search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ திட்டம்"

    • நிலவின் தரையிலிருந்து 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேலே எழும்பியது
    • செப்டம்பர் 22 அன்று மீண்டும் விழிப்பு நிலைக்கு கொண்டு வரப்படும்

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜூலை மாதம் 14 அன்று, நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3, வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் சாதனமும், பிரக்யான் எனும் ரோவர் சாதனமும் பிரிந்து நிலவை அடைந்து, தங்கள் ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.

    இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் சாதனம் குறித்து இஸ்ரோ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. அதில், "விக்ரம் லேண்டர் திட்டமிட்ட குறிக்கோளை தாண்டியே சிறப்பாக செயல்பட்டது. அது வெற்றிகரமாக ஒரு "ஹாப்" பரிசோதனையையும் நிறைவு செய்தது. கட்டளை இட்டதும், அதன் இஞ்சின்கள் செயலாக்கப்பட்டு, நிலவின் தரையிலிருந்து 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு வெற்றிகரமாக உயரே கிளம்பி, சுமார் 30-40 சென்டிமீட்டருக்கு அப்பால் பத்திரமாக தரையிறங்கியது."

    "இன்று 08:00 மணிக்கு விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு செல்லுமாறு செயலாக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அதனுள்ளேயே சில பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமிக்கு அனுப்பப்பட்டது. அதில் உள்ள ஆய்வு கருவிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன."

    "ஆனால், அதில் உள்ள சமிக்ஞைகளை கிரகிக்கும் 'ரிசீவர்' கருவி அணைக்கப்படவில்லை. சூரிய ஒளியிலிருந்து பெறும் சக்தி நின்றவுடன் பிரக்யானுக்கு அருகில் லேண்டர் உறக்க நிலைக்கு சென்று விடும். செப்டம்பர் 22 அன்று பிரக்யானும், விக்ரமும் மீண்டும் விழிப்பு நிலைக்கு வரும்," என்று இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.

    லேண்டர் 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேலே கிளம்பியது உட்பட அதன் சமீபத்திய செயல்கள் குறித்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

    • கிரிஸ்டோஃபர் நோலன் இயக்கிய இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) பட தயாரிப்பு செலவு ரூ.1300 கோடி
    • சந்திராயன்-2 தோல்வியில் கற்றது சந்திராயன்-3 வெற்றிக்கு உதவியது

    நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் ஏவிய சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி நேற்று மாலை 06:04 மணியளவில் வெற்றிகரமாக அடைந்தது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு எனும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    ௨௦௧௯-ல் ஏற்பட்ட சந்திரயான்-2 தோல்வியில் இருந்து பல விஷயங்களை கற்று கொண்டதால்தான் சந்திராயன்-3 வெற்றி சாத்தியமானதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திராயன்-2 முயற்சிக்காக சுமார் ரூ.800 கோடி செலவானது. சந்திரயான்-3 திட்டத்திற்காக இதை விட குறைவாக இந்தியா சுமார் ரூ.620 கோடி ($75 மில்லியன்) செலவிட்டிருக்கிறது.

    இந்த தொகை பல உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது. 2013-இல் எடுக்கப்பட்ட சாண்ட்ரா புல்லக் நடித்த கிராவிடி (Gravity) திரைப்படத்தை தயாரிக்க சுமார் ரூ.825 கோடி ($100 மில்லியன்) செலவானது. 2015-இல் எடுக்கப்பட்ட மேட் டேமன் நடித்த தி மார்ஷியன் (The Martian) தயாரிக்க சுமார் ரூ.890 கோடி ($108 மில்லியன்) செலவானது.

    2014-இல் எடுக்கப்பட்ட கிரிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) தயாரிக்க ரூ.1300 கோடி ($165 மில்லியன்) செலவானது. இது மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் துறையில், பிரிட்டனில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட வீட்டின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2000 கோடி (200 மில்லியன் பவுண்ட்).

    இந்த ஒப்பீடுகளுடன், ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியடைந்த பல முன்னணி ஆங்கில திரைப்படங்களை உருவாக்க ஆன செலவை விட குறைவான செலவில் இந்தியா ஒரு விண்வெளி சாதனையை எவ்வாறு நிகழ்த்தியது என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

    மனித இனத்திற்கு பயனளிக்க கூடிய விண்வெளி திட்டங்களை சிக்கனமான வழிமுறைகளில் செயல்படுத்த போவதாக கூறியிருந்த இந்திய அரசாங்கம், தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் ஈடுபட அனுமதிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் ஊடகங்கள் சந்திரயான் 3 முயற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார் ஃபவத்
    • நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-3 எனும் பெயரில் ஒரு விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் வானில் வெற்றிகரமாக செலுத்தியது.

    நேற்று மாலை 06:04 மணியளவில் சந்திரயான்-3 திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக தொட்டது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலனை அனுப்பியிருந்தாலும், நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை.

    எனவே விண்வெளி சரித்திரத்திலேயே மிகவும் அரிதான இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலகமே பாராட்டி வருகிறது. உலகில் பலரும் இந்தியாவை பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் பலர் இந்தியாவை பாராட்டி வருகின்றனர்.

    கடந்த ஓரிரு வருடங்களாக பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, பிற நாடுகளிடமும், பொருளாதார அமைப்புகளிடமும் உதவிகள் கேட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்திரயான்-3 நிலவை தொடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி இந்தியாவின் சாதனை முயற்சிக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்தியாவை போன்று பாகிஸ்தானும் நிலவிற்கு செல்ல முயற்சிகள் எடுக்குமா என அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த ஒரு பாகிஸ்தான் குடிமகன், "நாங்கள் நிலவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாங்கள் ஏற்கெனவே நிலவில்தான் வசிக்கிறோம். அதாவது நிலவில் குடிநீர், சாலை வசதி மற்றும் மின்சாரம் உட்பட எந்த வசதிகளும் கிடையாது. அதே போல்தான் பாகிஸ்தானிலும் இவை எதுவும் கிடையாது," என பதிலளித்தார்.

    இவரது நகைச்சுவையான பதில் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    ×