என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேராசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சந்திரயான் -3 வெற்றியில் பங்களித்த காந்திகிராம பல்கலை பேராசிரியருக்கு பாராட்டு
- சந்திர மேற்படுகைகளின் காலவரிசை, நிலப்பரப்பு மற்றும் கனிமவியல் பண்பு களை நோக்கிய திட்டப் பணிகளுக்கு ஒத்துழைத்து செயலாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
- சந்திர மாக்மாடி சத்திற்கான தாக்கங்கள் என்ற ஆய்விற்காக பெங்களூரு இஸ்ரோ ரூ.23 லட்சம் நிதி வழங்கியுள்ளது.
சின்னாளபட்டி:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது.
இந்தப் பணியின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பர ப்பில் விக்ரம் லேண்டரின் சீரான தரையிறக்கத்தைச் சோதிக்க குன்னமலையில் இருந்து 50 டன் சந்திர மண் ஊக்கிகளை அனுப்ப சந்திர மண் தயாரிப்பு ஆராய்ச்சித் திட்டத்தில் விஞ்ஞானிகள் குழு பணியாற்றியது.
தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி மற்றும் ராமதேவம் கிரா மங்களிலிருந்து மண் மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழுவில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பயன்பா ட்டுப்புவி அமைப்பியல் துறையைச் சேர்ந்த புவியியலாளர் அறிவழகன் உறுப்பினராகச் செயல்ப ட்டார். இவரது பங்களி ப்பைக் காந்தி கிராமப் பல்கலைக்கழகம் பெருமை யாகப் பாராட்டியது.
மேலும் இவர் மேற்கண்ட திட்டத்தின் தயாரிப்பு, மேற்பார்வை, தரக்கட்டு ப்பாடு, பேக்கிங் மற்றும் போக்குவரத்து ஆகிய வற்றிலும் பங்காற்றி யுள்ளார். சந்திரயான் 1 மற்றும் 2 தரவுகளை இஸ்ரோ வழங்கிய நிதியுதவி யுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திர மேற்படுகைகளின் காலவரிசை, நிலப்பரப்பு மற்றும் கனிமவியல் பண்பு களை நோக்கிய திட்டப் பணிகளுக்கு ஒத்துழைத்து செயலாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் தனது முதுகலை மற்றும் பி.எச்.டி. ஆராய்ச்சி ப் பணிகளுக்காகச் சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்திலும், அகமதாபாத் பிளானெக்ஸ், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்திலும் ஆராய்ச்சிக் கூட்டாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தப் பணிக்காக வழங்கப்பட்ட "ஹைலேண்ட் லூனார் மண் சிமுலண்ட் தயாரிப்பி ற்கான ஒரு முறை" குழுவி ற்கான காப்புரிமையின் ஒரு அங்கமாகவும் உள்ளார்.
அஹமதாபாத் இஸ்ரோ வின் விண்வெளி பயன்பா ட்டு மையத்தால் அங்கீகரிக்க ப்பட்ட 2 முக்கிய ஆராய்ச்சித் திட்டங்களான "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் டேட்டாவுடன் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் தொலை புவி வேதியியல் மற்றும் கனிமவியல் பகுப்பாய்வு" மற்றும் "சந்திர ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் தரவைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரன் மேற் பகுதிகளின் லித்தாலாஜிக்கல் மற்றும் காலவரிசை பண்புகள்" ஆகியவற்றை 37 லட்சத்தி ற்குள் முடித்துள்ளார். தற்போது அவர் சந்திர யான்-2 தரவுகளைப் பய ன்படுத்தித் தேர்ந்தெடுக்க ப்பட்ட சந்திரன் மண்டல ங்களின் புதிய நுண்ணறிவுப் பரவல் பற்றிய ஆராய்ச்சித் திட்டத்தைச் செய்து வருகிறார். சந்திர மாக்மாடி சத்திற்கான தாக்கங்கள் என்ற ஆய்விற்காக பெங்களூரு இஸ்ரோ ரூ.23 லட்சம் நிதி வழங்கியுள்ளது.
அறிவழகனை துணை வேந்தர் (கூடுதல் பொறுப்பு), பதிவாளர் (பொறுப்பு), ஆசிரியர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவர்கள் இந்தியாவின் நிலவாரா ய்ச்சிப் பணிகளுக்கு ஆற்றி வரும் பங்களிப்புகளுக்காக பாராட்டினர்.






