என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்கம்பி உரசி கரும்புகள் சேதமானதை படத்தில் காணலாம்.
மின்கம்பி உரசி கரும்புகள் சேதம்
- மின்சார கம்பி உரசியதில் கரும்புகள் தீப்பிடித்தது.
- கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே பட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவரின் சொந்தமான நிலத்தில் கரும்பு விவசாயம் செய்துள்ளார். இன்று காலை அப்பகுதியில் அதிக காற்று வீசுவதால் மேலே செல்லும் மின்சார கம்பி உரசியதில் கரும்புகள் தீப்பிடித்தது. இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த நிலையை அலுவலர் சண்முக தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அதற்குள் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் கரும்பு நிலங்கள் முழுவதும் தீயில் இருந்து தப்பியது.
Next Story






