search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "distribution"

    • முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடியேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • மின்மோட்டார் பம்பு பழுது, நீரேற்று குழாய் கசிவு ஏற்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாது என நகராட்சி ஆணையர் ஏ.சங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின்கீழ் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடியேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது, தலைமை குடிநீரேற்று நிலைய மின்மோட்டார் பம்பு பழுது, நீரேற்று குழாய் கசிவு ஏற்பட்டுள்ளதால் நாளையும் (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    எனவே நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை மின்வினியோம் தடை செய்யப்படுகிறது.

    திருப்பூர், செப்.19-

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஆர்.சபரிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருப்பூர் வஞ்சிபாளையம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வலையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிபாளையம், 15வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இதம்பாடல், ஏர்வாடியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
    • துண்டு பிரசுரங்களை சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார் .

    சாயல்குடி

    சாயல்குடி அருகே இதம்பாடல், ஏர்வாடி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் ராஜ கண்ணப் பன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் ஆலோசனையின் படி சாயல்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மகளிர் உரிமை தொகை தொடர்பான துண்டு பிரசுரங்களை சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார் .

    இந்நிகழ்ச்சியில் இதம் பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்களசாமி, சாயல்குடி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம், மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, கிளைச் செயலாளர் காதர் பாட்ஷா, இளைஞர் அணி பால முருகன், முத்து ராஜா, காதர், நீலமேகம், சாதிக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங் கோவன், முன்னாள் ஒன்றிய துணை தலைவர் ராம கிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    ஊத்துக்குளி,செப்.17-

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ். வி.ஜி.புதூா், ரெட்டியபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாளையம், மொரட்டு ப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலவு, வயக்காட்டு புதூா் மற்றும் ஏ.கத்தாங்கன்னி.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை.

    • நாளை 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பழ.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கருவலூர் துணை மின் நிலையத்தில் நாளை 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை மின் நிலையத்தில் நாளை 13ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    உடுமலை,செப்.12-

    உடுமலை அடுத்த தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் நாளை 13ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மின்தடை செய்யப்படக்கூடிய இடங்கள் வருமாறு:- தேவனூர் புதூர் ,கரட்டூர், செல்லப்பம்பாளையம், ராவணாபுரம் ,ஆண்டியூர். பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம் , வலையபாளையம் .எஸ் .நல்லூர் ,அர்த்தநாரி பாளையம் , புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    அவிநாசி:

    பெருமாநல்லூா், செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    செங்கப்பள்ளி, ஜோதி நகா், சரவண நகா், ப்யூா் டிராப் கம்பெனி பகுதி, கேபிஆா் மில் பகுதி, கருடா நகா்.

    பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில்நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டி பாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, மற்றும் உகாயனூா்.

    • 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளை யாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் விளையாட்டு வீரர்களின் 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்கள் நல சங்கத் தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கோவிந்த ராஜ், பாடி பில்டர் பிரகதீஸ், மால்கம் கணேஷ் , கூடோ சந்தோஷ், அசோக், வெங்கடாஜலபதி, சிலம்பம் அன்பு நிலவன், சமூக ஆர்வலர்கள் கோகுல் காந்தி, வீரபாரதி, சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு புதுவை அரசு விளையாட்டு வீரர்களை புறக்கணித்து வரும் செயல்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    மேலும் நிகழ்ச்சியில் ஆறுமுகம் ,ரமேஷ், பிரவீன் உள்ளிட்ட ஏராளமான விளை யாட்டு சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சதீஷ் வர வேற்றார். முடிவில் செந்தில் வேல் நன்றி கூறினார்.

    • தஞ்சாவூா் நீதிமன்ற சாலையில் உள்ள நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் நாளை (செவ்வாய் கிழமை) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் கருப்பையா தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையில் உள்ள நகரத் துணை மின் நிலையத்திலும், மின் பாதையிலும் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    இதனால், மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், திருநகா், ஆண்டாள் நகா், சிங்கபெருமாள் குளம், விக்னேஷ்வர நகா், உமா சிவன் நகா், வெங்கடாசலபதி நகா், பி.ஆா். நகா், ஜெபமா லைபுரம், சுந்தரபாண்டியன் நகா், டி.சி.டபிள்யூ.எஸ். காலனி, களிமேடு மூன்று மற்றும் நான்காம் பகுதிகள், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்த பிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோவில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கம் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம், வ.உ.சி. நகா், சிறுவா் சீா்திருத்தப் பள்ளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பசுமை உரம் வினியோகம் தொடங்கியது.
    • உத–ய–கு–மார், சர–வண–கு–மார் உள்–பட பலர் கலந்து ெகாண்–டனர்.

    கீழக்–கரை

    கீழக்–கரை நக–ராட்–சிக்கு உட்–பட்ட 21 வார்–டு–க–ளி–லும் தின–சரி சேக–ரிக்–கும் குப்–பை–கள் பள்–ள–ேமார்–கு–ளம் நுண் உர–மாக்–கும் ைமயத்–தில் இயற்ைக உர–மாக மாற–றப்–பட்டு வரு–கிறது. அதில் இருந்து தயா–ரிக்–கப்–பட்ட இயற்கை உரம், ேவளாண்மை துைற–யின் மூலம் ெசழிப்பு என்ற ெபய–ரில் வினி–ேயா–கம் செய்ய உரி–மம் ெபறப்–பட்டு நக–ராட்சி அலு–வ–ல–கத்–தில் இயற்ைக உரம் வினி–யோக ெதாடக்க நிகழ்ச்சி நடந்தது.

    3 கிேலா எடை ெகாண்ட உரம் நூற்றுக்கும் ேமற்–பட்ட ெபாது–மக்–க–ளுக்கு இல–வ–சமாக வழங்–கப்–பட்–டது. ேமலும், தின–மும் நக–ராட்–சி–யில் 3 கிேலா எைட ெகாண்ட உரம் ரூ.20-க்கு விற்பைன ெசய்–யப்–படும் என்று நக–ராட்சி ஆணை–யர் செல்வராஜ் ெதரி–வித்–துள்–ளார்.

    இந்–நி–கழ்ச்–சிைய நகர்–மன்ற தலை–வர் ெசஹா–னாஸ் ஆபிதா ெதாடங்கி ைவத்–தார். நக–ராட்சி சுகா–தார ஆய்–வாளர் பரக்–கத்–துல்லா, 4-வது வார்டு கவுன்–சி–லர் சூரி–ய–கலா, 7-வது வார்டு கவுன்–சி–லர் மீரான் அலி, நக–ராட்சி பணி ேமற்–பார்–ைவ–யா–ளர் ெசந்–தில்–கு–மார், இள–நிைல உத–வி–யா–ளர்–கள் தமிழ்–ெசல்–வன், உத–ய–கு–மார், சர–வண–கு–மார் உள்–பட பலர் கலந்து ெகாண்–ட–னர்.

    • நாளை 24-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
    • 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்ட மங்கலம் 110/22 கி.வோ. குமளம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 24-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் பண்ணக்குப்பம், ஆழியூர், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், சேஷாங்கனூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், குறான்பாளையம், ஆண்டிபாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை துறை மூலம் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய 50 சதவீதம் மானிய விலையில் சோளம் -கோ-32, நிலக்கடலை -கதிரிலெப்பாக்ஸி-1812, பிஎஸ்ஆர்-2, உளுந்து வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10 ஆகிய சான்று விதைகள் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா மற்றும் ஆதார் அட்டை விவரங்களுடன் பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.

    ×