 7373935569 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாதனை படைத்த ராயல் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • மாணவ மாணவிகளுக்கு மேல்நிலைக்கல்வி கட்டணத்தில் 100 சதவீத சலுகை வழங்கப்பட்டது.

    மதுரை

    விளாங்குடி ராயல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெத்தானியாபுரம் ராயல் பப்ளிக் பள்ளிகள் நேற்று வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

    12-ம் வகுப்பில் 581 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஸ்ரீஜா கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி எம்.சுபிக்ஷா 579 மதிப்பெண் பெற்று உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவி எஸ். எஸ்.பூஜா 565 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும், மாணவி சிவதர்ஷினி 564 மதிப்பெண்கள் பெற்று 4-ஆம் இடமும், மாணவி சந்தியா 566 மதிப்பெண்கள் பெற்று 5-ம் இடமும் பெற்றனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி பூமிகா ஸ்ரீ 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவர் கேசவன் 459 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவர் அஸ்வின் 457 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும், மாணவி சி.நித்திலா 450 மதிப்பெண்கள் பெற்று 4-ம் இடம் பெற்றனர்.

    12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்ரீஜாவை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ரூ. 25 ஆயிரம் ரொக்க பரிசாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பில் முதல் 3 இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மேல்நிலைக்கல்வி கட்டணத்தில் 100 சதவீத சலுகை வழங்கப்பட்டது.

    பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும், 100 மதிப்பெண்கள் பெற செய்த கணித ஆசிரியை கவிதா, உயிரியல் ஆசிரியர் முத்துராஜ் ஆகியோருக்கு பரிசுகளை பள்ளி நிறுவன தலைவர் ராஜாராம், தாளாளர் ஷகிலா தேவி ராஜாராம் ஆகியோர் வழங்கி னர்.

    • அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
    • தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை கீழ் மாவட்ட அரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை கீழ் மாவட்ட அரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது,

    இங்கு சிறந்த இசையாசி ரியர்களை க்கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குரலிசை , பரதநாட்டியம், நாதசுரம், தவில் , தேவாரம், மிருதங்கம், வயலின் 2022-2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதுவருகின்றன. இதில் 12 முதல் 25 வயது வரைக்குட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.

    இப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம்" பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள். பயிற்சிக் கட்டணம் முதலாமாண்டு மாணவர்களுக்கு ரூ.350 இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325 சிறப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

    அரசு வழங்கும் சலுகை இலவசப்பேருந்து பயண அட்டை,கல்வி உதவித்தொகை (மாதம் ரூ .400), அரசு மாணவர் விடுதி வசதி அளிக்கப்படும். மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 3-ஆண்டுகள் பயிற்சி முடிக்கும் மாணவர்க ளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    சான்றிதழ்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளிலும், இந்து அற நிலையத்து றைக்கு உட்பட்ட கோவில்களிலும்வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    எனவே விருப்பமுள்ள மாணவ, மாண வி க ள்தலை மையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி , எண்-14, கவுரி விலாஸ் பேலஸ், அரண்மனை, ராமநாதபுரம் – 623501 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படுவது தான் மிகவும் சரியானதாக இருக்கும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதுவரை ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    இந்த தீர்ப்பின் காரணமாக மருத்துவக் கல்விக்கட்டணம் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.50 லட்சம் வரை மிச்சமாகும். ஆனால், உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலக் கல்விக் கட்டணமே மிகவும் அதிகம் என்பது தான் பெரும்பான்மையான கல்வியாளர்களின் கருத்து ஆகும்.

    தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் எந்தவிதமான கட்டமைப்பு சார்ந்த வித்தியாசங்கள் இல்லை. ஒரு காலத்தில் தனியார் கல்லூரிகளாக இருந்தவை தான், மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறின. இவை எப்படி, எதற்காக, யார் மூலம் இந்த தகுதியை பெற்றன என்பது மிக நீண்ட பின்னணியாகும்.

    ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டணத்திற்கும், நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களின் கல்விக் கட்டணத்திற்கும் இடையில் பெரும் வித்தியாசங்கள் உள்ளன. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக் கல்விக்கட்டணமாக ரூ.2.85 லட்சம் முதல் ரூ 4 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

    நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும் ரூ.12.50 லட்சம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் 65 சதவீதம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சராசரிக் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.6.22 லட்சம் முதல் ரூ.6.97 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. இது ஓரளவு நியாயமானதாகும்.

    அதேநேரத்தில் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கல்விக் கட்டணம் குறைந்தது ரூ.18 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூ.22.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படும் வரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஆண்டுக் கட்டணமாக ரூ.6 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இதுதவிர ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை நன்கொடையாக வசூலிக்கப்பட்டு வந்தது.

    நீட் தேர்வுக்குப் பிறகு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கையில் எடுத்துக் கொண்டதால் நன்கொடை வசூலிப்பதை நிறுத்திவிட்ட நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள், அதை ஈடு செய்யும் வகையில் ரூ.6 லட்சமாக இருந்த ஆண்டு கல்விக் கட்டணத்தை ரூ.22.50 லட்சமாக உயர்த்திவிட்டன. ஒரே ஆண்டில் கல்விக் கட்டணத்தை 4 மடங்கு உயர்த்தியது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசோ, இந்திய மருத்துவக் குழுவோ கேட்கவில்லை. மாறாக, எந்த அடிப்படையும் இல்லாமல் மருத்துவக்கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளித்தன.

    நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவும், இந்திய மருத்துவக் குழுவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். இந்திய மருத்துவக் குழு அனுமதித்தக் கட்டணங்களை பல்கலைக்கழக மானியக் குழு குறைக்காது. இதனால் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணம் எந்த வகையிலும் குறையாது. அதனால், தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படுவது தான் மிகவும் சரியானதாக இருக்கும்.

    இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்தக் குழுவால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது போன்ற ஓரளவுக்காவது நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க முடியும்; இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    எனவே, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அத்துடன், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படுவது போன்ற இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற ஆணையிட வேண் டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #ramadoss
    ×