நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ. 6.50 வரை விற்கப்படுகிறது. கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.143, முட்டை கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதனால் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக உயர்ந்தது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ. 6.50 வரை விற்கப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 8 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்றவை முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.143, முட்டை கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com