என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே தொழிலாளி தற்கொலை
    X

    வில்லியனூர் அருகே தொழிலாளி தற்கொலை

    வில்லியனூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் குருபாதம், (வயது54), கூலித்தொழிலாளி. இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கத்தினால் குருபாதத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்ற குருபாதத்தை இனிமேல் மதுகுடிக்க கூடாது டாக்டர்கள் அறிவுரை கூறியதோடு மீண்டும் மதுகுடித்தால் அது உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று எச்சரிக்கை செய்து இருந்தனர்.

    ஆனால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குருபாதம் மீண்டும் மதுகுடிக்க தொடங்கினார். நேற்று மதுகுடிக்க குருபாதம் தனது மனைவி பரமேஸ்வரியிடம் பணம் கேட்டார். ஆனால் பரமேஸ்வரி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் விரக்தி அடைந்த குருபாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×