search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI director"

    சிபிஐ இயக்குனர் மீதான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்தது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.


    அதன்படி இன்று நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரசார், முகமூடி அணிந்தும், கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பாட்னாவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பும் ஏராளமான காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் காரணமாக சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனருக்கு அளிக்கப்பட்ட கட்டாய விடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI
    புதுடெல்லி:

    சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய தொழில் அதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதன்மூலம், சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது.  

    அதன்பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்தது. இவ்வாறு சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 



    மேலும், இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் செல்லலாம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனை கடுமையாக எதிர்த்த அலோக் வர்மா, மற்றும் சிறப்பு இயக்குனர் ராஜேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

    இந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI
    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் சி.பி.ஐ. சோதனை நடத்தி செல்லாத நோட்டு அறிவிப்பின்போது சட்ட விரோதமாக புதிய பணம் பதுக்கியவர்கள் மீது நாகேஷ்வரராவ் நடவடிக்கை எடுத்தார். #CBIDirector #NageswaraRao
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் லஞ்சப் புகார் காரணமாக நீக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது.

    புதிய சி.பி.ஐ. இயக்குனராக தற்காலிகமாக இணை இயக்குனராக இருந்த நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் பதவி ஏற்ற அவர் அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை எடுத்தார். அலோக் வர்மா மற்றும் அஸ்தானா மீதான ஊழல் புகார்கள் பற்றி விசாரிக்க புதிய குழுவை நியமித்தார்.

    மேலும் 14 அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்தும் உத்தரவிட்டார். சி.பி.ஐ.யில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதிரடி நடவடிக்கையின் கதாநாயகனான நாகேஷ்வர ராவ் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். வாரங்கல் மாவட்டம் மங்க பேட்டா மண்டலம் போரு நர்சாபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

    மங்கபேட்டா அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டு இருந்த போது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    ஒடிசாவில் பணி நியமனம் செய்யப்பட்ட பின்னர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பாலும் பணியாற்றினார். ஒடிசா மாநில டி.ஐ.ஜி.யாகவும் பதவி வகித்தார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தென் மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    இவர் பொறுப்பேற்ற பின்புதான் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. செல்லாத நோட்டு அறிவிப்பின்போது சட்ட விரோதமாக புதிய பணம் பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.

    ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது மேலிட உத்தரவுப்படி அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான இடைத்தரகர்கள், தொழில் அதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட ரூ.90 கோடியில் ரூ.70 கோடி புதிய நோட்டுகள் ஆகும். 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

    கோப்புப்படம்

    காண்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையிலும் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது. முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலின்போது நடந்த சோதனையும் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதன் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன.

    இவை அனைத்தும் அ.தி.மு.க. ஆதரவைப் பெறுவதற்காக பா.ஜனதா நடத்தியது என்று அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் நாகேஷ்வரராவ் முக்கிய பங்கு வகித்தார் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. #CBIDirector #NageswaraRao
    சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண் மனுதாக்கல் செய்துள்ளார். #CBI #NageswaraRao #AlokVerma
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

    அதில் அவர், “சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் விதியை மீறி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை கவனத்தில் கொள்ளாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். #CBI #NageswaraRao #AlokVerma
    சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரிக்கும் புதிய குழுவை சிபிஐ இன்று அறிவித்துள்ளது. #CBI #RakeshAsthana #CBIVsCBI
    புதுடெல்லி:

    சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது.

    மொயின் குரேஷி மீதான வழக்கை விசாரித்து வந்த ராகேஷ் அஸ்தானா, இவ்வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி பெற்றதாக புகார் அளித்தார். அதன்பின்னர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இவ்வாறு மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இரண்டு இயக்குனர்களும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது. தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுள்ளார். வழக்கை விசாரித்த முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை விசாரிக்கும் புதிய குழுவை சிபிஐ அறிவித்துள்ளது. டிஐஜி தருண் கவுபா, எஸ்பி சதீஷ் தாகர், இணை இயக்குனர் வி.முருகேசன் ஆகியோர் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CBI #RakeshAsthana #CBIVsCBI 
    சிபிஐ அமைப்பில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 இயக்குனர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #CBI #AlokVerma #RakeshAsthana #NageswaraRao
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. என்பது நாட்டின் மிக உயர்ந்த புலனாய்வு விசாரணை அமைப்பாகும். மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இது இயங்குகிறது.

    முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, ஆள் கடத்தல், தீவிரவாதம் போன்ற வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. மேலும் குறிப்பிடத்தக்க சில வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டும், மாநில ஐகோர்ட்டுகளும் சி.பி.ஐ.க்கு பரிந்துரைப்பது வழக்கம். அந்த அளவுக்கு நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதனால் தான் சி.பி.ஐ.க்கு என்று தனி மதிப்பு, மரியாதை இருக்கிறது.

