கண்டமங்கலத்தில் நாளை மின் நிறுத்தம்

நாளை 24-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.
கண்டமங்கலத்தில் நாளை மின் நிறுத்தம்
Published on

விழுப்புரம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்ட மங்கலம் 110/22 கி.வோ. குமளம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 24-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் பண்ணக்குப்பம், ஆழியூர், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், சேஷாங்கனூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், குறான்பாளையம், ஆண்டிபாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com