சங்கராபுரம் அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து

சங்கராபுரம் அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2 ஏக்கர் கரும்பு சோகை எரிந்து நாசமாயின.
சங்கராபுரம் அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை மகன் கோவிந்தசாமி. இவர் அதே பகுதியில் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் திடீரென்று கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் 2 ஏக்கர் கரும்பு சோகை எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com