search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cricket match"

    • போட்டியில் எட்டையாபுரம்,கோவில்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள குருமலை கிராமத்தில் பைரைட்ஸ் கிரிக்கெட் டீம் மற்றும் கிருஷ்ணா வித்தியாலயம் இனைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டி கயத்தாறு அருகே உள்ள குருமலை குராமத்தில் நடைபெற்றது. போட்டியினை தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார். போட்டியில் எட்டையாபுரம், தோனுகால், சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

    முதல் பரிசை மேட்டுப்பட்டி அணியும், 2-வது பரிசை குருமலை அணியும், 3-வது பரிசை கோவில்பட்டி சிக்சாக் அணி பெற்றது. பின்னர் அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பால்ராஜ், குருமலை கிளைச் செயலாளர் கருப்பசாமி, ஊர் நாட்டாண்மை சேகர், பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் மற்றும் அருள் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாண்டமங்கலம் பி.சி.எப் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
    • பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணைத் தலைவரும், பேரூர் நகர செயலாளருமான பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பி.சி.எப் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    கிரிக்கெட் போட்டியை கபிலர்மலை தி.மு.க ஒன்றிய செயலாளரும், அட்மாகுழு தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான சண்முகம், பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணைத் தலைவரும், பேரூர் நகர செயலாள ருமான பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், பேரூர் தி.மு.க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர். 

    • புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்ஹர்ஷவர்தன் 4-ம் பரிசையும் வழங்கினர்.
    • ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் ஆகியோர் வழங்கினர்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி திருபு வனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ் தலைமையில் கிரிக்கெட் போட்டி மதகடிப்பட்டு அரசு கலைஞர் கருணாநிதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் திருபு வனை தொகுதிக்கு உட்பட்ட 14 அணிகள் போட்டியில் பங்கு பெற்றன. அதில் முதல் பரிசை ஆண்டியார் பாளையம் ராஜா கிரிக்கெட் கிளப்பும், 2-ம் பரிசை திருபுவனை பாளையம் பகுதியை சேர்ந்தகிரிக்கெட் கிளப்பும் , 3-ம் பரிசை கலிதீர்த்தாள் குப்பம் மின்னல் கிரிக்கெட் கிளப் அணியினரும் , 4-ம் பரிசை ஆண்டியார் பாளையம் ஸ்பார்டன் கிரிக்கெட் கிளப் அணியினர் பெற்றனர்.

    இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுவை காங்கிரஸ் கட்சியின்மாநில பொதுச் செயலாளர் சங்கர் முதல் பரிசையும் ,காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் கோனேரி லோகையன் 2-ம் பரிசையும், புதுவை மாநிலஇளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் கல்யாண சுந்தரம் 3-ம் பரிசையும் , புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்ஹர்ஷவர்தன் 4-ம் பரிசையும் வழங்கினர்.

    இப்போட்டியில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்க ளுக்கு புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் ராஜாராம் சீருடைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பைகளை மாநில இளைஞர் காங்கிரஸ்பொதுச் செயலாளர் தேவகுமார் , இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் செல்வப்பிரியன் , ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் ஆகியோர் வழங்கினர்.

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்கள்

    ஆற்காடு:

    ஆற்காடு ஜி.வி.சி பள்ளியில் நடைபெற்ற பசுமைக்கான கிரிக்கெட் போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி டாஸ் போட்டு தொடங்கி வைத்தனர். விளையாட்டு வீரர்களுக்கு மரங்கன்றுகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ஆற்காடு நகர துணை சேர்மன் பளவக்கோடி சரவணன், பள்ளி நிர்வாக செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, நிர்வாகிகள் பரமசிவம், சரவணன், கிஷோர், ஆனந்தன், அற க்கட்டளை நிறுவனதலைவர் கோபிநாத் அனைவரையும் வரவேற்றனர். ஆற்காடு நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்கள்.

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஊழியர்களுக்கிடையேயான கிரிக்கெட் லீக் போட்டி தொடங்கியது.
    • 12ஒவர் கிரிக்கெட் போட்டியில் ஷீல்ட் மற்றும் நைட்ஸ் அணிகள் மோதுகிறது.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஊழியர்களுக்கிடையேயான கிரிக்கெட் லீக் போட்டி தொடங்கியது.

