என் மலர்
நீங்கள் தேடியது "Mushfiqur Rahim"
- அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் சதமடித்தார்.
- முஷ்பிகுர் ரஹிமுக்கு இந்த சதம் டெஸ்ட் போட்டிகளில் 100வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்கா:
அயர்லாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 476 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் முஷ்பிகுர் ரஹிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு வங்கதேச வீரராக இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
உண்மையைச் சொல்லப் போனால், நான் அதை கனவிலும் நினைத்ததில்லை. எனவே இது உண்மையிலேயே ஒரு பெரிய சாதனை.
எனக்கு மட்டுமல்ல, எந்த நாட்டைச் சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரருக்கும், இது ஒரு பெருமையான தருணம்.
நான் அந்த நபராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது தெளிவாகிறது. இதன் பொருள் எனது பொறுப்பு இன்னும் பெரியது, நான் அதற்கு ஏற்ப வாழ முயற்சிப்பேன்.
நான் டிரஸ்ஸிங் ரூமை விட்டு வெளியேறும்போது எனது இடைவெளியை நிரப்பக்கூடிய ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்.
100 என்பது ஒரு பெரிய எண் என்று நான் நினைக்கிறேன். எனவே அங்கு செல்லும்போது பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அனுபவத்தைச் சேகரிக்க முயற்சித்தேன், அமைதியாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்.
இது மிகவும் சிறப்பாக இருக்கிறது, எனக்கு உண்மையிலேயே மரியாதையாக இருந்தது. இந்த வகையான அங்கீகாரம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படும் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வரும் முஷ்பிகுர் ரஹிம் தனது 100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரஹீம் படைத்துள்ளார்.
- 100-வது போட்டியில் விளையாடிய ரஹீம் சதம் அடித்து அசத்தினார்.
அயர்லாந்து கிரிக்கெ அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
100-வது போட்டியில் விளையாடிய ரஹீம் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
அதன்படி 100-வது போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஹீம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 11-வது வீரராக சாதனை படைத்துள்ளார்.
100-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வீரர்கள் விவரம்:-
கோலின் கவுட்ரி (இங்கிலாந்து)
ஜாவேத் மியாண்டட் (பாகிஸ்தான்)
கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்)
அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து)
இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா)
ஹாஷிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்)
டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ரஹீமின் 13-வது சதமாகும். இதன் மூலம் சக நாட்டு வீரர் மோமினுல் ஹக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
- 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 8-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இணைந்துள்ளார்.
அயர்லாந்து கிரிக்கெ அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 8-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இணைந்துள்ளார். இந்திய ஜாம்பவான் எம்.எஸ். தோனி (90 டெஸ்ட்) மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (96 டெஸ்ட்) போன்றோரால் கூட இந்த மைல்கல்லை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
100+ டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர்கள்:
மார்க் பௌச்சர் (தென் ஆப்பிரிக்கா) - 147 டெஸ்ட்கள்
அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து) - 133 டெஸ்ட்கள்
குமார் சங்கக்காரா (இலங்கை) - 134 டெஸ்ட்கள்
ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - 114 டெஸ்ட்கள்
இயான் ஹீலி (ஆஸ்திரேலியா) - 119 டெஸ்ட்கள்
பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 101 டெஸ்ட்கள்
ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து) - 100 டெஸ்ட்கள்
முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்) - 100 டெஸ்ட்கள்*
- இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
- முதல் நாள் முடிவில் வங்கதேசம் அணி 292 ரன்கள் குவித்தனர்.
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர்.
இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 292 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நஜ்முல் 148 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகுர் 150 ரன்கள் விளாசி அசத்தினார். மறுமுனையில் லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின் கில்கிறிஸ்ட் சாதனையை முஷ்பிகுர் ரஹீம் முறியடித்துள்ளார்.
ரஹீம் 15509 ரன்களுடன் முதல் இடத்திலும் கில்கிறிஸ்ட் 15461 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் 3 முதல் 5 இடங்கள் முறையே டிகாக் (12654), ஜோஸ் பட்லர் (11,881) ஜானி பேர்ஸ்டோவ் (11,581) ஆகியோர் உள்ளனர்.
- அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முஷ்ஃபிகுர் ரஹிம் சதம் அடித்தார்.
- 50 ஓவர் முடிவில் வங்காள தேச அணி 349 ரன்களை குவித்தது.
அயர்லாந்து அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்காள தேசம் 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, முஷ்ஃபிகுர் ரஹிம் அதிரடி சதத்தால் 50 ஓவரில் 349 ரன்களை குவித்தது. டெத் ஓவர்களில் காட்டடி அடித்து 60 பந்தில் சதமடித்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார்.
இந்த போட்டி மழை காரணமாக முடிவு இல்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்னில் அவுட் ஆனார்.
