என் மலர்
நீங்கள் தேடியது "sugarcane damage"
- மின்சார கம்பி உரசியதில் கரும்புகள் தீப்பிடித்தது.
- கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே பட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவரின் சொந்தமான நிலத்தில் கரும்பு விவசாயம் செய்துள்ளார். இன்று காலை அப்பகுதியில் அதிக காற்று வீசுவதால் மேலே செல்லும் மின்சார கம்பி உரசியதில் கரும்புகள் தீப்பிடித்தது. இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த நிலையை அலுவலர் சண்முக தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அதற்குள் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் கரும்பு நிலங்கள் முழுவதும் தீயில் இருந்து தப்பியது.
- சங்கராபுரம் அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- 2 ஏக்கர் கரும்பு சோகை எரிந்து நாசமாயின.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை மகன் கோவிந்தசாமி. இவர் அதே பகுதியில் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் திடீரென்று கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் 2 ஏக்கர் கரும்பு சோகை எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
நாகை அருகே மையம் கொண்ட கஜா புயல் தேனி மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. சுருட்டி வீசிய சூறாவளியால் விளை நிலங்கள் நாசமானது. தேவதானபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கரும்பு மற்றும் வாழைகள் அதிகளவில் பயிரிடப்பட்டது.
கஜா புயலால் வராகநதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், மேல்மங்கலம், வடுகபட்டி பகுதியில் கரையோர இருந்து விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நெற்பயிர்கள் சேதமானது.
மஞ்சளாறு அணை அருகே சட்டமாவு, காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாசன பகுதியில் 800 ஏக்கரில் வாழை- செங்கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது. இதில் கரும்பு பொங்கல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
கொடைக்கானல் மலை பகுதியில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழையால் மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. எனவே மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் கரும்பு, வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. இதனால் 800 ஏக்கர் நாசமானதால் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.
வறட்சியால் பாதிக்கபட்ட விவசாயிகள் இந்த ஆண்டு ஓரளவு விளைச்சல் வரும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவை அனைத்தும் நாசமானதால் விவசாயிகள் என்ன செய்வது என தவித்தபடி உள்ளனர். #sugarcanedamage #gajastorm #rain






