search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banana"

    • அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழைக்காய், கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
    • ஓரிரு ஆண்டாக விலையில்லாததால் வாழை விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

    அவிநாசி,

    திருப்பூர், கோவை மாவட்டத்துக்கு உட்பட்டு அவிநாசி, சேவூர், அன்னூர், சிறுமுகை, சத்தியமங்கலம் உட்பட பல இடங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழைக்காய், கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. மும்பை உள்ளிட்ட இடங்களுக்கும் நேந்திரன் வாழை அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த3 ஆண்டாக கொரோனா பாதிப்பால் நேந்திரன் வாழை வர்த்தகம் பாதித்தது. ஆனால் இந்தாண்டு, கிராக்கி அதிகரித்திருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து கிலோ 60 ரூபாய்க்கு நேந்திரன் வாழை கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், கடந்த ஓரிரு ஆண்டாக விலையில்லாததால் வாழை விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இந்தாண்டு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றனர்.

    தேவதானப்பட்டி பகுதியில் கஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை- கரும்புகள் நாசமானது. #sugarcanedamage #gajastorm #rain

    தேவதானப்பட்டி:

    நாகை அருகே மையம் கொண்ட கஜா புயல் தேனி மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. சுருட்டி வீசிய சூறாவளியால் விளை நிலங்கள் நாசமானது. தேவதானபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கரும்பு மற்றும் வாழைகள் அதிகளவில் பயிரிடப்பட்டது.

    கஜா புயலால் வராகநதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், மேல்மங்கலம், வடுகபட்டி பகுதியில் கரையோர இருந்து விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நெற்பயிர்கள் சேதமானது.

    மஞ்சளாறு அணை அருகே சட்டமாவு, காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாசன பகுதியில் 800 ஏக்கரில் வாழை- செங்கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது. இதில் கரும்பு பொங்கல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

    கொடைக்கானல் மலை பகுதியில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழையால் மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. எனவே மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் கரும்பு, வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. இதனால் 800 ஏக்கர் நாசமானதால் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.

    வறட்சியால் பாதிக்கபட்ட விவசாயிகள் இந்த ஆண்டு ஓரளவு விளைச்சல் வரும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவை அனைத்தும் நாசமானதால் விவசாயிகள் என்ன செய்வது என தவித்தபடி உள்ளனர்.  #sugarcanedamage  #gajastorm #rain

    வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகி உள்ளது.
    முக்கனிகளில் ஒன்று வாழைப் பழம். வாழைப் பழம் தமிழ் கலாசாரத்தோடு தொடர்புடையது. தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தை படைக்கிறோம். திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சீர் வரிசையாகக் கொண்டு செல்வதும் வாழைப் பழத்தைத்தான். அன்றே வாழைப் பழத்தின் மகிமையை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியே இது. வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்து, டிரிப்தோபன், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட அபூர்வமான பழமாக வாழைப் பழம் இருக்கிறது.

    வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகி உள்ளது. அதனால்தான் விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப் பழம் உட்கொள்கிறார்கள். மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

    வாழைப் பழத்தில் உள்ள டிரிப்தோபன் எனும் சத்து மன அழுத்தத்தை குறைத்து மனதை மிருதுவாக்குகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினை தூண்டுகிறது. ரத்த சோகை வராமல் தடுக்கிறது. வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

    மலச் சிக்கலுக்கு வாழைப் பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும். ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டீன் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைட்ரேட் சத்தும், 3 மடங்கிற்கு அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. விலையும் ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு.
     
    திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டில் வாழைத்தார் குடோன் கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி காவிரிக்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் விளையும் வாழைத்தார்கள் திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏலத்தில் விடுவார்கள். இதற்காக திருக்காட்டுப் பள்ளி மார்க்கெட் பகுதியில் ஏலக்கடைகள் உள்ளன.

    இங்கு வாழைத்தார் மட்டும் அல்லாமல் தேங்காய், மாங்காய், இலை, காய்கறிகள் என் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் ஏலத்தில் விடப்படும். இங்கு வாழைத்தார்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க இரண்டு அறைகள் உள்ளன. இந்த அறைகளில் வாழைத்தார்களை அடுக்கி வாழைச்சருகுகளை போட்டு மூடினால் புகை மூட்டத்தில் காய்கள் பழுத்துவிடும்.

    இயற்கையாக பழுக்க வைக்கும் இரண்டு அறைகளும் மேற்கூரை இடிந்து போய் உள்ளது. தினமும் ஏலத்தில் எடுக்கும் வாழைத்தார்களை பழுக்க வைக்க முடியாமல் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் வியாபாரிகள் வாழைத்தார்களை பழுக்க வைக்க வேறு வழிகளை கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பண்டிகை நாட்களுக் குள்ளாக திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் பகுதியில் உள்ள வாழைத்தார்களை பழுக்க வைக்கும் குடோனை சீர் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். #Tamilnews

    சேலத்தில் இன்று பழ குடோன்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2¾ டன் மாம்பழங்கள், வாழை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலத்தில் மாம்பழ சீசன் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

    இதனால் கடை வீதி, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ஜங்சன், ஏற்காடு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாம்பழ குடோன்களில் இயற்கைக்கு மாறான வகையில் உடலுக்கு கேடு ஏற்படும் வகையில் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனுக்கு புகார்கள் சென்றது.

    இந்தநிலையில் இன்று காலை 5 மணியளவில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலு, சரவணன், இளங்கோ உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் சேலம் சின்ன கடை வீதி பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் அனுமதிக்கப்படாத எத்திலின் கரைசல் மற்றும் சோடா உப்பு கொண்டு செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 1 டன்னும், வாழைப்பழம் 1.75 டன்னும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. பின்னர் செயற்கையான முறையில் பழங்களை இது போல பழுக்க வைத்தால் வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். இதனால் சேலத்தில் மாம்பழ வியாபாரிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பன் கூறியதாவது:-

    பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும், சிலர் அனுமதிக்கப்படாத சோடா உப்பினை, மாம்பழங்கள் மீது தெளித்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கின்றனர். இதனை சாப்பிடும் நபர்களுக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு ஏற்படும்.

    பழங்களை இயற்கையான முறையிலும், எத்திலின் கியாஸ் சேம்பரிலும் பழுக்க வைக்க வேண்டும். இன்று நடத்தப்பட்ட ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும் பாதுகாப்பற்ற முறையில் பழங்களை பழுக்க வைத்தது உணவு பாதுகாப்பு வணிக சான்றிதழ் இல்லாமல் இயங்கியது ஆகிய குற்றத்திற்காக உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மருந்து தெளிப்பான் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு, நடவடிக்கைகள் தொடரும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×