search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrayaan 3"

    • சந்திரயான்-3 திட்டம் பெரும் வெற்றி பெற்றது
    • ஆதித்யா எல்1 செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலனை கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    ஆதித்யா, இஸ்ரோவின் திட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு தனது பயணத்தை மேற்கொண்டு, அவ்வப்போது இஸ்ரோவிற்கு (பூமிக்கு) புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

    இந்நிலையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான பாதையில் லாக்ரஞ்சியன் புள்ளி எனப்படும் L1 புள்ளியை நோக்கி பயணிக்கும் ஆதித்யா, அதனுள்ளே பொருத்தப்பட்ட அதி நவீன கேமிரா மூலம் தன்னையும், பூமியையும் மற்றும் நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக மகிழ்ச்சியுடன் இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்)  சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. அந்த புகைப்படங்களையும் வீடியோவாக இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

    • நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.
    • எல்ஆர்ஓ விண்கலம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை சமீபத்தில் படம்பிடித்தது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.

    இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    சமீபத்தில், நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

    இந்தப் புகைப்படத்தை சிவப்பு மற்றும் சியான் எனப்படும் நீல நிற கண்ணாடிகள் மூலம் முப்பரிமாண வடிவத்தில் பார்க்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 இருப்பதை நாசா செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது.

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) சமீபத்தில் சந்திரயான் -3ன் லேண்டரின் புகைப்படத்தை பிடித்தது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அன்று எல்ஆர்ஓ-ஆல் எடுக்கப்பட்டது.

    இந்த படத்தை டுவிட்டரில் பகிர்ந்த நாசா,"எல்ஆர்ஓ விண்கலம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை சமீபத்தில் படம்பிடித்தது.

    சந்திரயான் 3 தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு லேண்டரின் சாய்ந்த பார்வையை (42-டிகிரி ஸ்லூ ஆங்கிள்) எல்ஆர்ஓ கேமரா படம் பிடித்தது. ராக்கெட் ப்ளூம் நுண்ணிய ரேகோலித் (மண்) உடன் தொடர்புகொள்வதால் லேண்டரைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் தெரிந்தது" என்றது.

    • சந்திர மேற்படுகைகளின் காலவரிசை, நிலப்பரப்பு மற்றும் கனிமவியல் பண்பு களை நோக்கிய திட்டப் பணிகளுக்கு ஒத்துழைத்து செயலாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
    • சந்திர மாக்மாடி சத்திற்கான தாக்கங்கள் என்ற ஆய்விற்காக பெங்களூரு இஸ்ரோ ரூ.23 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

    சின்னாளபட்டி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது.

    இந்தப் பணியின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பர ப்பில் விக்ரம் லேண்டரின் சீரான தரையிறக்கத்தைச் சோதிக்க குன்னமலையில் இருந்து 50 டன் சந்திர மண் ஊக்கிகளை அனுப்ப சந்திர மண் தயாரிப்பு ஆராய்ச்சித் திட்டத்தில் விஞ்ஞானிகள் குழு பணியாற்றியது.

    தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி மற்றும் ராமதேவம் கிரா மங்களிலிருந்து மண் மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழுவில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பயன்பா ட்டுப்புவி அமைப்பியல் துறையைச் சேர்ந்த புவியியலாளர் அறிவழகன் உறுப்பினராகச் செயல்ப ட்டார். இவரது பங்களி ப்பைக் காந்தி கிராமப் பல்கலைக்கழகம் பெருமை யாகப் பாராட்டியது.

    மேலும் இவர் மேற்கண்ட திட்டத்தின் தயாரிப்பு, மேற்பார்வை, தரக்கட்டு ப்பாடு, பேக்கிங் மற்றும் போக்குவரத்து ஆகிய வற்றிலும் பங்காற்றி யுள்ளார். சந்திரயான் 1 மற்றும் 2 தரவுகளை இஸ்ரோ வழங்கிய நிதியுதவி யுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திர மேற்படுகைகளின் காலவரிசை, நிலப்பரப்பு மற்றும் கனிமவியல் பண்பு களை நோக்கிய திட்டப் பணிகளுக்கு ஒத்துழைத்து செயலாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் தனது முதுகலை மற்றும் பி.எச்.டி. ஆராய்ச்சி ப் பணிகளுக்காகச் சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்திலும், அகமதாபாத் பிளானெக்ஸ், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்திலும் ஆராய்ச்சிக் கூட்டாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தப் பணிக்காக வழங்கப்பட்ட "ஹைலேண்ட் லூனார் மண் சிமுலண்ட் தயாரிப்பி ற்கான ஒரு முறை" குழுவி ற்கான காப்புரிமையின் ஒரு அங்கமாகவும் உள்ளார்.

