search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barcelona"

    லா லிகா கால்பந்து தொடரில் முன்னணி கிளப்புகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தங்களது 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. #Laliga #Barcelona
    லா லிகா கால்பந்து தொடரின் 2-வது வார ஆட்டம் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - ஆர். வல்லாடோலிட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெம்பேல் 57-வது நிமிடத்தில் கோல் அடிக்க பார்சிலோனா 1-0 என வெற்றி பெற்றது.



    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் கிரோனா எப்.சி-யை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது. 16-வது நிமிடத்தில் கிரோனா எப்சி அணியின் போர்ஜா முதல் கோலை அடித்தார்.



    39-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். அதன்பின் 52-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி பென்சிமா கோல் அடித்தார். காரத் பேலே 59-வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் பென்சிமாவும் கோல் அடித்தனர்.
    பார்சிலோனா மிட்பீல்டரான இவான் ராக்கிடிச்சை வாங்க பிரான்ஸ் கிளப் பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Barcelona
    குரோசியா அணியின் மிட்பீல்டர் இவான் ராக்கிடிச். 30 வயதாகும் இவர் 2014 முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இவரது ஒப்பந்தம் 2021 வரை இருக்கிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் 81 மில்லியன் பவுண்டிற்கு ராக்கிடிச்சை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

    பார்சிலோனாவும் இந்த தொகைக்கு கொடுக்க தயராக இருக்கிறது. அதேவேளையில் இவான் ராக்கிடிச்சியின் விருப்பத்தையும் கேட்க இருக்கிறது. மேலும் பவுலினோ, இனியஸ்டோ ஆகியோரை வெளியேற்றியுள்ளது. அவர்களுக்கான மாற்று வீரர்களை ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் ராக்கிடிச்சை வெளியேற்றினால் மூன்று வெற்றிடம் ஏற்படும் என்பதால் பார்சிலோனா யோசித்து வருகிறது.



    பார்சிலோனா தங்களது வருமானத்தில் 70 சதவிகிதத்திற்கு மேல் சம்பளமாக வழங்கக்கூடாது என்று திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக அளவில் சம்பளம் பெறும் வீரர்களை விற்க ஆர்வம் காட்டி வருகிறது.
    லா லிகா 2018-19 சீசனை மெஸ்சி, கவுட்டினோ ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றியோடு தொடங்கியுள்ளது. #LaLiga #Messi
    ஐரோப்பா நாடுகளில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து தொடரில் ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பங்கேற்கும் பார்சிலோனா அணியில் நட்சத்திர வீரர் மெஸ்சி இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

    2017-2018 சீசனினல் பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2018-19 சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. பார்சிலோனா தனது முதல் ஆட்டத்தில் நேற்று டிபெர்ட்டிவோ அலெவ்ஸ் அணியை எதிர்கொண்டது.



    முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 64-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். 83-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது.



    மற்ற போட்டிகளில் ரியல் சோசியேடாட், லெவான்டே அணிகள் வெற்றி பெற்றன. செல்டா - எஸ்பான்யல், கிரோனா - வல்லாடோல்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
    பார்சிலோனா மெஸ்சி அறிமுகம் ஆன பிறகு ரியல் மாட்ரிட் அணியை விட அதிக கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. #Messi
    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி. 31 வயதாகும் இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணிகளில் ஒன்றான பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். சிறுவயதில் இருந்தே பார்சிலோனா கிளப்பில் வளர்ந்த மெஸ்சி 2003 முதல் 2004 வரை சி அணிக்காகவும், 2004 முதல் 2005 வரை பார்சிலோனா பி அணிக்காகவும் விளையாடினார்.

    2004-ல் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 418 போட்டிகளில் விளையாடி 383 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா அணிக்கு பரம எதிரி ரியல் மாட்ரிட் கிளப்பாகும். யார் அதிக கோப்பைகள் வெல்வது என்பதில் இரு அணிகளுக்கும் பனிப்போர் நடக்கும்.



