search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executive committee meeting"

    • அமைச்சர் காந்தி பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று மாலை மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- அண்ணாவுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தை யார் வழிநடத்துவார்களோ என்று யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பொறுப்பு ஏற்று சிறப்பான பல நல்ல திட்டங்களை தந்தார். அதன் பிறகு அவரின் எண்ணங்களையும்

    விட்டுப்போன திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறார். அவரை இந்தியாவே பாராட்டுகிறது. வெளிமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலினையும் அவர் செயல்படுத்தும் மகத்தான திட்டங்களையும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்ச் -1ம் தேதி பிறந்த நாள் அவரது பிறந்த நாளை ஆடம்பரமில்லாமல் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.பல்வேறு மாநில தலைவர்கள் வந்து பாராட்ட உள்ளனர். இவ்விழாவில் நமது ராணி ப்பேட்டை மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும். ஈரோடு இடைதேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    பின்னர் கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றபட்டன.கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஜி.கே.உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட துணை செயலாளர்கள் துரைமஸ்தான், சிவஞானம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கண்ணையன், சுந்தரம், அசோகன், கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்பட ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், பிற அணி அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் அமுதா நன்றி நன்றி கூறினார்.

    • ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நடந்தது.
    • ராதாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 43 கிளைகளிலும் பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நடந்தது. வடக்கு ஒன்றியதலைவர் சக்திவேல்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி, திசையன்விளை பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் லிவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் ஆனந்த பாண்டி வரவேற்று பேசினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கட்டளை ஜோதி, மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் விவேகானந்தன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கோபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ராதாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 43 கிளைகளிலும் தலா 15 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திசையன்விளைவாரச்சந்தை வளாகத்தில் நவீன முறையில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்தில் ஏற்கனவே அங்கு கடை வைத்து உள்ளவர்களுக்கு தலா ஒரு கடை மட்டும் வழங்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய பா.ஜ.க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது.
    • கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய பா.ஜ.க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். ராசிபுரம் ஒன்றிய பொது செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சத்திய

    மூர்த்தி, மாவட்ட பொதுச்செ யலாளர் சேதுராமன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத் தலைவர் லோகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்ரா, ஒன்றிய பார்வையாளர் தமிழரசு, முன்னாள் ஒன்றிய தலைவர்கள் லட்சுமணன், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவிப்பது, ஜார்கண்ட் மாநில கவர்னராக ராதா

    கிருஷ்ணனை அறிவித்த பிரதமர் மோடி, கட்சித் தலைவர் நட்டா ஆகியோ ருக்கு நன்றி தெரிவிப்பது, ராசிபுரம் பத்திரப்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொது மக்கள்

    கழிப்பிட வசதி இல்லாத தால் சிரமத்துக்கு ஆளாகி யுள்ளார்கள்.

    ஆகவே உடனடியாக கழிப்பிட வசதி ஏற்ப டுத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்வது, வேலம்பா

    ளையத்தில் சமுதாயக்கூடம் கட்டி 2 வருடங்கள் ஆகியும்

    மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்பட வில்லை. எனவே சமுதா

    யக்கூடத்தை உடனடியாக திறக்க வேண்டும். பிள்ளா நல்லூர் பேரூராட்சியில் இருந்து கல்யாணி வழியாக செல்லும் கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புளியங்குடியில் நகர பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புளியங்குடி:

