என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    VIDEO: 18 பந்துகளை வீசியும் ஒரு ஓவரை முடிக்காத பவுலர் - லெஜண்ட் கிரிக்கெட்டில் நடந்த வினோத சம்பவம்
    X

    VIDEO: 18 பந்துகளை வீசியும் ஒரு ஓவரை முடிக்காத பவுலர் - லெஜண்ட் கிரிக்கெட்டில் நடந்த வினோத சம்பவம்

    • லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.

    இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    முன்னதாக, இந்த தொடரில் ஒரு ஓவரில் பௌலர் ஒருவர் 18 பந்துகளை வீசிய வினோத சம்பவம் நடந்தது. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து ஆடிய பாகிஸ்தான் 7.5 ஓவர்கள் முடிவில் 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் தான் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஒரு ஓவரில் 18 பந்துகளை வீசினார். 8ஆவது ஓவரை வீசிய ஜான் ஹாஸ்டிங்ஸ், 12 வைடு பால், ஒரு நோ பால் உட்பட 18 பந்துகளை வீசினார். ஆனாலும் அந்த ஓவரை அவர் முழுமையாக முடிக்கவில்லை. 5 பந்துகள் மட்டுமே அவர் வீசியிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வைடு மூலமாகவே பாகிஸ்தான் அணியை அந்த ஓவரில் அவர் வெல்ல வைத்தார்.

    Next Story
    ×