search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England World Cup"

    மே 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பையை இந்தியா வெல்லாவிடில், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன் என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘நாம் உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. நாம் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், நாம் கஷ்டப்படுவோம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.



    ஆனால், நம்முடைய பந்து வீச்சாளர்கள் கூட எதிரணியை எளிதில் அவுட்டாக்கி விடுவார்கள். நம்மிடம் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்தியா சிறந்த அணி. உலகக்கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி ஸ்டீவ் ஸ்மித் கெத்து காட்டியுள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர்.

    தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம். நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், இன்றைய 3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.



    ஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால்  Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பை தொடர் நடக்கும் நேரத்தை பார்த்தால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினமானதாக இருக்கப் போகிறது என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார். #CWC2019 #BrettLee
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் இடம்பிடித்திருந்தார். தற்போது அவர் தோள்பட்டை காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரெட் லீக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா சிறந்த அணி. உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியுள்ளார். ஆனால் கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எந்தவொரு அணியாக இருந்தாலும், மிகவும் தயாரான நிலையில்தான் உலகக்கோப்பைக்குச் செல்லும்.

    ஆனால் இதுவெல்லாம் அவர்கள் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப, எப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.



    தொடர் இங்கிலாந்தில் எந்தமாதம் நடைபெறுகிறது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் உகந்ததாக இருக்காது.

    ஏராளமானோர் இங்கிலாந்து ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. புதுப்பந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், பந்து பொலிவை (Shine) இழந்துவிட்டால், வேகப்பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராட வேண்டும்’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேவிட் வார்னர் டக்அவுட் ஆகிய நிலையில், ஸ்மித் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் விளாசினார். #CWC2019
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் வார்னர். இருவரும் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். இந்தத்தடை தற்போது முடிவடைந்ததால், உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் இருவரும் களம் இறங்கினர். 3-வது வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய ஸ்மித் 22 ரன்கள் சேர்த்தார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் டக்அவுட் ஆனார். ஆனால் ஸ்மித் சிறப்பாக விளையாடி 77 பந்தில் 89 ரன்கள் குவித்தார். உஸ்மான் கவாஜா 56 ரன்களும், மேக்ஸ்வெல் 52 ரன்களும் சேர்த்தனர்.

    காயம் குணமாகி அணிக்கு திரும்பிய மிட்செல் ஸ்டார்க் ஐந்து ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    தோள்பட்டை காயத்தில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டுள்ளார். #ICCWorldCup #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த மாதம் 23-ந்தேதிக்குள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

    15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜை ரிச்சர்ட்சன் இடம்பிடித்திருந்தார். தற்போது தோள்பட்டை காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.



    ஒவ்வொரு அணிகளும் இந்த மாதம் 23-ந்தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு ஐசிசி-யின் ஒப்புதலுக்குப் பிறகே வீரர்களை மாற்ற முடியும்.
    உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்த அன்ரிச் நோர்ட்ஜ் காயத்தால் விலகியதால், கிறிஸ் மோரிஸ் இடம்பிடித்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த 23-ந்தேதிக்குள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ் இடம் பிடித்திருந்தார். இலங்கைக்கு எதிரான தொடரின்போது இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் காயம் சரியாகிவிடும் என்று நினைத்த தென்ஆப்பிரிக்கா, அவரது பெயரை 15 பேர் கொண்ட பட்டியலில் சேர்த்தது.

    இந்நிலையில் அன்ரிச் நோர்ட்ஜ்-யின் காயம் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு குணமடையவில்லை. இதனால் கிறிஸ் மோரிஸ் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளார். கிறிஸ் மோரிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.



    டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசும் திறமைப் படைத்த கிறிஸ் மோரிஸ் சிறப்பாக பேட்டிங்கும் செய்வார். உலகக்கோப்பைக்கான 10 அணிகளும் இந்த மாதம் 23-ந்தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
    நாங்கள் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் கலந்து கொள்வதற்காக மட்டுமே செல்லமாட்டோம், கோப்பையை வெல்லவே செல்கிறோம் என முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதில் வங்காளதேச அணியும் ஒன்றும். கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் காலிறுதி வரை முன்னேறியது.



    அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர், ‘‘நாங்கள் இங்கிலாந்து செல்வது, சும்மா உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கு மட்டுமல்ல. கோப்பையை வெல்வதற்காகவும்தான். இதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு வருடமாக ஒருநாள் போட்டியில் விளையாடாத கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    இன்று மதியம் இலங்கை அணி 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்காமல் இருந்த கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கருணாரத்னே, 2. அவிஷ்கா பெர்னாண்டோ, 3. திரிமன்னே, 4. குசால் பெரேரா, 5. குசால் மெண்டிஸ், 6. மேத்யூஸ், 7. டி சில்வா, 8. வாண்டர்சே, 9. திசாரா பேரேரா, 10. உடானா, 11. லசித் மலிங்கா, 12. லக்மல், 13. நுவான் பிரதீப், 14. ஜீவன் மெண்டிஸ், 15. ஸ்ரீவர்தனா.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக்கோப்பைக்கான புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் விற்பனையாகிறது. #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் உலகக்கோப்பைக்கு புதிய ஜெர்ஸியுடன் களம் இறங்கும். அந்த வகையில் இந்திய அணிக்கான ஜெர்ஸி ஏற்கனவே வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அந்த அணிக்கான ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணியின் உலகக்கோப்பைக்கான ஜெர்ஸியை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறது.
    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வய்ப்பு இல்லை என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

    இந்தியா - ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன் இங்கிலாந்து அல்லது இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் பிரபலங்களால் கணிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 2-3 என இழந்ததால் இந்தியாவின் மீதான பார்வை படிப்படியாக மங்க ஆரம்பித்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கே வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் வார்னே, இங்கிலாந்து உலகக்கோப்பைக்கான அவரின் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. வரும் 23-ந்தேதிக்குள் 10 அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். நியூசிலாந்து முதல் அணியாக வீரர்கள் பட்டியலை அறிவித்தது.

    இந்தியா 15-ந்தேதி உலகக்கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை அறிவிக்கிறது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் வார்னே, அவரின் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்துள்ளார்.

    வார்னே தேர்வு செய்துள்ள அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. ஆர்கி ஷார்ட், 3. ஆரோன் பிஞ்ச், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. மேக்ஸ்வெல், 6. ஸ்டாய்னிஸ், 7. அலேக்ஸ் கேரி, 8. கம்மின்ஸ், 9. மிட்செல் ஸ்டார்க், 10. ரிச்சர்ட்சன் (பிட் இருந்தால்). 22. ஆடம் ஜம்பா

    நான்கு ரிசர்வ் வீரர்கள் விவரம்:-

    1. ஷேன் மார்ஷ், 2. நாதன் லயன், 3. ஆஷ்டோன் டர்னர், 4. கவுல்டர்-நைல்
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #WorldCup
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து நடக்கிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அணிகளை தேர்வு செய்ய ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதித்துள்ள கடைசி தேதியான ஏப்ரல் 23-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை தேர்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணியில் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதுதான் இதுவரை முடிவு செய்யவில்லை. மற்ற அனைத்து இடத்திற்கான வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர்.



    ரி‌ஷப் பந்தின் ஆட்டம் கடந்த ஒரு ஆண்டாகவே மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார். 3 நிலை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். விஜய் சங்கர் பேட்டிங் ஆல்ரவுன்டர் வரிசையில் இருக்கிறார்.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ரகானே உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த 3 பேரும் உலககோப்பை அணியில் இடம்பிடிக்க கடும் போட்டியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும் கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் வென்றுள்ளன.
    ×