search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதனை படைத்த ராயல் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
    X

    பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்ரீஜாவுக்கு ராயல் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரூ. 25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. 

    சாதனை படைத்த ராயல் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

    • சாதனை படைத்த ராயல் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • மாணவ மாணவிகளுக்கு மேல்நிலைக்கல்வி கட்டணத்தில் 100 சதவீத சலுகை வழங்கப்பட்டது.

    மதுரை

    விளாங்குடி ராயல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெத்தானியாபுரம் ராயல் பப்ளிக் பள்ளிகள் நேற்று வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

    12-ம் வகுப்பில் 581 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஸ்ரீஜா கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி எம்.சுபிக்ஷா 579 மதிப்பெண் பெற்று உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவி எஸ். எஸ்.பூஜா 565 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும், மாணவி சிவதர்ஷினி 564 மதிப்பெண்கள் பெற்று 4-ஆம் இடமும், மாணவி சந்தியா 566 மதிப்பெண்கள் பெற்று 5-ம் இடமும் பெற்றனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி பூமிகா ஸ்ரீ 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவர் கேசவன் 459 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவர் அஸ்வின் 457 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும், மாணவி சி.நித்திலா 450 மதிப்பெண்கள் பெற்று 4-ம் இடம் பெற்றனர்.

    12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்ரீஜாவை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ரூ. 25 ஆயிரம் ரொக்க பரிசாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பில் முதல் 3 இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மேல்நிலைக்கல்வி கட்டணத்தில் 100 சதவீத சலுகை வழங்கப்பட்டது.

    பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும், 100 மதிப்பெண்கள் பெற செய்த கணித ஆசிரியை கவிதா, உயிரியல் ஆசிரியர் முத்துராஜ் ஆகியோருக்கு பரிசுகளை பள்ளி நிறுவன தலைவர் ராஜாராம், தாளாளர் ஷகிலா தேவி ராஜாராம் ஆகியோர் வழங்கி னர்.

    Next Story
    ×