    அஹமதாபாத் இஸ்ரோ வின் விண்வெளி பயன்பா ட்டு மையத்தால் அங்கீகரிக்க ப்பட்ட 2 முக்கிய ஆராய்ச்சித் திட்டங்களான "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் டேட்டாவுடன் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் தொலை புவி வேதியியல் மற்றும் கனிமவியல் பகுப்பாய்வு" மற்றும் "சந்திர ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் தரவைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரன் மேற் பகுதிகளின் லித்தாலாஜிக்கல் மற்றும் காலவரிசை பண்புகள்" ஆகியவற்றை 37 லட்சத்தி ற்குள் முடித்துள்ளார். தற்போது அவர் சந்திர யான்-2 தரவுகளைப் பய ன்படுத்தித் தேர்ந்தெடுக்க ப்பட்ட சந்திரன் மண்டல ங்களின் புதிய நுண்ணறிவுப் பரவல் பற்றிய ஆராய்ச்சித் திட்டத்தைச் செய்து வருகிறார். சந்திர மாக்மாடி சத்திற்கான தாக்கங்கள் என்ற ஆய்விற்காக பெங்களூரு இஸ்ரோ ரூ.23 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

    அறிவழகனை துணை வேந்தர் (கூடுதல் பொறுப்பு), பதிவாளர் (பொறுப்பு), ஆசிரியர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவர்கள் இந்தியாவின் நிலவாரா ய்ச்சிப் பணிகளுக்கு ஆற்றி வரும் பங்களிப்புகளுக்காக பாராட்டினர்.

    • பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.
    • ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14-ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    இந்நிலையில், நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை சிவப்பு மற்றும் சியான் எனப்படும் நீல நிற கண்ணாடிகள் மூலம் முப்பரிமாண வடிவத்தில் பார்க்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனாக்லிஃப் என்பது ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களிலிருந்து முப்பரிமாணங்களில் பொருள் அல்லது நிலப்பரப்பை எளிய முறையில் காட்சிப்படுத்துவதாகும். பிரக்யான் ரோவரில் உள்ள கேமராவில் இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி இந்த அனாக்லிஃப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சேனல் புகைப்படத்தில், இடது பக்க புகைப்படம் சிவப்பு சேனலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வலது பக்க புகைப்படம் நீலம் மற்றும் பச்சை (சியான்) சேனல்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு இடையிலான கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடு ஸ்டீரியோ விளைவை ஏற்படுத்துகிறது. இது மூன்று பரிமாணங்களின் காட்சி தோற்றத்தை அளிக்கிறது. இதை முப்பரிமாணத்தில் பார்க்க சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது.

    • நிலவின் தரையிலிருந்து 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேலே எழும்பியது
    • செப்டம்பர் 22 அன்று மீண்டும் விழிப்பு நிலைக்கு கொண்டு வரப்படும்

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜூலை மாதம் 14 அன்று, நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3, வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் சாதனமும், பிரக்யான் எனும் ரோவர் சாதனமும் பிரிந்து நிலவை அடைந்து, தங்கள் ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.

    இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் சாதனம் குறித்து இஸ்ரோ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. அதில், "விக்ரம் லேண்டர் திட்டமிட்ட குறிக்கோளை தாண்டியே சிறப்பாக செயல்பட்டது. அது வெற்றிகரமாக ஒரு "ஹாப்" பரிசோதனையையும் நிறைவு செய்தது. கட்டளை இட்டதும், அதன் இஞ்சின்கள் செயலாக்கப்பட்டு, நிலவின் தரையிலிருந்து 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு வெற்றிகரமாக உயரே கிளம்பி, சுமார் 30-40 சென்டிமீட்டருக்கு அப்பால் பத்திரமாக தரையிறங்கியது."

    "இன்று 08:00 மணிக்கு விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு செல்லுமாறு செயலாக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அதனுள்ளேயே சில பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமிக்கு அனுப்பப்பட்டது. அதில் உள்ள ஆய்வு கருவிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன."

    "ஆனால், அதில் உள்ள சமிக்ஞைகளை கிரகிக்கும் 'ரிசீவர்' கருவி அணைக்கப்படவில்லை. சூரிய ஒளியிலிருந்து பெறும் சக்தி நின்றவுடன் பிரக்யானுக்கு அருகில் லேண்டர் உறக்க நிலைக்கு சென்று விடும். செப்டம்பர் 22 அன்று பிரக்யானும், விக்ரமும் மீண்டும் விழிப்பு நிலைக்கு வரும்," என்று இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.

