search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு  தக்க பதிலடி உடனே கொடுக்க வேண்டும் -செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி. அருகில் மேயர் ஜெகன்பெரியசாமி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.


    எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி உடனே கொடுக்க வேண்டும் -செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.
    • தேர்தலில் முழு வெற்றியை நாம் பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:-

    அதிக அளவில் இளைஞர்கள், மகளிர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்பவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் எனக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் அந்த பகுதியில் நாம் கூட்டம் போட்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். புதியவர்களையும் இணைத்து அவர்களையும் அரவணைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். எதிர்வரும் தேர்தலில் முழு வெற்றியை நாம் பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்து மறைந்த போராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு நாள் வருகிற 19-ந்தேதி வருகிறது. அன்றைய தினத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டாட வேண்டும் என்ற தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி பேரூர் மற்றும் வார்டு கிளைக்கழகங்கள் தோறும் பேராசிரியர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×