    ஆனால் சமீபகாலமாக சி.பி.ஐ.யில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கியும், ஒருவருக்கொருவர் மோதல்களில் ஈடுபட்டும் அதன் பெருமையை குறைக்கும் வகையில் செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா இருந்து வந்தார். இவருக்கு கீழ் அடுத்த நிலையில் சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர்தான் உச்சகட்ட மோதலாக வெடித்துள்ளது.

    சமீபத்தில் மொயின் குரேஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளர் சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கினார். இவர் மீதான வழக்கை சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான புலனாய்வு குழு விசாரித்து வந்தது. துணை சூப்பிரண்டு தேவேந்தர் குமார் உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த வழக்கில் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா, இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இருவரும் வழக்கில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்தனர். இதற்காக தெலுங்கு தேச எம்.பி. ஒருவர் மூலம் சி.பி.ஐ. இயக்குனரையும், சிறப்பு இயக்குனரையும் அணுகினார்கள்.

    இந்த நிலையில் வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிக்க சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி பெற்றதாக மத்திய மந்திரி சபை செயலாளருக்கு சிறப்பு இயக்குனர் அஸ்தானா புகார் கடிதம் எழுதினார்.

    தொழில் அதிபர் சதீஷ் சனா அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த புகார் கூறப்பட்டது.

    இதற்கு பதிலடியாக சிறப்பு இயக்குனர் அஸ்தானா மீது ரூ.5 கோடி லஞ்சப் புகார் கூறப்பட்டது. இவர் சதீஷ் சனாவை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் என்று சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா உத்தரவின் பேரில் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு இரு உயர் அதிகாரிகளும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகார்களை கூறியதால் மோதல் உச்ச கட்டத்தை எட்டியது.

    இந்த நிலையில்தான் அஸ்தானாவின் விசாரணை குழுவில் இடம் பெற்று இருந்த துணை சூப்பிரண்டு தேவேந்தர் குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். லஞ்சப் புகாருக்கு ஆளான இவர்தான் சதீஷ் சனாவிடம் இருந்து சி.பி.ஐ. இயக்குனர் தொடர்பாக போலி வாக்குமூலம் பெற்றதாக கூறப்பட்டது.

    முன்னதாக அவரது வீடு- அலுவலகத்தில் சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவரைத் தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் என கருதி சிறப்பு இயக்குனர் அஸ்தானா டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை அஸ்தானாவை கைது செய்ய டெல்லி கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

    சி.பி.ஐ. இயக்குனர்கள் இடையேயான மோதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடி இது தொடர்பாக மூத்த மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


    இதில் சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் பதவியில் இருந்து விடுவித்து உடனடியாக விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது.

    இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை நள்ளிரவில் பிறப்பித்தது. உடனடியாக உத்தரவு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் அஸ்தானாவும் பொறுப்புகளில் இருந்து விலகினார்கள்.

    அலோக் வர்மாவுக்கு பதில் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்டார். அவர் நள்ளிரவு 2 மணிக்கு சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றார். இவர் இதுவரை இணை இயக்குனராக பொறுப்பு வகித்து வந்தார்.

    பதவி ஏற்றதும் உடனடியாக அவர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார். முந்தைய இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் 10-வது மற்றும் 11-வது தளங்களில் உள்ள இருவரது அலுவலக அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    நடவடிக்கைக்கு ஆளான இரு இயக்குனர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மற்ற அதிகாரிகள் பற்றியும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரித்து வந்த பல்வேறு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் லோக் வர்மாவுக்கு நெருக்கமானவராக இருந்த துணை கண்காணிப்பாளர் ஏ.கே.பஸ்சியும் ஒருவர். இவர் போர்ட் பிளேருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    மேலும் சி.பி.ஐ. தலைமை அலுவலக பாதுகாப்பு பணி மத்திய தொழில் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சி.பி.ஐ. வட்டாரத்தில் மட்டுமல்லாது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சி.பி.ஐ. இயக்குனராக தற்காலிக பொறுப்பேற்றுள்ள நாகேஷ்வர ராவ் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 1986-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். #CBI #AlokVerma #RakeshAsthana #NageswaraRao #CBIVsCBI 
    ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதற்காக கட்டாய விடுப்பில் அனுப்புவதை ஏற்க மறுத்து, சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI
    புதுடெல்லி:

    சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது. மொயின் குரேஷி மீதான வழக்கை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய தொழில் அதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்தது. சதீஷ் சனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் மோசடி செய்ததாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 2 மணிக்கு அவர் பொறுப்பேற்றார்.

    அதேசமயம், இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் செல்லலாம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



    இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரும் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஊழல்  குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள நிலையில் கட்டாய விடுப்பில் அனுப்புவதை ஏற்க முடியாது என கூறியுள்ளனர். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது. #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI 
    ×