- இந்த முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனையை ரஹீம் படைத்தார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷ்பிகுர் ரஹீம் தேவையில்லாமல் அவுட் ஆனார். அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமிசன் பந்து வீச்சை எதிர் கொண்டார். அப்போது தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ரஹீம், பேட்டில் பட்டு பந்து அவரை விட்டு தள்ளி சென்றது. உடனே அந்த பந்தை கையால் தள்ளி விட்டார்.
இதை பார்த்த நியூசிலாந்து வீரர்கள் அவுட் என அப்பீல் செய்தனர். உடனே நடுவர்கள் 3-ம் நடுவரிடம் முறையீட்டார். இதனையடுத்து 3-ம் நடுவர் அவுட் என அறிவித்தார். இதன் மூலம் obstructing the field முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனை படைத்தார்.
- வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
- அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.
வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. லிட்டன் தாஸ் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். 7வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன், மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக ஆடிஅய் முஷ்பிகுர் ரஹிம் சதமடித்து அசத்தினார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்தார்.
7-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்த நிலையில், முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டாகி இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மெஹிதி ஹசன் 77 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்தது.
- பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.
வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து அடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டானார். ஷட்மன் இஸ்லாம் 93 ரன்னிலும், மெஹிதி ஹசன் 77 ரன்னிலும், லிட்டன் தாஸ் 56 ரன்னிலும், மொமினுல் ஹக் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 51 ரன் எடுத்தார்.
வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி எளிதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினேன்.
- என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்க்கு பயிற்சியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த பரிசுத்தொகையை வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக முஷ்ஃபிக்கூர் ரஹிம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த பரிசுத் தொகையை, வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினேன். எனவே, நான் அவர்களுக்கு இந்த பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்.
வெளிநடுகளில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதால், இது இதுவரை என்னுடைய ஆட்டங்களில் மிகச்சிறந்த ஆட்டமாக நான் பார்க்கிறேன். மேலும் இப்போட்டிக்கு முன்னதாக நாங்கள் இங்கு வந்ததில் இருந்து தீவிரமாக தயாராகினோம். அதேசமயம் இந்த டெஸ்ட் தொடருக்கு முன், இரண்டரை மாத இடைவெளி இருந்தது.
மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வீரர்களுடன் அணியின் மற்ற வீரர்களும் நிர்வாகமும் அங்கு இருந்தனர். என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்க்கு பயிற்சியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன்.
இவ்வாறு ரஹிம் கூறினார்.
- முதலில் பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 106 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டாக்கா:
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 106 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
202 ரன்கள் பின்தங்கிய நிலையில், வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. மஹமதுல் ஹசன் 38 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக 6,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்தார்
முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 11 சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில வாரங்கள் எனக்கு சவாலாக இருந்தன.
- வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 9 சதங்களும், 49 அரை சதங்களும் அடித்துள்ளார்.
புதுடெல்லி:
வங்கதேச கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் (வயது 37). சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அந்த அணி ஜொலிக்காத சூழலில், ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ரகீம் வெளியிட்டார்.
இதுபற்றி அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். எல்லாவற்றுக்கும் கடவுளுக்கு நன்றி.
எங்களுடைய சாதனைகள் உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டபோதும், ஒரு விசயம் நிச்சயம். என்னுடைய நாட்டுக்காக எப்போதெல்லாம் நான் விளையாட களம் இறங்கினேனோ, 100 சதவீதத்திற்கு கூடுதலாக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் அப்போது விளையாடினேன் என தெரிவித்து உள்ளார்.
கடந்த சில வாரங்கள் எனக்கு சவாலாக இருந்தன. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கடந்த 19 ஆண்டுகளாக என்னுடைய விளையாட்டை ரசித்து வரும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என அதில் பதிவிட்டு உள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 2006-ம் ஆண்டு முதல் விளையாட தொடங்கிய முஷ்பிகுர் ரஹீம், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 7,795 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 9 சதங்களும், 49 அரை சதங்களும் அடங்கும்.
- டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கவனத்தை செலுத்த உள்ளேன் என முஷ்பிகுர் ரஹீம் கூறினார்.
- ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்.
வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். 35 வயதான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 16 வயதில் வங்காளதேச அணிக்காக 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன இவர் டி-20 போட்டிகளில் 2006-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.
2007-ம் ஆண்டு முதல் டி-20 உலக கோப்பைகளில் வங்காளதேச அணிக்காக முஷ்பிகுர் ரஹீம் ஆடியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பைக்கு அந்நாட்டு அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
தனது ஒய்வு குறித்து முஷ்பிகுர் ரஹீம் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கவனத்தை செலுத்த உள்ளேன்.
மேலும், ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் எம்.ஆர்.15 என்ற பெயருடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எனது நாட்டுக்காக விளையாட காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து முஷ்பிகுர் ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வங்காளதேச அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி-20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 5,235 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 6,774 ரன்களும், டி-20 போட்டிகளில் 1,500 ரன்களும் அடித்துள்ளார்.






