search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg"

    • முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்கிறது.
    • முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்கிறது.

    அதன்படி நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டையின் விலை 460 காசிலிருந்து 465 காசாக உயர்ந்தது.

    நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 101 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 103 ரூபாயாக உயர்ந்தது. முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 77 ரூபாயாக நீடிக்கிறது.

    • கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த உப்புரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்.இவர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் முட்டை கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முட்டை கடையின் முதல் மாடியில் உள்ள பேனர் கடையின் செல்போன் நம்பர் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.மேலும் சேவியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனை சேவியர் கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அரிவாளுடன் முட்டை கடைக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த முட்டைகளை அரிவாளால் வெட்டி உடைத்து வெளியே வீசினர். சுமார் 2 ஆயிரம் முட்டைகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனை கண்ட கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து சேவியர் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்து முட்டை கடையை சூறையாடி தப்பிய ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏலியம்பேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது 6 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பி ஓடிய மற்றவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் புதிய பஸ் நிலையம் தேரடி தெருவில் மர்மகும்பல் கத்தியுடன் 4 கடைகளை அடித்து சூறையாடினர். ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். ரவுடிகள் குறித்து போலீசாரிடம் புகார் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • கடந்த 30-ந்தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • கடந்த ஜூலை 1-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த 30-ந்தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. கடந்த ஜூலை 1-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆனது, 2-ந் தேதி மீண்டும் 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 3-ந்தேதி மேலும் 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.20 ஆனது. 4-ந் தேதி மீண்டும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இன்று அதிரடியாக 30 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 80 பைசா விலை சரிவு ஏற்பட்டதால் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால், தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகும் நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணை தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-560, பர்வாலா-421, பெங்களூரு-540, டெல்லி-465, ஹைதராபாத்-470, மும்பை-560, மைசூர்-570, விஜயவாடா-450, ஹொஸ்பேட்-500, கொல்கத்தா-520.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 108 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 50 பைசா விலை சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 30-ம் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது. 1-ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.5.40 ஆனது. 2-ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.30 ஆனது.

    இதேபோல் 3-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை 5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 50 பைசா விலை சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-

    சென்னை-580, பர்வாலா-446, பெங்களூரு-580, டெல்லி-492, ஹைதராபாத்-500, மும்பை-585, மைசூர்-580, விஜயவாடா-500, ஹொஸ்பேட்-540, கொல்கத்தா-540. பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.108 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. மேலும் முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக நிர்ணயித்துள்ளது.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • கடந்த 30-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில், 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என். இ.சி.சி.), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. கடந்த 30-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 1-ந் தேதி மீண்டும் 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் முட்டை விலை 20 காசுகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-600, பர்வாலா-473, பெங்களூர்-580, டெல்லி-492, ஹைதரா பாத்-540, மும்பை-605, மைசூர்-600, விஜயவாடா-535, ஹொஸ்பேட்-560, கொல்கத்தா-565.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 120 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ.97 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • அடைகாக்கும் போது அதன் முட்டைகள் மீது யாராவது கை வைத்தால் ஆக்ரோஷமாகிவிடும்.
    • மலைப்பாம்பின் அருகே ஏராளமான முட்டைகள் இருப்பதை காண முடிகிறது.

    எல்லா உயிர்களும் தனது குட்டிகளை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சாதாரணமாக முட்டையிடும் இனங்கள் அதை அடைகாக்கும் போது அதன் முட்டைகள் மீது யாராவது கை வைத்தால் ஆக்ரோஷமாகிவிடும். அவ்வாறு ஜேப்ரூவர் என்ற உயிரியல் பூங்கா காப்பாளர் தனது பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ராட்சத மலைப்பாம்பு அருகே செல்கிறார்.

    அந்த மலைப்பாம்பின் அருகே ஏராளமான முட்டைகள் இருப்பதை காண முடிகிறது. அதில், ஒரு முட்டையை ஜேப்ரூவர் எடுக்க முயலும் போது மலைப்பாம்பு கோபம் அடைந்து அந்த காப்பாளரை நோக்கி சீறுவது போலவும், அவரின் தொப்பியை கொத்த முயற்சிப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ 5.54 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் மலைப்பாம்புவை லாவகமாக கையாளும் காப்பாளரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ. 6.50 வரை விற்கப்படுகிறது.
    • கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.143, முட்டை கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதனால் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக உயர்ந்தது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ. 6.50 வரை விற்கப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 8 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்றவை முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.143, முட்டை கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    • முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான விலை நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது, அதன்படி 530 காசுகளாக இருந்த முட்டை விலை 535 காசுகளாக உயர்ந்தது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பண்ணை கொள்முதல் விலை ரூ.143-யாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோல முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.95-யாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    • நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பல்லடத்தில் நடந்தது. இதில் கறி கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 6 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 129 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை கிலோ 135 ஆக உயர்ந்தது.

    இதேபோல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 97 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 94 ரூபாயாக சரிந்தது.

