என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் கூட்டணி"

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

    கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். 1 முதல் 3-ம் வகுப்பு வரை நடைபெறும் எண்ணும் எழுத்தும் செயல்பாடுகளில் உருவாக்க மதிப்பீடு செய்வதில் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி வருவதை கைவிட வேண்டும். பொது மாறுதல் விதிமுறைகளுக்கு மாறாக தற்போது தொடக்க கல்வித்துறையில் நடைபெற்று வரும் பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    இதில் பள்ளிப்பாளையம் வட்டார செயலாளர் தன்ராஜ், மோகனூர் வட்டார செயலாளர் சரவணன், பரமத்தி வட்டார தலைவர் சாந்தி, கொல்லிமலை வட்டார தலைவர் தமிழழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மலர்விழி நன்றி கூறினார்.

    • முழுமையான கலந்தாய்வு நடத்திட வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமர்நாத் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடக்கும் முறைகேடான மாறுதல்களை உடனே நிறுத்த வேண்டும், இதுவரை போடப்பட்ட அனைத்து முறைகேடான மாறுதல்களையும் திரும்ப பெற வேண்டும், வெளிப்படையான நேர்மையான கலந்தாய்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும், பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி தேவையி ல்லை என்னும் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வுடன் முழுமையான கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் கிளை பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிகிச்சை செலவு தொகையை பெறுவதில் சிரமம் இருப்பதாக ெதாடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டி உள்ளனர்.
    • கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சிவகங்கை

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செய லாளர் முத்துப்பாண்டியன் முதல்-அமைச்சருக்கு மனு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணி புரியும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.300 அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்து வருகிறது.

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021-ஐ செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 1.9.2021 முதல் எம்.டி. இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் 3-ம் நபர் ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதனால் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் சிகிச்சை செலவுத் தொகையை திரும்பப் பெறுவது சிரமமாக உள்ளது. எனவே அரசா ணைக்கு முரண்பாடாக உள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது அரசு ஆணைப்படி சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் வழங்குவதில்லை. மாறாக காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மட்டும் வழங்கி வருகிறது.

    மீதி பணத்தை நோயாளி களைக் கட்டச் சொல்வது, அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் மருத்துவமனை நிர்வாகங்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பிரச்சினைகள் குறித்து புகார் செய்தால் அதனை நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை. மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகங்களிடமே பேசிக் கொள்ளுங்கள் என்றும் அலட்சியமாக கூறுகின்றனர். இதனால் சிகிச்சை பெறும் ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த நிலையில் தமிழக அரசின் உன்னதமான திட்டமான புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கும், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
    • 18 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 4 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

    பல்லடம் :

    தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு ஆசிரியர்களுக்கும், மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கும், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கும் பாராட்டு விழா பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு பல்லடம் வட்டார தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.ஐ பெட்டோ அமைப்பின் அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், மாநிலத் தலைவர் நம்பிராஜ், பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மாநில பொருளாளர் சந்திரசேகர், மாநில மகளிரணி செயலாளர் ரமாராணி, மாநில துணைத்தலைவர் கனகராஜ், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், தமிழ்வண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர் . இந்த கூட்டத்தில் டிட்டோ ஜேக் பேரமைப்பின் 18 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநில அளவில், மாவட்ட தலைநகரங்களில் வருகிற 4 ந்தேதி( வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

    ×