என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெஜண்ட்ஸ் கிரிக்கெட்"

    • லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.

    இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    முன்னதாக, இந்த தொடரில் ஒரு ஓவரில் பௌலர் ஒருவர் 18 பந்துகளை வீசிய வினோத சம்பவம் நடந்தது. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து ஆடிய பாகிஸ்தான் 7.5 ஓவர்கள் முடிவில் 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் தான் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஒரு ஓவரில் 18 பந்துகளை வீசினார். 8ஆவது ஓவரை வீசிய ஜான் ஹாஸ்டிங்ஸ், 12 வைடு பால், ஒரு நோ பால் உட்பட 18 பந்துகளை வீசினார். ஆனாலும் அந்த ஓவரை அவர் முழுமையாக முடிக்கவில்லை. 5 பந்துகள் மட்டுமே அவர் வீசியிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வைடு மூலமாகவே பாகிஸ்தான் அணியை அந்த ஓவரில் அவர் வெல்ல வைத்தார். 

    • இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
    • நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தனர்.

    இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணி விளையாட மறுத்தனர்.

    ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றஞ்சாட்டி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது குறித்து பிரெட் லீ தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரெட் லீ கூறியதாவது:-

    நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள் தான் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் இங்கு கிரிக்கெட் தொடரில் விளையாட வந்துள்ளோம். நேற்று நடந்தது முடிந்து போன விஷயம். அதனால் இந்த தொடரில் அடுத்து என்ன என முன்னோக்கி பயணிக்க வேண்டியது அவசியம்.

    என கூறினார்.

    • உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் உலக ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    கொல்கத்தா:

    லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது.

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதே போன்று அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். இதே போன்று முகமது கைப்பும் இந்திய மகாராஜா அணியில் இடம்பெற்றுள்ளார்.

    மேலும் இர்பான் பதான், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத், பார்த்தீவ் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் போன்ற அனுபவ வீரர்களும் ஆகியோரும் இந்திய மகாராஜா அணிக்காக விளையாட உள்ளனர்.

    கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா, அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங் மற்றும் ஜோகிந்தர் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களும் மகராஜா அணிக்காக விளையாடுகின்றனர். இந்த தொடரின் ஆணையராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி செயல்பட உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரவி சாஸ்திரியும், கங்குலியும் இணைந்துள்ளனர்.

    உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்திய மகாராஜா அணி விவரம்:-

    கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜோகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி

    உலக ஜெயிண்ட்ஸ் அணி விவரம்:-

    இயன் மார்கன்(கேப்டன்), சிம்மன்ஸ், கிப்ஸ், காலிஸ், ஜெயசூர்யா, மாட் பிராயர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரூட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகார்ட்சா, முர்த்தசா, அஸ்கார் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கேவின் ஓ பிரெயின், தினேஷ் ராம்டின்

    ×