    மெஸ்சி பார்சிலோனா அணிக்கு விளையாட வருவதற்கு முன்பு ரியல் மாட்ரிட் 72 பதக்கங்களை வென்றிருந்தது. பார்சிலோனா 62 பதக்கங்களுடன் பின்தங்கியிருந்தது.

    மெஸ்சி பார்சிலோனா அணிக்கு வந்த பிறகு பல கோப்பைகளை வாங்கிக் கொடுத்தது. இதன்காரணமாக தற்போது பார்சிலோனா 95 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ரியல் மாட்ரிட் 92 பதக்கத்துடன் பின்தங்கியுள்ளது.
    பார்சிலோனா அணிக்கு அதிக கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் பட்டியலில் 33 கோப்பையுடன் மெஸ்சி முதல் இடத்தை பிடித்துள்ளார். #Messi #Barcelona
    அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்சி. இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ஸ்பெயின் நாட்டின் சூப்பர் கோபா இறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-1 என செவியாவை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது.



    மெஸ்சி பார்சிலோனாவிற்காக வாங்கிக் கொடுத்த 33-வது சாம்பியன் டிராபி இதுவாகும். இதன்மூலம் பார்சிலோனா அணிக்கு அதிக சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் கேப்டனாக இருந்த இனியஸ்டா 32 கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். பின்கள வீரர் ஜெர்ராடு பிக்காய் 28, பஸ்குயட்ஸ் 28, சேவி 25 ஆகியோர் அடுத்தடுத்து இடத்தை பிடித்துள்ளனர்.
    பார்சிலோனா அணியின் பின்கள வீரரான ஜெரார்டு பிக்காய் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #Barcelona
    ஸ்பெயின் கால்பந்து அணியின் பின்கள வீரர் ஜெரார்டு பிக்காய். இவர் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வருகிறார். ஜூன் மற்றும் ஜூலை மாதம் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறியது.

    அந்த போட்டியில் பிக்காய் பந்தை தடுக்கும்போது பந்து கையில் பட்டதால் ரஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், கால்பந்து விளையாட்டின் மீதமுள்ள காலத்தை பார்சிலோனா அணிக்காக செலவிட இருப்பதாக தெரிவித்துள்ளார். ஸ்பெயின் அணிக்காக மூன்று உலகக்கோப்பையில் விளையாடியுள்ள பிக்காய், 102 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
    சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் பல்வேறு ஆட்டங்களில் பார்சிலோனா செல்சி, லிவர்பூல், அணிகள் வெற்றி பெற்றன. #Barcelona #chelsea
    சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. பிரான்ஸின் நைஸ் நகரில் நடந்த ஒரு ஆட்டத்தில் செல்சி அணி 5-4 என பெனால்டி ஷூட் அவுட் முறையில் இன்டர் மிலான் அணியை வீழ்த்தியது. முன்னதாக ஆட்டம் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்திருந்தது. செல்சி அணியின் கோல் கீப்பர் வில்லி கேபலரோ மிலன் அணியின் கிர்னியார் பெனால்டி வாய்ப்பில் அடித்த பந்து அற்புதமாக தடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் லிவர்வூர் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டத்தில் லிவர்பூல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சாடியோ மேன், டேனியல் ஸ்டரிட்ஜ், ஷை ஓஜோ, ஹெர்டன் ஷக்ரி ஆகியோர் கோலடித்தனர். மான்செஸ்டர் யுனைடெட் அணி சார்பில் மிட் பீல்டர் ஆன்ட்ரெஸ் பெரைரா ஒரு கோல் அடித்தார்.

    அமெரிக்காவின் பஸடேனா நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணியை 5-3 என பெனால்டி ஷூட் வாய்ப்பில் பார்சிலோனா அணி வீழ்த்தியது. பார்சிலோனா அணியின் சார்பில் முனிர் இ ஹட்டாடி, ஆர்தர் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இதேபோல் டாட்டன்ஹாம் அணியின் சார்பில் சான், ஜார்ஜ் கெவின் தலா 1 கோல் அடித்தனர். இதன்மூலம் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்ததால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அபார வெற்றி பெற்றது.



    அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்செனல், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இதில் அர்செனல் அணி  சார்பில் மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் சார்பில் 60-வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் ஒரு கோல் அடித்தார். அதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டிங் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என அபார வெற்றி பெற்றது.
    மால்கமை பார்சிலோனா அபகரித்து விட்டது. அவருக்குப் பதிலாக மெஸ்சியை அனுப்ப வேண்டும் என்று ரோமா அணி உரிமையாளர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். #Barcelona
    பிரேசில் நாட்டின் இளம் கால்பந்து வீரர் மால்கம். 21 வயதே ஆன இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிளப்பான போர்டியாக்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்த இத்தாலியின் முன்னணி கிளப்புகளில் ஒன்றான ரோமா மால்கமை வாங்க முயற்சி செய்தது.

    இதற்கு நல்ல பலன் கிடைக்கவே ஒப்பந்தத்தை நெருங்கியது. மால்கமும் மருத்துவ பரிசோதனைக்காக ரோமா செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்பெயினின் தலைசிறந்த அணியான பார்சிலோனா அவரை கொத்திக் கொண்டது. தலைசிறந்த அணி என்பதால் மால்கம் உடனடியாக ஒப்பந்தத்தை பூர்த்தி செய்தார்.



    இதை பொறுத்துக் கொள்ள முடியாத ரோமா அணியின் தலைவர், மால்கமை எங்களிடம் இருந்து பார்சிலோனா அபகரித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக மெஸ்சி அனுப்ப வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளார்.
    பார்சிலோனா அணி 65 மில்லியன் பவுண்டுக்கு வில்லியனை வாங்க விருப்பம் தெரிவித்ததை செல்சி அணி நிராகரித்து விட்டது. #Barcelona #chelsea #Willian
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி மிட்பீல்டர் வில்லியன். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ‘லா லிகா’ புகழ் பார்சிலோனா அணி வாங்க விரும்புகிறது. இதற்காக இரண்டு முறை செல்சிக்கு தூதுவிட்டது. ஆனால் செல்சி அதற்கு அசையவில்லை.

    மூன்றாவது முறையாக 65 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியது. புதிதாக செல்சி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மவுரிசியோ சர்ரிவிற்கு வில்லியனை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லை. இதனால் 65 மில்லியன் பவுண்டு என்பதை நிராகித்து விட்டது.



    ஒருவேளை 70 மில்லியன் பவுண்டு கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகிறது. 29 வயதாகும் வில்லியன் கடந்த 2013-ல் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 166 போட்டிகளில் விளையாடி 25 கோல் அடித்துள்ளார்.
    பிலிப்பே கவுட்டினோவிற்கு 239 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கும் பிஎஸ்ஜி விருப்பத்தை ஏற்க மறுத்தது பார்சிலோனா. #Barcelona #PSG
    பிரான்ஸ் நாட்டின் கால்பந்த் கிளப் அணியான பிஎஸ்ஜி மிகப்பெரிய பணக்கார கிளப் அணியாகும். இந்த அணி கடந்த சீசனில் கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 200 மில்லின் பவுண்டு கொடுத்து பிரேசில் வீரர் நெய்மரை பார்சிலோனாவில் இருந்து வாங்கியது.

    நெய்மர் சென்றதால் லிவர்பூல் அணியில் விளையாடிய மற்றொரு பிரேசில் வீரரான பிலிப்பே கவுட்டினோவை 142 மில்லியன் பவுண்டு கொடுத்து பார்சிலோனா வாங்கியது.

