என் மலர்

  செய்திகள்

  சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை- பார்சிலோனா, செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி
  X

  சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை- பார்சிலோனா, செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் பல்வேறு ஆட்டங்களில் பார்சிலோனா செல்சி, லிவர்பூல், அணிகள் வெற்றி பெற்றன. #Barcelona #chelsea
  சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. பிரான்ஸின் நைஸ் நகரில் நடந்த ஒரு ஆட்டத்தில் செல்சி அணி 5-4 என பெனால்டி ஷூட் அவுட் முறையில் இன்டர் மிலான் அணியை வீழ்த்தியது. முன்னதாக ஆட்டம் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்திருந்தது. செல்சி அணியின் கோல் கீப்பர் வில்லி கேபலரோ மிலன் அணியின் கிர்னியார் பெனால்டி வாய்ப்பில் அடித்த பந்து அற்புதமாக தடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

  அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் லிவர்வூர் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டத்தில் லிவர்பூல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சாடியோ மேன், டேனியல் ஸ்டரிட்ஜ், ஷை ஓஜோ, ஹெர்டன் ஷக்ரி ஆகியோர் கோலடித்தனர். மான்செஸ்டர் யுனைடெட் அணி சார்பில் மிட் பீல்டர் ஆன்ட்ரெஸ் பெரைரா ஒரு கோல் அடித்தார்.

  அமெரிக்காவின் பஸடேனா நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணியை 5-3 என பெனால்டி ஷூட் வாய்ப்பில் பார்சிலோனா அணி வீழ்த்தியது. பார்சிலோனா அணியின் சார்பில் முனிர் இ ஹட்டாடி, ஆர்தர் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இதேபோல் டாட்டன்ஹாம் அணியின் சார்பில் சான், ஜார்ஜ் கெவின் தலா 1 கோல் அடித்தனர். இதன்மூலம் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்ததால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அபார வெற்றி பெற்றது.  அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்செனல், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இதில் அர்செனல் அணி  சார்பில் மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் சார்பில் 60-வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் ஒரு கோல் அடித்தார். அதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டிங் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என அபார வெற்றி பெற்றது.
  Next Story
  ×