search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
    X

    பரமத்தி வேலூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

    கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். 1 முதல் 3-ம் வகுப்பு வரை நடைபெறும் எண்ணும் எழுத்தும் செயல்பாடுகளில் உருவாக்க மதிப்பீடு செய்வதில் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி வருவதை கைவிட வேண்டும். பொது மாறுதல் விதிமுறைகளுக்கு மாறாக தற்போது தொடக்க கல்வித்துறையில் நடைபெற்று வரும் பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    இதில் பள்ளிப்பாளையம் வட்டார செயலாளர் தன்ராஜ், மோகனூர் வட்டார செயலாளர் சரவணன், பரமத்தி வட்டார தலைவர் சாந்தி, கொல்லிமலை வட்டார தலைவர் தமிழழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மலர்விழி நன்றி கூறினார்.

    Next Story
    ×