search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ அதிகார மோதல்- ராகேஷ் அஸ்தானா மீதான புகாரை விசாரிக்கும் புதிய குழு அறிவிப்பு
    X

    சிபிஐ அதிகார மோதல்- ராகேஷ் அஸ்தானா மீதான புகாரை விசாரிக்கும் புதிய குழு அறிவிப்பு

    சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரிக்கும் புதிய குழுவை சிபிஐ இன்று அறிவித்துள்ளது. #CBI #RakeshAsthana #CBIVsCBI
    புதுடெல்லி:

    சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது.

    மொயின் குரேஷி மீதான வழக்கை விசாரித்து வந்த ராகேஷ் அஸ்தானா, இவ்வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி பெற்றதாக புகார் அளித்தார். அதன்பின்னர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இவ்வாறு மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இரண்டு இயக்குனர்களும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது. தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுள்ளார். வழக்கை விசாரித்த முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை விசாரிக்கும் புதிய குழுவை சிபிஐ அறிவித்துள்ளது. டிஐஜி தருண் கவுபா, எஸ்பி சதீஷ் தாகர், இணை இயக்குனர் வி.முருகேசன் ஆகியோர் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CBI #RakeshAsthana #CBIVsCBI 
    Next Story
    ×