search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corona vaccination"

    • சென்னை மாநகராட்சியில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடு.
    • பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஈரோடு, மதுரை, கரூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரேனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றன.

    ஏற்கனவே 2 டோஸ் போட்டவர்களுக்கு 33-வது தடுப்பூசி முகாமில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. அதனால், பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது.

    • காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்
    • 20 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் :

    33 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகராட்சியில் 12 முதல் 14 வயது வரை 31,728 சிறாா்கள், 15 முதல் 18 வயது வரை 42,300 இளம் சிறாா்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் 8,67,420 என மொத்தம் 9,41,448 போ் உள்ளனா். இதில், 8.13 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 6.22 லட்சம் நபா்களுக்கு இரண்டாவது தவணையும், 43,764 நபா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 6.22 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 1.91 லட்சம் நபா்களுக்கு இரண்டாவது தவணையும் செலுத்த வேண்டியுள்ளது.

    இந்த நிலையில், திருப்பூா் மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் நடைபெறும் 33 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மூலமாக 20 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மொத்தம் 190 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்த சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளது.

    இந்தப் பணியில் சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 1,140 போ் பணியில் ஈடுபடுத்தப்பட்டவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாநகரில் தடுப்பூசி செலுத்தாத நபா்கள் இந்த முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
    • இந்தியா முழுவதும் 200 கோடி அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்து உள்ளது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "தமிழ்நாட்டை சேர்ந்த என் அன்பான சகோதர, சகோதரிகள். கோவிட் தொற்று நோய் இன்னமும் இங்கே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம். பொதுமக்கள் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும் உள்ளனர். தடுப்பூசி எடுத்துக்கொள்வதே பாதுகாப்பு ஆகும்.

    இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 200 கோடி அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்து உள்ளது.

    தொடரும் கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு, நமது பாரதப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்திய அரசு, 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இலவச கோவிட் பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    ஏராளமான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் நமது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நினைவாக 75 நாட்கள் நடைபெறுகிறது.

    என் அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், மாரியப்பன் மற்றும் செவிலியர்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிபணியை மேற்கொண்டனர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லா கோட்டையில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    முகாமில் புதுநகர் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தலைமையில் மருத்துவ அலுவலர் பாலாஜி,

    சுகுமாரன், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், மாரியப்பன் மற்றும் செவிலியர்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிபணியை மேற்கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
    • நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் நாளை தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சிறப்பு முகாம்கள்

    தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,012 மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர 102 நடமாடும் குழுக்கள் மூலம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் நாளை தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மாணவர்களுக்கு போடப்பட்டது.
    • பள்ளி பெற்றோர்ஆசிரிய கழக தலைவரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பள்ளி பெற்றோர்ஆசிரிய கழக தலைவரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார். இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மாணவர்களுக்கு போடப்பட்டது.

    முகாமில் பள்ளித்தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன், சுகாதாரஆய்வாளர்கள் சேதுபதி, ராஜ்குமார், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, மாணவரணி அருண்குமார், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகபட்சமாக 19 லட்சத்து42 ஆயிரத்து 471 ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
    • ஜூலை,10-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 37.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று முதல் தவணை தடுப்பூசியை 21 லட்சத்து 24 ஆயிரத்து 183 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை16 லட்சத்து, 83 ஆயிரத்து 70 பேர் செலுத்தியுள்ளனர். 19 ஆயிரத்து856 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

    அதிகபட்சமாக 19 லட்சத்து42 ஆயிரத்து 471 ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பெண்கள் 18 லட்சத்து 14 ஆயிரத்து 117 பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக 18 வயதை கடந்த, 21 லட்சத்து 99 ஆயிரத்து 080 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

    பொதுமக்கள் பயன்பெற வசதியாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'கோவேக்சின்', 'கோவிஷீல்டு' முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.இந்த இடங்களில் இதுவரை தடுப்பூசியே செலுத்தாதவர் செலுத்தி கொள்ள முடியும். ஜூலை, 10-ந்தேதி அடுத்த மாதத்துக்கான மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

    • சென்னையில் மட்டும் 3,300 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • ஆவடி மாநகராட்சி அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார்.

    தமிழகம் முழுவதும் இன்று 30-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம்கள் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மொத்தம் ஒரு லட்சம் இடங்களில் முகாம் நடைபெற்றது.

    இதில் சென்னையில் மட்டும் 3,300 இடங்களில் நடைபெற்றது. இன்று காலையில் ஆவடி மாநகராட்சி அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார்.

    அதன்படி, தமிழகத்தில் இன்று கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை, 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 67 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×