search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் திருபப்பட்டினம்  மழை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    பக்தர்கள் தீமிதி நேர்த்திக்கடன்  செலுவதை படத்தில் காணலாம்.

    காரைக்கால் திருபப்பட்டினம் மழை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
    • 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தா னத்திற்கு உட்பட்ட, பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதித் திருவிழா, கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பி க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மல ர்களால் அலங்கரிக்கப்பட்ட மழை மாரியம்மன் கோவிலில் பிரகாரத்தை வலம் தீமிதி திருவிழா நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவில் தொகுதி எம்.எல்.ஏ.நாக.தியாகராஜன், பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×