search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brett Lee"

    • இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது
    • லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. 200 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

    இதன் மூலம் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    குறிப்பாக இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது. தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்தில் அவர் பந்துவீசி பஞ்சாப் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதனால் தான் லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    அதன் பின்னர் பேசிய அவர், தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் தான் தம்முடைய ரோல் மாடல் என்று கூறினார் . மேலும் காயத்தை சந்தித்திருக்காமல் போயிருந்தால் கடந்த வருடமே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடியிருப்பேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மயங்க் யாதவை தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மணிக்கு 155.8 கி.மீ வேகம். மயங்க் யாதவ், நீங்கள் எங்கே ஒளிந்திருந்தீர்கள் என்று வியப்புடன் பாராட்டியுள்ளார்.

    மேலும் மயங்க் யாதவ் பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தன்னுடைய ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துள்ளது. மயங்க் யாதவ், மிரட்டலான வேகம். மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • 2012ல் விளையாட துவங்கிய மேக்ஸ்வெல், அனைத்து வடிவத்திலும் சிறப்பாக ஆடினார்
    • ஐசிசி உலக கோப்பை தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர், 35 வயதான க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell).

    2012ல் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் மேக்ஸ்வெல்.

    கடந்த 2023 நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்.

    2022ல் கால்முறிவின் காரணமாக 3 மாதங்களுக்கும் மேல் விளையாடாமல் இருந்தார்.

    சென்ற வருடம் க்ளென் தொடர்ச்சியாக பல காயங்களை சந்தித்தார். அகமதாபாத் நகரில் கீழே விழுந்ததில் ரத்த கட்டு ஏற்பட்டது.

    ஆனாலும், உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இறுதி ரன்களை எடுத்தவர் க்ளென் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தினார். பிறகு முன்னாள் ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் ப்ரெட் லீ நடத்தி வரும் "சிக்ஸ் அண்ட் அவுட்" எனும் இசைக்குழுவின் கச்சேரியை ரசித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் ராயல் அடிலெய்ட் (Royal Adelaide) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், அதிக மது அருந்தியதால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கண்டறிய ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரெலியா (Cricket Australia), இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    • இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.
    • 13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக்கோப்பை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன. 13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக்கோப்பை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி-யின் 50 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்றது.

    அதில் 2011-ஆம் ஆண்டு டோனியின் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பல ஐசிசி தொடர்களை இந்திய அணி இழந்த வேளையில் தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்காக முனைப்பு காட்டி வருகிறது.

    மேலும் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இந்த அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்த ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில் உலக கோப்பையை இந்திய அணிதான் வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரட் லீ கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி தற்போது மிகச் சிறப்பான அணியாக உள்ளது. அந்த அணியில் அனுபவமும் இளமையும் கலந்துள்ளது.

    அதுமட்டும் இன்றி இந்திய மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது சவாலான காரியம். இங்குள்ள மைதானங்கள் அனைத்தும் இந்திய அணிக்கு ரொம்பவே பழக்கப்பட்டவை என்பதனால் இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பு என்று எந்தவித தயக்கமும் இன்றி பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

    உலகக்கோப்பை தொடர் நடக்கும் நேரத்தை பார்த்தால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினமானதாக இருக்கப் போகிறது என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார். #CWC2019 #BrettLee
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் இடம்பிடித்திருந்தார். தற்போது அவர் தோள்பட்டை காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரெட் லீக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா சிறந்த அணி. உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியுள்ளார். ஆனால் கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எந்தவொரு அணியாக இருந்தாலும், மிகவும் தயாரான நிலையில்தான் உலகக்கோப்பைக்குச் செல்லும்.

    ஆனால் இதுவெல்லாம் அவர்கள் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப, எப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.



    தொடர் இங்கிலாந்தில் எந்தமாதம் நடைபெறுகிறது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் உகந்ததாக இருக்காது.

    ஏராளமானோர் இங்கிலாந்து ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. புதுப்பந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், பந்து பொலிவை (Shine) இழந்துவிட்டால், வேகப்பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராட வேண்டும்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, தவான் இந்தியாவின் பேட்டிங் முதுகெலும்பாக இருப்பார்கள் என பிரெட் லீ தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா கேப்டனாகவும், தவான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, விராட் கோலி இல்லாத நிலையில் ரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘விராட் கோலி அணியில் இல்லாதபோது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணிக்கு கீ பேட்ஸ்மேனாக இருப்பார்கள். விராட் கோலி சிறப்பாக விளையாடுவார். அதேபோல் இந்திய அணியும் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். இந்திய அணியை வழிநடத்திச் செல்லும்போது ரோகித் சர்மாவிற்கு கூடுதலாக பொறுப்பு இருக்கும்’’ என்றார்.
    ×