    புளியங்குடியில் நகர பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புளியங்குடியில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்த அறநிலையத் துறையை வலியுறுத்தியும், 25-வது வார்டில் உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டியும், 31-வது வார்டு தெருவில் நடுவில் இருக்கும் மின்கம்பத்தை ஒரமாக வைக்க வேண்டும் எனவும் பலதடவை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நகர தலைவர் சண்முகசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், நகர பொது செயலாளர் மாரியப்பன் மாரீஸ், நகர பொருளாளர் அருணாசலம், நகர் மன்ற உறுப்பினர் திருமலை செல்வி, நகர துணை தலைவர் நீராதிலிங்கம் திருமலைகுமார், அஸ்வதி மாரியப்பன்,மாவட்ட மகளிரணி தலைவர் மகாலெட்சுமி வெங்கடேசன், நகர மகளிரணி தலைவர் பொன்சரோஜினி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கும்பினிப்பேட்டை கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட இளைஞர் சங்க செயலாளரும் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செழியன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,மாவட்ட தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான அ.மா.கிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க செயலாளர் தீனதயாளன், மாணவர் சங்கம் மாநிலச் செயலாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    வருகின்ற மே 5-ந் தேதி சித்திரை திருவிழாவின் போது அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் சங்க மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக ஐம்பதாயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள சங்க கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

    சித்தேரி ஊராட்சியில் இயங்கும் அல்ட்ராடெக் தனியார் சிமெண்டு நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சாரதி, பாட்டாளி சங்கம் மாவட்ட தலைவர் ஏழுமலை,மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர்கள் தனசேகர், ராமன், ஜெகன், ஷோபன் பாபு, அன்பு மற்றும் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட இளைஞர் சங்க துணைச் செயலாளர் வி.விஜி நன்றியுரை கூறினார்.

    • பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.இளங்கோ வரவேற்றார்.ஒன்றிய செயலாளர் சபரிகிரிசன், பரத், தேவேந்திரன், கண்ணதாசன், சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் எம். கே.முரளி, மாநில பொதுகுழு உறுப்பினர் கிரிகுமரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நெடுமாறன், எஸ்.பி.சண்முகம், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் புல்லட் ராதாகிருஷ்ணன், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் பகவான் கார்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எல்.எஸ்.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் பூண்டி மோகன், ரஜினி சக்ரவர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், வருகிற 23-ம் தேதி திங்கட்கிழமை அன்று ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம். கே.முரளி இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது ஆற்காடு பஜார் வீதியில் கால்வாய் மேல் கல்வெட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் உயரமாக போடப்பட்டுள்ள கல்வெட்டு அதன் உயரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் ஞானசெளந்தரி நன்றி கூறினார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி வட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் (பொறுப்பு) அ. ஜோதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றுப் பேசினார்.

    கூட்டத்தில் வேலூர் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் இருந்து அங்கு தயாரிக்கப்படும் அச்சு பொருட்கள் நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாணியம்பாடி வட்டத்தின் சார்பில் விற்பனைகளை மேற்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சாரதி, அன்பழகன், ராஜா, சற்குணம், அருள், வாசுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கொத்தனார், சித்தாள் போன்றவர்களை கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்ய கட்டாயம் அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 2-வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மண்டல தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் கட்டிட சங்க தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார்.கூட்டத்தில் பொறியாளர்கள் மத்தியில் கட்டிட பணிகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொறி யாளர்கள் கையாள வேண்டிய விதிமுறை கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது.

    பொறியாளர் கவுன்சில் அமைத்திடவும், கட்டிட பொருட்களின் விலை வாசியை கட்டுப்படுத்தி அதற்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திடவும், மாவட்ட பொறியாளர்கள் திட்ட குழுவில் பதிவு பெற்ற பொறி யாளர்களை குழுவில் நியமனம் செய்ய வேண்டும் என்று பல்ேவறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன.

    மேலும் ஒவ்வொரு பகுதியிலும் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்த னார், மெய்காட்டள் (உதவி யாளர்) சித்தாள் போன்ற வர்களை கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்ய கட்டாயம் அறிவுறுத்த வேண்டும் என்று பொறியா ளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மாநில செயலாளர் குழந்தைவேலு, பொருளாளர் சிவக்குமார், நியமன அலுவலர் ராமநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர்கள், மாநில மண்டல நிர்வாகிகள் என மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை திருப்பத்தூர் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் கண்ணன், முன்னாள் கட்டிட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.
    • தேர்தலில் முழு வெற்றியை நாம் பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:-