    நாமக்கல்லில் நடந்த முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், முட்டை உற்பத்தி மற்றும் முட்டைகளின் தேவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 515 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    • கோழி தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் முட்டை பண்ணையாளர்கள் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.
    • முட்டை விற்பனை மைனஸ் 40 பைசா என இன்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தற்போது முட்டை விலை 450 காசுகளாக உள்ளது. சமீப காலமாக கோழி தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் முட்டை பண்ணையாளர்கள் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முட்டை விற்பனை மைனஸ் 40 பைசா என இன்று நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 40 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அவ்வாறு எவரேனும் 40 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    • ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் 16 கலோரி உள்ளது.
    • வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

    முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உள்ளன. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் 16 கலோரி உள்ளது. அதில் கொழுப்பு இல்லை. ஆனாலும் வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிடும்போது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், தும்மல், மூச்சுத்திணறல், சருமத்தில் தடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

    கோழிகளின் உடலில் காணப்படும் சால்மோனெல்லா எனும் பாக்டீரியாவால் முட்டையின் வெண் படலத்திற்கு தீங்கு நேரலாம். அந்த பாக்டீரியா முட்டை ஓடுகளின் உள்புற மற்றும் வெளிப்புற பரப்புகளில் படர்ந்திருக்கலாம். சால்மோனெல்லாவை நீக்குவதற்கு நீண்ட நேரம் மற்றும் அதிக வெப்பநிலையில் வேகவைக்க வேண்டும். இல்லாவிட்டால் முட்டையின் மேல் பகுதியிலும், குறைவான வெப்பநிலையில் வேகவைத்த முட்டைகளிலும் அந்த பாக்டீரியாக்கள் படிந்திருக்கும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

    முட்டையின் வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பயோட்டின் குறைபாடும் ஏற்படலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் அவிடின் எனும் புரதம் உடலில் உள்ள பயோட்டினை கரைத்துவிடும். அதில் உள்ள அல்புமின், உடலில் உள்ள பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக சரும பிரச்சினைகள் ஏற்படலாம்.

    முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள் அதிகம் உள்ளன. மருத்துவர்களின் கருத்துப்படி, சிறுநீரக பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அதிக அளவு புரதம் சாப்பிடுவது ஆபத்தானது. சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 0.6 முதல் 0.8 கிராம் வரையிலான புரதத்தையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் தினமும் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கலாம். கல்லீரல் பாதிப்பு கொண்டவர்கள் வெள்ளைக்கருவை தவிர்க்கலாம்.

    • சுமார் 6 மணி நேரம் கோழி முட்டை போட்டபடி இருந்தது. மொத்தம் 24 முட்டைகள் போட்டது.
    • 24 முட்டை போட்ட கோழியை அந்த பகுதி மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன.

    ஆலப்புழாவை அடுத்த புன்னம்புறாவை சேர்ந்த பிஜூ என்பவர் இங்கு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

    அங்கு கலப்பின கோழிகளை வளர்த்து வந்தார். இவரது பண்ணையில் சுமார் 25 கோழிகள் உள்ளன.

    நேற்று காலையில் பிஜூ, பண்ணையில் உள்ள கோழிகளை பார்வையிட்டார். அப்போது ஒரு கோழி வித்தியாசமாக மண்ணை நோண்டிக்கொண்டிருந்தது. அதன் அருகில் சென்ற பிஜூ, அந்த கோழியின் காலில் எண்ணை தடவி விட்டார்.

    சிறிது நேரத்தில் அந்த கோழி, தான் தோண்டிய மண்ணுக்குள் முட்டை இட தொடங்கியது. காலை 8.30 மணிக்கு முதல் முட்டை போட்டது. அதன்பின்பு சிறிது நேரத்திற்கு ஒரு முறை முட்டை போட்டபடி இருந்தது.

    இதை கண்டு ஆச்சரியமடைந்த பிஜூ, அந்த கோழியை கண்காணித்தபடி இருந்தார். மதியம் 12.30 வரை சுமார் 6 மணி நேரம் அந்த கோழி முட்டை போட்டபடி இருந்தது. மொத்தம் 24 முட்டைகள் போட்டது. அதன்பின்பு அந்த கோழி முட்டை போடுவதை நிறுத்தி கொண்டது.

    இதை கண்டு ஆச்சரியம் அடைந்த பிஜூ, இந்த தகவலை கால்நடை மருத்துவ பல்கலை கழக அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அங்கிருந்து கோழி மற்றும் வாத்து பராமரிப்பு துறை உதவி பேராசிரியர் பினோஜ் சாக்கோ, கோழிப்பண்ணைக்கு சென்றார்.

    அங்கு 24 முட்டைகள் போட்ட கோழியை ஆய்வு செய்தார். அதுபோட்ட முட்டைகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, இது அரிதிலும் அரிதான சம்பவம். கோழிக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தொடர்ந்து முட்டை போட்டிருக்கலாம் என கருதுகிறேன். என்றாலும் கோழியை அறிவியல் ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பின்பே 24 முட்டை போட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்க முடியும், என்றார். 24 முட்டை போட்ட கோழியை அந்த பகுதி மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    ×