    பிம்ஸ் மருத்துவமனை மனித வளத்துறை முதுநிலை மேலாளர் மதுசூதனன், மேலாளர் அமிர்தா முன்னிலை வகித்தனர்.கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடையை உடற் கல்வி துறை இணை பேராசிரியர் டாக்டர் பிரசன்னா, மார்க்கெட்டிங் மானேஜர் கோகுல் வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் கலந்து கொண்டுபோட்டியை தொடங்கி வைத்தார்.

    நடைபெறும் 12ஒவர் கிரிக்கெட் போட்டியில் ஷீல்ட் மற்றும் நைட்ஸ் அணிகள் மோதுகிறது.

    தொடர்ந்து கிங்க்ஸ், வாரியர்ஸ், டைட்டன்ஸ் ,ஜாகுவார், உள்ளிட்ட 6அணிகள் மோதுகிறது.இன்று தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை அரை இறுதி சுற்று நடைபெறுகிறது. இறுதி சுற்று வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

    வெற்றி பெறும் அணிக்கு ரொக்க பரிசு மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையுடன் சான்றிதழை கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் வழங்குகிறார்.

    • நீலகிரி ஓட்டல் ரெஸ்டாரண்ட் அசோசிசன் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
    • இறுதி போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் சர்வதேச பள்ளி விளையாட்டு மைதானத்தில் நீலகிரி ஓட்டல் ரெஸ்டாரண்ட் அசோசிசன் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்சியில் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் முன்னாள் தலைவர் முரளிகுமார் கொடியேற்றினார். பிரித்தி கிளாசிக்டவர் மேலாளர் ரசூல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்சியில் தாஜ், சலிவன்கோர்ட், ஜெம்பார்க், பிரித்திகிளாசிக்டவர், ஸ்டர்லிங், குல்னிமேனர், சன்சைன் உள்ளிட்ட 12 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டது. இதன் இறுதி போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. நிகழ்சியயை செல்வம், கனேஷ், சதிஷ், பிராங்களின் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    • 24 அரசு பள்ளி அணிகள் பங்கேற்பு
    • மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தொடங்கி வைத்தார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை-2022-23 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    கிரிக்கெட் போட்டிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திருப்பத்தூர் பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

    மாவட்ட முழுவதும் இருந்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அரசு பள்ளிகள் சார்பில் 24 அணிகள் பங்கேற்றது போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் வி.குணசுந்தரி தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வி சேதுராஜன், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்க பொறுப்பாளர் அன்பரசன், திருப்பத்தூர் மாவட்டம் கிரிக்கெட் விளையாட்டு சங்க தலைவர் ஏ.சுந்தர், உட்பட அரசுபள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போட்டிகள் வியாழக்கிழமை இன்று அரசுபள்ளி மாணவர்களுக்கும் அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது இந்த கிரிக்கெட் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு தேவையான பேட் கிரிக்கெட் பந்து, ஹெல்மெட் உள்ளிட்ட வைகள் வழங்கப்படுகிறது பதினோரு பிரிவுகளில் வெற்றி பெறும் அணிகளில் உள்ள அனைவருக்கும் முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 2-வது பரிசாக அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம், 3-வது பரிசாக அனைவருக்கும் ரூ 1000, வழங்கப்பட்டு உள்ளது இது மட்டும் இன்றி மாணவிகளுக்கும் மற்றும் பொது பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் இதே போன்று வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    • புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கியது.
    • முதல் பரிசு கோப்பையுடன் ரூ.50ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும், 2-ம் பரிசு கோப்பையுடன் ரூ.30ஆயிரம், 3-ம் பரிசு கோப்பையுடன் ரூ.20ஆயிரம், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 5-ம் பரிசு ரூ.5ஆயிரம் முறையே வழங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கியது.