    அதிக அளவில் இளைஞர்கள், மகளிர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்பவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் எனக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் அந்த பகுதியில் நாம் கூட்டம் போட்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். புதியவர்களையும் இணைத்து அவர்களையும் அரவணைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். எதிர்வரும் தேர்தலில் முழு வெற்றியை நாம் பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்து மறைந்த போராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு நாள் வருகிற 19-ந்தேதி வருகிறது. அன்றைய தினத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டாட வேண்டும் என்ற தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி பேரூர் மற்றும் வார்டு கிளைக்கழகங்கள் தோறும் பேராசிரியர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

    கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். 1 முதல் 3-ம் வகுப்பு வரை நடைபெறும் எண்ணும் எழுத்தும் செயல்பாடுகளில் உருவாக்க மதிப்பீடு செய்வதில் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி வருவதை கைவிட வேண்டும். பொது மாறுதல் விதிமுறைகளுக்கு மாறாக தற்போது தொடக்க கல்வித்துறையில் நடைபெற்று வரும் பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    இதில் பள்ளிப்பாளையம் வட்டார செயலாளர் தன்ராஜ், மோகனூர் வட்டார செயலாளர் சரவணன், பரமத்தி வட்டார தலைவர் சாந்தி, கொல்லிமலை வட்டார தலைவர் தமிழழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மலர்விழி நன்றி கூறினார்.

    • திருவானைக்கோவிலில் ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கத்தின் செயற்குழுகூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் சிதம்பர மடத்தை பராமரிப்பு செய்வதென்று உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருச்சி

    திருவானைக்கோவிலில் நடந்த கூட்டத்தில் ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய, மாநில, அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருவானைக்கோவிலில் ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கத்தின் செயற்குழுகூட்டம் சங்கத்தின் தலைவரும், சிவானி கல்வி குழுமத்தின் சேர்மனுமான டாக்டர் பி. செல்வராஜ் தலைமையில் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வருகை தந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களை சங்கத்தின் செயலாளர் சதீஸ்வரன் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் செந்தில்குமார் சங்க வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்தார், துணைத்தலைவர் புரவி நன்றியுரையாற்றினார். கூட்டத்திற்கு சங்க நீர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் நீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம, நகர, கிளை சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    சிதம்பர மடத்தை பராமரிப்பு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. அப்பர் கட்டமுது விழா சிறப்பாக நடத்துவதென்றும், சங்க யாதாஸ்துவை திருத்துவதென்றும்இ லவச திருமணங்கள் நடத்துவதென்றும் உயர்கல்வி பயில வட்டி இல்லா கடன் வழங்குவதென்றும் கல்விகடன் வழங்க அறக்கட்டளை அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

    கிராம சங்கங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதென்றும் பன்னாட்டு ஆறுநாட்டு வேளாளர் மாநாடு நடத்துவதென்றும் ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்ப்பதந்த மத்திய, மாநில அரசை வலியுறுத்துவதென்றும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அறுபத்து மூவர் சிவன் அடியார் திருக்கூட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அறுபத்து மூவர் சிவனடியார் திருக் கூட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    தாரமங்கலம், செப்.22-

    தாரமங்கலத்தில் உள்ள இயற்கை பாதுகாப்பு அமைப்பு சங்கம் சார்பில் அறுபத்து மூவர் சிவன் அடியார் திருக்கூட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது . கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி தலைமை தாங்கினார் . மணிகண்டன் சக்தி, யோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அறுபத்து மூவர் சிவனடியார் திருக் கூட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் தாரமங்கலம் பகுதியில் உள்ள ஆலயங்களில் உலவார பணிகள் செய்வது. விழாக்காலங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது . அறுபத்துமூவர் திருவீதி உலா நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் சக்திவேல் .ராமசாமி .கோவிந்தன் .குமார் .வெங்கடேஷ் .இந்திரஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    ×