    லேண்டர் 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேலே கிளம்பியது உட்பட அதன் சமீபத்திய செயல்கள் குறித்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

    • சந்திரயான்-3 வெற்றி விழா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி. துணை பிரிவு தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கிராஸ் சப்னா கலந்துகொண்டார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சந்திரயான்-3 வெற்றி விழா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது. இயற்பியல் துறை மாணவி மரியா ஆர்த்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். செயலர் வி.பி.ராமநாதன், கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி. துணை பிரிவு தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கிராஸ் சப்னா கலந்துகொண்டு மாணவர்களுக்கு சந்திரயான்-3 உருவான வரலாற்றை பற்றி எடுத்துரைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஸ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் பாலமுருகன், சுஜா பிரேம ரஜினி, ராய் ரிச்சி ரெனால்ட், பிருந்தாமலர் மற்றும் ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர். 2-ம் ஆண்டு மாணவி விஜய பாரதி நன்றி கூறினார். பல்வேறு துறைகளை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது.
    • நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது என இஸ்ரோ அறிவித்தது.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    இதற்கிடையே, நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது பிரக்யான் ரோவர் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது.

    அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை துவங்கும் நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ, செப்டம்பர் 22-ம் தேதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியைத் தொடரலாம் அல்லது நிரந்தரமாக செயலற்றுப் போகலாம். மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

    • ஆதித்யா எல்1 வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
    • நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டரும், ரோவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    ஆதித்யா எல்1 வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் 100 மீட்டருக்கு மேல் சென்றும், ரோவர் பயணத்தை தொடர்வதாக இஸ்ரோ தகவல்.

    இதற்கிடையே, நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டரும், ரோவரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரு சில தினங்களில் நிலவில் இருக்கும் ரோவரை உறங்க வைக்கும் பணிகள் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    • நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது.
    • "சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தை அலசி ஆராய 'சந்திரயான்-3' விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியதில் இருந்து, ரோவர் எடுத்த அபூர்வமான புகைப்படங்களை எல்லாம் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    எந்த நாடும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஊர்ந்து சென்ற காட்சியும் இந்தியர்களை ஆனந்தத்தில் பெருமை கொள்ள செய்தது.

    குறிப்பாக நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது.

    வழிசெலுத்தல் கேமராவில் (நேவிகேஷன் கேமரா) லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இதுதான் நிலவின் காட்சியென இஸ்ரோ வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இதயத்தை கவர்ந்து வருகிறது. அத்துடன் உலகமே இஸ்ரோவின் காட்சிகளை உற்று நோக்கி வருகிறது.

    இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

    "சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டத்தில் "சந்திரயான் 3" கட்டுரையை சேர்ப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது.
    • ராக்கெட் மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.

    சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், செப்டம்பர் 2-ம்தேதி காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகும்.

    விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா எல்-1 இயங்கும். ஆதித்யா எல்-1, கிரகண நேரங்களிலும் சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.

    சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து வெளிப்படும் வாயு, திடப்பொருள் வெளியேற்றம், மின்காந்த வெளியேற்றங்கள், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக அனுப்பப்படுகிறது.

    பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்.

    "விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஏவுதலுக்கான தயார்நிலை வேலைகள் நடைபெற்று வருகிறது. ராக்கெட் மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் அறிவித்த இஸ்ரோ, ஆதித்யா எல்-1 குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டது.

    இந்நிலையில், செப்டம்பர் 2-ம்தேதி ஏவுவதற்கான 24-மணி நேர கவுண்ட்டவுன் செப்டம்பர் 1 (இன்று), காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
    • விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

     

    முன்னதாக நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுவதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், விக்ரம் லேண்டரில் உள்ள ஐ.எல்.எஸ்.ஏ. (ILSA) கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்து இருப்பதாக இஸ்ரோ தெரவித்து இருக்கிறது. நிலவில் ஏற்பட்ட அதிர்வு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அறிவித்து உள்ளது. ஐ.எல்.எஸ்.ஏ. கருவியானது பெங்களூருவில் டிசைன் செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா எல்-1 இயங்கும்
    • எல்-1 புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.

    சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.

    அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், செப்டம்பர் 2-ம்தேதி காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகும்.

    விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா எல்-1 இயங்கும்.

    ஆதித்யா எல்-1, கிரகண நேரங்களிலும் சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது. சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து வெளிப்படும் வாயு, திடப்பொருள் வெளியேற்றம், மின்காந்த வெளியேற்றங்கள், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக அனுப்பப்படுகிறது.

    பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்.

    "விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஏவுதலுக்கான தயார்நிலை வேலைகள் நடைபெற்று வருகிறது. ராக்கெட் மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் அறிவித்த இஸ்ரோ, ஆதித்யா எல்-1 குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டது.

    இந்நிலையில், செப்டம்பர் 2-ம்தேதி ஏவுவதற்கான 24-மணி நேர கவுண்ட்டவுன் செப்டம்பர் 1 (நாளை), காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×