search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee suicide"

    மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    அவனியாபுரம்:

    மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது30). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன.

    முத்துப்பாண்டி அடிக்கடி மது அருந்தியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பாண்டிச்செல்வி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    அவரை சமரசம் செய்து வீட்டுக்கு வரும்படி முத்துப் பாண்டி அழைத்தார். ஆனால் பாண்டிச்செல்வி வர மறுத்து விட்டாராம்.

    இதனால் மனவேதனை அடைந்து முத்துப்பாண்டி அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். பின்னர் சின்ன அனுப்பானடி சிந்தா மணி தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் மணிராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கருங்கல் அருகே குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    கருங்கல்:

    கருங்கலை அடுத்த பாலப்பள்ளம் ஈச்சன்வடலி விளை பகுதியை சேர்ந்தவர் ஐசக்ராஜ் (வயது 559. தொழிலாளி. இவர் குடித்து விட்டு ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த ஐசக்ராஜ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து கருங்கல போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் குருபாதம், (வயது54), கூலித்தொழிலாளி. இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கத்தினால் குருபாதத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்ற குருபாதத்தை இனிமேல் மதுகுடிக்க கூடாது டாக்டர்கள் அறிவுரை கூறியதோடு மீண்டும் மதுகுடித்தால் அது உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று எச்சரிக்கை செய்து இருந்தனர்.

    ஆனால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குருபாதம் மீண்டும் மதுகுடிக்க தொடங்கினார். நேற்று மதுகுடிக்க குருபாதம் தனது மனைவி பரமேஸ்வரியிடம் பணம் கேட்டார். ஆனால் பரமேஸ்வரி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் விரக்தி அடைந்த குருபாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நெய்வேலி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமம் தென்குந்தன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). தொழிலாளி.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊ.மங்களம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்தம்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுரேஷ் வயிற்று வலி காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கணவரை மனைவி கண்டித்ததால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் மாதேஸ்வரன் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 36). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை பிரியா கண்டித்தார். ஆனால் குமார் மது அருந்துவதை நிறுத்தவில்லை. நேற்றும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த குமார் அருகில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு சென்றார். அக்காள் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் நடந்த விழாவுக்கு சென்று விட்டனர். அங்கு சென்ற குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதேபோன்று அரியலூர் மாவட்டம் கள்ளக்குடியை சேர்ந்தவர் மதன் (19). இவர் பல்லடம் சின்னக்கரை பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தங்கி கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வெளியே வந்தார். மீண்டும் மதனை காணவில்லை.

    நேற்று கம்பெனியின் சமையல் அறையில் பார்த்தபோது மதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அச்சம்புதூர் மற்றும் ஊத்துமலையில் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அச்சம்புதூரை சேர்ந்தவர் கருணாச்சல பாண்டி (வயது 34).  தொழிலாளி. கடந்த சில மாதங்களாக இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக தெரிகிறது.  

     இந்நிலையில் நேற்று இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி மாரிதுரைச்சி புகாரின்பேரில் அச்சம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துமலையை சேர்ந்தவர் முருகையா(53). தொழிலாளி. இவர் நேற்று தோட்டத்து வேலைக்கு சென்றார்.  திடீரென அங்குள்ள கிணற்று கல்லில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரெட்டியார்பாளையத்தில் நோய்க்கொடுமையால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் கம்பன்நகர் 7-வது குறுக்குதெருவில் உள்ள தனியார் அப்பார்ட் மெண்டில் வசித்து வந்தவர் பாலச்சந்திரன் (வயது50), கூலித்தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    பாலச்சந்திரன் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று பாலச்சந்திரனின் மனைவி விஜயலட்சுமி கும்பகோணம் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது நோய்க்கொடுமை அதிகமானதால் விரக்தி அடைந்த பாலச்சந்திரன் வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகப்பன் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் புதுவை கோவிந்தசாலை ராஜீவ்காந்தி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது42). டெய்லரான இவர் காண்டிராக்டு அடிப்படையில் துணிக்கடைகளுக்கு ரெடிமேடு ஆடைகளை தயாரித்து கொடுத்து வந்தார். இவருக்கு உதவியாக அவரது மனைவி ரோசியும் தையல் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

    இதற்கிடையே ரெடிமேடு ஆடைகள் தயாரித்து கொடுத்த கடையில் பணம் தராததால் கணவன்-மனைவிக்கிடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்தது. நேற்றும் இதுதொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சார்லஸ் வீட்டில் இருந்த கரையான் பூச்சி கொல்லி மருந்தை (வி‌ஷம்) எடுத்து குடித்து விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த சார்லசை அவரது மனைவி ரோசி மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×