    கவுட்டினோ கடந்த 2-வது பாதி நேரத்தில் 22 போட்டிகளில் 10 கோல் அடித்துள்ளார். 6 கோல் அடிக்க துணைபுரிந்துள்ளார். தற்போது கவுட்டினோவை வாங்க பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக 239 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருப்பதாக பார்சிலோனாவிற்கு ஆசை தூதுவிட்டது.



    6 மாதத்திலேயே சுமார் 100 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்றாலும், பார்சிலோனா மறுத்துவிட்டது. தற்போது கவுட்டினோவின் டிரான்ஸ்பர் விலை 352 மில்லியன் பவுண்டு எனவும் உயர்த்திவிட்டது.

    ஏற்கனவே பிஎஸ்ஜி அணி வீரர்கள் டிரான்ஸ்பரில் விதிமுறையை மீறியதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த டிரான்ஸ்பர் நடப்பதில் சந்தேகமே.
    லா லிகாவில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று கிரிஸ்மாமன் உறுதிப்படுத்தியுள்ளார். #Laliga #AtleticoMadrid
    பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிரிஸ்மான். 27 வயதாகும் இவர் 2009 முதல் 2014 வரை சுமார் ஐந்து வருடங்கள் ரியல் சோசியேடாட் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2014-ல் சீசனுக்குப் பிறகு அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு மாறினார். கடந்த நான்கு வருடங்களாக அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 142 போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார்.

    கடந்த வருடத்தில் இருந்தே கிரிஸ்மான் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு மாறப்போவதாக செய்தி வந்தது. இதை கிரிஸ்மான் திட்டவட்டமாக மறுத்தார். தற்போது பார்சிலோனா அணிக்கு மாற இருப்பதாக செய்திகள் உலா வந்தனர். ஆனால் அட்லெடிகோ மாட்ரிட் அணியில்தான் நீடிப்பார் என்று அந்த அணி கூறி வந்தது.



    இந்நிலையில் நான் பார்சிலோனா அணிக்கு மாறப்போவதில்லை. அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ‘‘என்னுடைய ரசிகர்கள், என்னுடைய அணி, என்னுடைய வீடு அட்லெடிகோ மாடரிட்’’ என்று கிரிஸ்மான் தெரிவித்துள்ளார்.
    போர்ப்ஸ் பத்திரிகையின் ஆய்வின்படி 4.12 பில்லியன் டாலருடன் மான்செஸ்டர் யுனைடெட் முதல் இடம் பிடித்துள்ளது. #MUFC #RealMadrid
    கால்பந்து கிளப் அணிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேபோல் யுவான்டஸ், பேயர்ன் முனிச் அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    போர்ப் பத்திரிகை கால்பந்து கிளப் அணிகளில் எது மதிப்புமிக்க அணி என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் 4.12 பில்லியன் கோடியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய பணமதிப்பில் சுமார் 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயாகும். கடந்த 2016-17 சீசனை விட 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரியல் மாட்ரிட் 4.08 பில்லியன் டாலருடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 4.06 பில்லியன் டாலருடன் 3-வது இடத்திலும் உள்ளது.



    முதல் 10 இடங்களை பிடித்துள்ள அணிகள் விவரம்:-

    1. மான்செஸ்டர் யுனைடெட் (4.12 பில்லியன் டாலர்)
    2. ரியல் மாட்ரிட் (4.08 பில்லியன் டாலர்)
    3. பார்சிலோனா (4.06 பில்லியன் டாலர்)
    4. பேயர்ன் முனிச் (3.06 பில்லியன் டாலர்)
    5. மான்செஸ்டர் சிட்டி (2.47 பில்லியன் டாலர்)
    6. அர்செனல் (2.23 பில்லியன் டாலர்)
    7. செல்சியா (2.06 பில்லியன் டாலர்)
    8. லிவர்பூல் (1.94 பில்லியன் டாலர்)
    9. யுவான்டஸ் (1.47 பில்லியன் டாலர்)
    10. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (1.23 பில்லியன் டாலர்)
    ×