search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

    • கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிதாக தொழிற் பள்ளிகள் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிற் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீடிப்பு வழங்கவும் கூடுதல் அலகுகள் சேர்க்கவும் 28.02.2023 வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    அங்கீகாரம் பெற ஒரு தொழிற் பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.

    என்.இ.எப்.டி மூலம் தொழிற்பள்ளி பணம் ( விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ) செலுத்தும்போது தொழிற்பள்ளியின் வங்கிக் கணக்கிலிருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் எந்த தொழிற் பள்ளிகளுக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை வங்கி ஸ்டேட்மெண்ட் -ல் கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து ஆர்.டி.ஜி.எஸ், என்.இ.எப்.டி மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள புரோஸ்பெக்டஸ்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.02.2023. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    மேலும் விபரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருச்சி மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விபரம் பெறலாம்.

    தொலைபேசி எண் :0431-2422171 மின்னஞ்சல் :tnjadtrg2018@gmail.com ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×