search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registered"

    • முனியன் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்.
    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா தியாகை கிராமத்தைச் சேர்ந்தவர் பூசாரி முனியன் (வயது 43). வெளிநாட்டில் இருந்து திரும்பிய இவர் அனைத்து உறவினர் வீட்டுக்கும் சென்று விட்டு பின்னர், ஆசனூர் அருகே உள்ள வலசை என்ற கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புத்தமங்கலம் கோழி பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தனிப்பிரிவு தலைமை போலீஸ் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொதுமருத்துவ மனைக்குஅனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். 

    • ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
    • சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அரசூர் ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது.

    அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரசூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் (64), ஆறுமுகம்(64), சந்திரன் (65), சுந்தரம் (70), அன்பழகன் (58), செல்வன் (53), திருமூர்த்தி (52), குமரேசன் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிலோ கணக்கில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • தாளவாடி போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

    பிடிப்பட்டவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாளவாடியில் ஒரு வீட்டின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் கோகுல் (25) என்பதும் வீட்டு அருகே சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சாவை சட்ட விரோதமாக பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் தாளவாடி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி அண்ணா நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு வாலிபர் வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

    சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மாது (19) என்று தெரிய வந்தது.

    இது குறித்து தாளவாடி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து 30 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அந்தியூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கிருஷ்ணாபுரம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சண்முகசுந்தரம் என்கிற ராகுல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் .

    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தங்கள் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பெருந்துறை ரோடு, சஞ்சய் நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த அசோக் (48) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடமிருந்து 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூரம்பட்டி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சென்னிமலை ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதேப்பகுதியை சேர்ந்த முஸ்தபா (58) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளை தாளில் எழுதி நிச்சயம் பரிசு விழும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அவர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக தென்னை மரத்துக்கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையிலான போலீசார் தோட்டப்பாடி கிராமம் சென்றனர். அங்குள்ள விவசாய நிலத்தில் சோதனை மேற்கொண்ட போது குழந்தைசாமி என்பவருடைய மகன் விஜயன் என்பவருடைய விவசாய நிலத்தில் ஒருவர் பிளாஸ்டிக் குடத்தில் 10 லிட்டர் தென்னை மரத்துக்கள்ளினை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் சின்னசேலம் குமரன் நகர் பிச்சப்பிள்ளை என்பவருடைய மகன் பெரியசாமி (வயது 50) என்பது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த 10 லிட்டர் தென்னை மரத்துக் கள்ளினைபறிமுதல் செய்தனர்.

    • சிவ ஸ்தலங்களில் ஒன்றாக இளமையாக்கினார் கோவில் உள்ளது
    • திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி இரத்தின அம்மையார் சிலையை காணவில்லை..

    கடலூா:

    சிதம்பரம் நகரத்தில் பழமை வாய்ந்த, பிரபலமான சிவ ஸ்தலங்களில் ஒன்றாக இளமையாக்கினார் கோவில் உள்ளது. இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர்             இக்கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. குறிப்பாக சோமன் மண்டபத்தில் உள்ள ரிஷி கோபுரத்தில் சிறிய அளவிலாக சிலைகள் அதிகளவில் உள்ளன.

    இந்நிலையில் ரிஷி கோபுரத்தில் இருந்த திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி இரத்தின அம்மையார் சிலையை காணவில்லை. இது தொடர்பாக இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பழனியப்பன் சிதம்பரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்க்டபெர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சன்னியாசி பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 35) மனைவி சத்தியவாணி (24) சம்பவத்தன்று முருகன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முருகன் கரண்டியால் தனது மனைவி சத்தியவாணியை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் சத்தியவாணி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து மனைவி சத்தியவாணி கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென மண் சரிந்து குழிக்குள் இருந்த இருவரையும் அமுக்கியது. மற்ற தொழிலாளர்கள் இருவரையும் போராடி மீட்டனர்
    • வீரப்பன் சத்திரம் போலீசார் டையிங் மில் உரிமையாள ரான நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை நல்லாம்பட்டி ரைஸ் மில் புதூரை சேர்ந்தவர் மெய்ஞான–மூர்த்தி (21). கூலித் தொழிலாளி. இவர் ராசாம்பாளை யத்தில் ஒரு டையிங் மில்லில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று மாலை மில்லில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. குழி தோண்டி குழாய் பதிக்கும் பணி நடந்தது. மெய்ஞானமூர்த்தி, ஈரோடு மாணிக்கம் பாளையம், சக்தி நகர் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த சதீஷ்(26) ஆகியோர் குழிக்குள் இறங்கி பணி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மண் சரிந்து குழிக்குள் இருந்த இருவரையும் அமுக்கியது. மற்ற தொழிலாளர்கள் இருவரையும் போராடி மீட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மெய்ஞானமூர்த்தி பரிதாப மாக இறந்தார். சதீஷ்க்கு காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசார் டையிங் மில் உரிமையாள ரான நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார்.
    • தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப் பட்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது62) விவ சாயி. இவர் தனது விவசாய நிலம் அருகில் உள்ள ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் அவர் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரிக்குள் இறங்கி கணேசனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையிலிருந்து இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு கனரக லாரி ஒன்று மாலை புறப்பட்டது. தென்காசி மாவட்டம் நன்னகரம் கிராமத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் இந்த லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று நளளிரவு உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் நாராயணமூர்த்தி உடல் நசுங்கி உயிரழந்தார்.

    தகவலறிந்து விரைந்து வந்த எடக்கல் போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து கிரேன் எந்திரத்தை உடனடியாக வரவழைத்து தலைக்குப்புற கவிழ்ந்த லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு பிறந்து ஒரு மணி நேரத்தில் உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் விபத்து நடந்து, லாரி டிரைவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார்.
    • முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கும்பகோணம் சுவாமிமலை மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் விஜயக்குமார்(வயது32). கார் டிரைவரான இவர், காரைக்கால் அருகே கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார். மேலகாசாகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையோரம் இருட்டில் நிறுத்தப்பட்ட காரில் தெரியாமல் மோதியதில், தூக்கியெறியப்பட்ட விஜயக்குமார் தலையில் பலத்த காயமுற்றார். உடனே அருகில் இருந்தோர், விஜயக்குமாரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய போலீசார், சாலையோரம் காரை நிறுத்திய நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
    • திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்த தால், கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந் தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது குறித்து கனகராஜின் மனைவி தேவி (36) அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×