என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WCL 2025"

    • அதிரடியாக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்களை குவித்தார்.
    • அதிரடி சதம் விளாசிய ஏபி டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார்.

    உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் - தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷர்ஜீல் கான் 76 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 16.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    அதிரடியாக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்களை குவித்தார். ஜேபி டுமினி 50 ரன்கள் அடித்தார்.

    அதிரடி சதம் விளாசிய ஏபி டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய விருதுகளை வென்று அசத்தினார்.

    • முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 186 ரன்கள் அடித்தது.
    • கடைசி பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில், ஆஸ்திரேலியா 1 ரன் மட்டுமே எடுத்தது.

    உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 2ஆவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ்- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 186 ரன்கள் குவித்தது. ஸ்மட்ஸ் 57 ரன்களும், மோர்னே வான் விக் 76 ரன்களும் விளாசினர்.

    பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. 19 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 173 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 20ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆஸ்திரேலியா சிக்ஸ் அடித்தது. முதல் ஐந்து பந்தில் 11 ரன்கள் அடித்தது, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 2ஆவது ரன்னுக்கு ஓடியபோது டி வில்லியர்ஸ் ரன்அவுட் (நாதன் கவுல்டர்-நைல்) ஆக்க தென்ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

    • லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.

    இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    முன்னதாக, இந்த தொடரில் ஒரு ஓவரில் பௌலர் ஒருவர் 18 பந்துகளை வீசிய வினோத சம்பவம் நடந்தது. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து ஆடிய பாகிஸ்தான் 7.5 ஓவர்கள் முடிவில் 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் தான் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஒரு ஓவரில் 18 பந்துகளை வீசினார். 8ஆவது ஓவரை வீசிய ஜான் ஹாஸ்டிங்ஸ், 12 வைடு பால், ஒரு நோ பால் உட்பட 18 பந்துகளை வீசினார். ஆனாலும் அந்த ஓவரை அவர் முழுமையாக முடிக்கவில்லை. 5 பந்துகள் மட்டுமே அவர் வீசியிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வைடு மூலமாகவே பாகிஸ்தான் அணியை அந்த ஓவரில் அவர் வெல்ல வைத்தார். 

    • இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம்.
    • நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம்.

    2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டி தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் சயித் அப்ரிடி தலைமையினான பாகிஸ்தான் அணியை பர்மிங்காமில் நேற்று சந்திக்க இருந்தது. ஆனால் இந்திய அணியின் ஷிகர் தவான் உள்ளிட்ட சில வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தை புறக்கணிப்பதாக போட்டி அமைப்பு குழுவினருக்கு ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

    பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதால் அந்த நாட்டை சேர்ந்த அணியினருடன் தங்களால் விளையாட முடியாது என்று மறுத்து விட்டனர். இதனால் நேற்று நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பு குழுவினர் அறிவித்தனர்.

    இந்நிலையில் இந்த தொடரில் விலகிய இந்தியா முடிந்தால் ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகுமா? என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சல்மான் பட் சவால் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் அவர்களைப் (இந்திய கிரிக்கெட் அணி) பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களுக்கும் என்ன செய்தியை அனுப்பியுள்ளனர்? அவர்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்? இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம். இதை ஒரு வாக்குறுதியாகக் கொடுங்கள். பாருங்கள், எல்லாவற்றுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    ஆனால் இப்போது நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம். ஒலிம்பிக்கில் கூட வேண்டாம். முடிந்தால் அதைச் செய்யுங்கள். நான் பார்க்க விரும்புகிறேன். இந்த முடிவை யார் எடுத்தார்கள்? வெறும் 4 - 5 இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவில்லை. அவர்களால் விளையாட விரும்பிய மற்ற இந்திய வீரர்களும் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். இதை இப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கான பதிலடிகளை நாங்கள் இந்தியாவுக்கு நினைவூட்டுவோம்.

    என்று சல்மான் பட் கூறினார்.

    • இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
    • நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தனர்.

    இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணி விளையாட மறுத்தனர்.

    ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றஞ்சாட்டி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது குறித்து பிரெட் லீ தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரெட் லீ கூறியதாவது:-

    நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள் தான் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் இங்கு கிரிக்கெட் தொடரில் விளையாட வந்துள்ளோம். நேற்று நடந்தது முடிந்து போன விஷயம். அதனால் இந்த தொடரில் அடுத்து என்ன என முன்னோக்கி பயணிக்க வேண்டியது அவசியம்.

    என கூறினார்.

    • பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 160 ரன்கள் சேர்த்தது.
    • இங்கிலாந்து அணியால் 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    லெஜண்ட் உலக சாம்பியன்ஷிப் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து சாம்பியன்ஸ்- இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 160 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹபீஸ் அதிகபட்சமாக 34 பந்தில் 54 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து சாம்பியன்ஸ் களம் இறங்கியது. வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த போதிலும், 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து தொடக்க வீரர் பில் முஸ்டார்ட் 58 ரன்கள் அடித்ார். இயன் பெல் 35 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    இனறு இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகளும், 2ஆவது போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ்- ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகளும் மோதுகின்றன.

    ×