search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DIMITHI FESTIVAL"

    • திரவுபதி அம்மன் கோவிலில் சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே கொண்டல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் அம்பாள் திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.

    அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    அப்போது ஏராளமான பக்தர்கள் சாட்டையடி பெற்று சென்றனர்.

    • 40 ஆண்டுக்குப் பிறகு கோவில் திருவிழா இந்தாண்டு கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரும்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த திரவுபதி யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மகாபாரத கதையை மையமாக வைத்து 18 நாட்கள் திருவிழா நடை பெறும். 40. ஆண்டுக்குப் பிறகு கோவில் திருவிழா இந்தாண்டு கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்புபூஜைகள், தெருகூத்து, இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை, இன்னிசையுடன், இரவில் சாமி திருவீதி உலா மற்றும் பக்காசூரன் திருவிழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 5 மணிக்கு அரவாண்வீதியுலா, மதியம் 12 மணி வரை மகாபாரத பஞ்சபாண்டவர்கள்வர்கள் கதையை மையமாக கொண்ட மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3 மணியளவில் அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சிகளும் நடந்ததது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு திமீதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப் பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதன் பிறகு அம்மனுக்கு நடந்த மகாதீபாராதனையிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் நாளை தர்மர் பட்டாபிஷேகம் நடை பெறுகிறது. 40 ஆண்டுக்கு பிறகு இந்த திருவிழா நடை பெறுவது குறிப்பிடத்தக்கது.

    • திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • தர்மர் பிறப்பு, திரவுபதி பிறப்பு உள்ளிட்ட கதை பாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழபெரம்பூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு திருவிழா சித்திரை மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அல்லி திருமணம், தர்மர் பிறப்பு , திரவுபதி பிறப்பு உள்ளிட்ட கதை பாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான படுகள நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சாமி வீதியுலா, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கீழபெரம்பூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
    • 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தா னத்திற்கு உட்பட்ட, பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதித் திருவிழா, கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பி க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மல ர்களால் அலங்கரிக்கப்பட்ட மழை மாரியம்மன் கோவிலில் பிரகாரத்தை வலம் தீமிதி திருவிழா நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவில் தொகுதி எம்.எல்.ஏ.நாக.தியாகராஜன், பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருக்கனுாரை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புதுச்சேரி:

    திருக்கனுாரை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி முத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடந்தது. கடந்த 28-ந் தேதி திரவுபதியம்மன், அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இரவு 9 மணிக்கு முத்து பல்லக்கில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இன்று 30-ம் தேதி மாலை 6 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் அம்மன் மடவிளாக வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதி த்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்தி னர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமித்தித்திருவிழா, கடந்த ஏப்ரல் 30-ந் தேதி பூச்செரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதா னம் மற்றும் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் அம்மன் மடவிளாக வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி யுலா வரும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நடை பெற்ற திமிதித்திரு விழா வில், 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதி த்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்தி னர். விழாவில், புதுச்சேரி போக்குவ ரத்துறை அமை ச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் வடக்கு த்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாலையில் தீமிதி விழா நடைபெற்றது
    • ஏராளமானோர் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்நகர் கிராமத்தில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் கடந்த மாதம் 30-ம்தேதி அலகு நிறுத்தி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் பிற்பகல் 2 மணி அளவில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 6ம்தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகங்கள் நடைபெற்று வந்தது.

    பின்னர் கடந்த 17-ந் தேதி காலை கோயில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் வருகைதந்து தந்து அம்மனை தரிசனம் செய்தார்.கோயில் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராணிதண்டபாணி சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    நேற்று தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது.
    • நாளை மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் வில்வராய நத்தத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறு வது வழக்கம். தீமிதி திருவிழா பிரம்மோற்சவ விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வந்தது. நேற்று முக்கிய விழாவான திருக்கல்யாணம உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத் தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து வில் வளைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் 21 சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் அடங்கிய வரிசை தட்டு மற்றும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளர் அருணாச சலம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் இளைஞர்கள், விழா குழுவினர் கலந்து கொண்ட னர்.

    இன்று (18 ந்தேதி) மாலை அர்ஜுனன் தபசு, விசேஷ சாந்தி, சாமி வீதி உலா, கரகத் திருவிழா நடைபெறுகிறது. நாளை (19 ந்தேதி) பிரம்ம உற்சவத்தின் சிகர விழாவான தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காலையில் அரவான் புறப்பாடு, வீர மாங்காளி புறப்பாடு உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது. விழாவிற்கு அய்யப்பன் எம். எல்.ஏ , 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கு கிறார்கள். கூட்டு றவுத்துறை தனி அதிகாரி கிருஷ்ணராஜ், மகாலட்சுமி கல்வி நிறுவன உரிமையாளர் ரவி ஆகி யோர் கலந்து கொள்கிறார் கள். தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடு களை விழா குழு தலைவரும், ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளருமான அருணாச்சலம், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.
    • சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலாவாக வந்து தீக்குழி நடைபெற்ற இடத்தின் முன்பு நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 24ந் தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பகாசூர வதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதில் சுற்று பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதனையொட்டி திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா, வான வேடிக்கை யுடன் நடைபெற்றது.

    • வருகிற 23-ந் தேதி நடக்கிறது
    • வசந்த விழாசிறப்பு பூஜையுடன் தொடங்கியது

    கண்ணமங்கலம்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மவான்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    இதைமுன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அலகு நிறுத்தி தினமும் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

    14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணமும், 23- ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடக்கிறது.

    24-ந்தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டம் திருதெளிச்சேரி எனும் தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டுதோறும் சித்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொ டங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான நேற்று மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்ன தாக சந்தன காப்பு அல ங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் தங்க மாரிய ம்மனுக்கும் உற்சவருக்கும் மகா தீபாரா தனை காட்டப்பட்டது. தீக்குளி அருகே தங்க மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர். தீமிதியின் போது வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் கோவில் அறங்காவல் குழுவினர்கள், ஊர் பொது நல சங்கம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×