என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆடம் கில்கிறிஸ்ட்டின் அரிய சாதனையை முறியடித்த முஷ்பிகுர் ரஹீம்
    X

    ஆடம் கில்கிறிஸ்ட்டின் அரிய சாதனையை முறியடித்த முஷ்பிகுர் ரஹீம்

    • இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் வங்கதேசம் அணி 292 ரன்கள் குவித்தனர்.

    வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர்.

    இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 292 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நஜ்முல் 148 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகுர் 150 ரன்கள் விளாசி அசத்தினார். மறுமுனையில் லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின் கில்கிறிஸ்ட் சாதனையை முஷ்பிகுர் ரஹீம் முறியடித்துள்ளார்.

    ரஹீம் 15509 ரன்களுடன் முதல் இடத்திலும் கில்கிறிஸ்ட் 15461 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் 3 முதல் 5 இடங்கள் முறையே டிகாக் (12654), ஜோஸ் பட்லர் (11,881) ஜானி பேர்ஸ்டோவ் (11,581) ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×