என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி பேசிய போது எடுத்த படம்.
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
- அமைச்சர் காந்தி பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று மாலை மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- அண்ணாவுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தை யார் வழிநடத்துவார்களோ என்று யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பொறுப்பு ஏற்று சிறப்பான பல நல்ல திட்டங்களை தந்தார். அதன் பிறகு அவரின் எண்ணங்களையும்
விட்டுப்போன திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறார். அவரை இந்தியாவே பாராட்டுகிறது. வெளிமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலினையும் அவர் செயல்படுத்தும் மகத்தான திட்டங்களையும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்ச் -1ம் தேதி பிறந்த நாள் அவரது பிறந்த நாளை ஆடம்பரமில்லாமல் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.பல்வேறு மாநில தலைவர்கள் வந்து பாராட்ட உள்ளனர். இவ்விழாவில் நமது ராணி ப்பேட்டை மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும். ஈரோடு இடைதேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
பின்னர் கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றபட்டன.கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஜி.கே.உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட துணை செயலாளர்கள் துரைமஸ்தான், சிவஞானம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கண்ணையன், சுந்தரம், அசோகன், கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்பட ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், பிற அணி அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் அமுதா நன்றி நன்றி கூறினார்.






