search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டையிங் மில் உரிமையாளர் மீது"

    • திடீரென மண் சரிந்து குழிக்குள் இருந்த இருவரையும் அமுக்கியது. மற்ற தொழிலாளர்கள் இருவரையும் போராடி மீட்டனர்
    • வீரப்பன் சத்திரம் போலீசார் டையிங் மில் உரிமையாள ரான நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை நல்லாம்பட்டி ரைஸ் மில் புதூரை சேர்ந்தவர் மெய்ஞான–மூர்த்தி (21). கூலித் தொழிலாளி. இவர் ராசாம்பாளை யத்தில் ஒரு டையிங் மில்லில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று மாலை மில்லில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. குழி தோண்டி குழாய் பதிக்கும் பணி நடந்தது. மெய்ஞானமூர்த்தி, ஈரோடு மாணிக்கம் பாளையம், சக்தி நகர் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த சதீஷ்(26) ஆகியோர் குழிக்குள் இறங்கி பணி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மண் சரிந்து குழிக்குள் இருந்த இருவரையும் அமுக்கியது. மற்ற தொழிலாளர்கள் இருவரையும் போராடி மீட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மெய்ஞானமூர்த்தி பரிதாப மாக இறந்தார். சதீஷ்க்கு காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசார் டையிங் மில் உரிமையாள ரான நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×