என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்கால் அருகே விபத்து: நின்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- டிரைவர் பலி
- கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார்.
- முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
கும்பகோணம் சுவாமிமலை மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் விஜயக்குமார்(வயது32). கார் டிரைவரான இவர், காரைக்கால் அருகே கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார். மேலகாசாகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையோரம் இருட்டில் நிறுத்தப்பட்ட காரில் தெரியாமல் மோதியதில், தூக்கியெறியப்பட்ட விஜயக்குமார் தலையில் பலத்த காயமுற்றார். உடனே அருகில் இருந்தோர், விஜயக்குமாரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய போலீசார், சாலையோரம் காரை நிறுத்திய நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.