    போட்டியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏக்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கிரிக்கெட் போட்டி நேற்று இரவு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முதல் பரிசு கோப்பையுடன் ரூ.50ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும், 2-ம் பரிசு கோப்பையுடன் ரூ.30ஆயிரம், 3-ம் பரிசு கோப்பையுடன் ரூ.20ஆயிரம், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 5-ம் பரிசு ரூ.5ஆயிரம் முறையே வழங்கப்பட உள்ளது. விளையாட்டில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    கிரிக்கெட் தொடக்க விழா நிகழ்ச்சியில், பா.ஜனதா இளைஞரணி துணைத் தலைவர்கள் உமாசங்கர், ராக் பெடரிக், மாநில செயலாளர்கள் அஸ்வின்குமார், அமல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் மாநில வணிகர் பிரிவு இணை அமைப்பாளர் சீனிவாசப்பெருமாள், ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், பிரண்ட்ஸ் மொபைல் சரவணன், ஆனந்த கண்ணன், பிரபுதாஸ், லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பில்லர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிலிக்கல்பாளையம் பில்லர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்கு முதல் பரிசாக ரூ.15,012, வேலாயுதம்பாளையம் எஸ்.எஸ்.பாண்டியன் அணிக்கு 2-ம் பரிசாக ரூ.10,012, வெங்கரை பெப்சி அணிக்கு 3-ம் பரிசாக ரூ.7,012, கொடுமுடி கே.எம்.டி அணிக்கு 4-ம் பரிசாக ரூ.5,012 வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமலிங்கம், தீபா மற்றும் வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி பிரதிநிதிகள், பில்லர்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக செமினார் அரங்கில் நடந்தது. 31 அணிகள் 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.இதில் ஏ-பிரிவில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் புராடக்ட் கோவிலூர் அணி முதலிடத்தையும், லத்தீப் மெமோரியல் அணி 2-ம் இடத்தையும் வென்றது. பி-பிரிவில் தேவகோட்டை ஜூனியர்ஸ் அணி முதலிடத்தையும், சச்சின் பிரதர்ஸ் அணி 2-ம் இடத்தையும் வென்றது. சி-பிரிவில் சென்சையர் அணி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை வென்றன.

    பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். புரவலர் வெங்கடாசலம் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ரவி, மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவக்குமரன், அழகப்பா உடற்கல்வி கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். சதமடித்த 18, 5 விக்கெட் வீழ்த்திய 31 வீரர்களுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக வீல்சேர் அணியில் விளையாடிய சிவகங்கை மாவட்ட வீரர்கள் சுரேஷ்குமார், ராமசந்திரன், மகளிர் வீராங்கனை பிரியதர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • சோழசிராமணியில் சோலை ஈகிள் கிரிக்கெட் கிளப்பின் 35-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சோழசிராமணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க மாநில வர்த்தக அணி துணைத் தலைவருமான கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணியில் சோலை ஈகிள் கிரிக்கெட் கிளப்பின் 35-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சோழசிராமணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க மாநில வர்த்தக அணி துணைத் தலைவருமான கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதியில் போட்டியில் பரமத்தி ராஜா கிரிக்கெட் கிளப் அணி முதல் பரிசு தொகையான ரூ.30,035-ம், சேலம் சகாரா கிளப் கிரிக்கெட் அணி 2-வது பரிசாக ரூ.25,035-ம், கபிலர்மலை ஆர்.எம்.சி.சி கிரிக்கெட் அணி 3-வது பரிசாக ரூ.25,035-ம், பிலிக்கல் பாளையம் டைரோ கிரிக்கெட் அணி 4-வது பரிசாக ரு.15,035-ம் பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் ஊராட்சித் தலைவரும், மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை அமைப்பாளருமான தளபதி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கிரிக்கெட் கிளப் செயலாளர் பரத் வரவேற்றார். கலை சுந்தரராஜன் கிரிக்கெட் கிளப் மேலாளர் நாட்ராயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய குழு தலைவர் ஜே.பி.ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், சமூக அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் வாழ்த்து பெற்றார்.
    • இவருக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் கடந்த டிசம்பரில் பாகிஸ்தானில் நடந்த சக்கர நாற்காலி ஆசிய கோப்பை கிரிக்கெட் 20- 20 போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டார்.

    இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி ஆசிய கோப்பை கைப்பற்றியது. மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட வினோத் பாபுவுக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு வந்தவுடன் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான உதவிகளை செய்ததற்காக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்களை காண்பித்து மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலி கிரிக்கெட் கேப்டன் வினோத்பாபு வாழ்த்து பெற்றார்.

    ×