search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badminton"

    பாரா ஆசிய விளையாட்டில் போட்டியில் நேற்று மட்டும் 5 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianParaGames2018 #ParulParmar
    ஜகர்தா:

    3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த செஸ் போட்டியில் பெண்களுக்கான ரேபிட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜெனிதா அன்டோ இறுதி சுற்றில் 1-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் மானுருங் ரோஸ்லின்டாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். செஸ் போட்டியில் ஆண்களுக்கான ரேபிட் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் கிஷான் கன்கோலி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிஆட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் பார்மர் 21-9, 21-5 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை வான்டே காம்தமை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தார்.

    ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் யாதவ் 29.84 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கமும், அமித் பால்யான் 29.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும் வசப்படுத்தினர். ஆண்களுக்கான உருளை தடி எறிதலில் (கிளப் துரோ) இந்தியாவின் அமித் குமார் 29.47 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்றொரு இந்திய வீரர் தரம்பிருக்கு (24.81 மீ.) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் வெண்கலப்பதக்கம் பெற்றார். அவர் ஈட்டி எறிதலிலும் வெண்கலம் வென்று இருந்தார். டெல்லியை சேர்ந்த 48 வயதான தீபா மாலிக் ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்தியா 5 தங்கம் உள்பட 13 பதக்கங்களை வென்றது.

    இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை இந்தியா 13 தங்கம், 20 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 63 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. சீனா 161 தங்கம், 84 வெள்ளி, 55 வெண்கலத்துடன் மொத்தம் 300 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறது.  #AsianParaGames2018 #ParulParmar
    சீன தைபே பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து காலிறுதியோடு வெளியேறினார். #AjayJayaram
    சீன தைபே பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், மலேசியாவின் லீக் ஜீ ஜியா-வை எதிர்கொண்டார். இதில் அஜய் ஜெயராம் 16-21, 9-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    முதல் சுற்றில் 16 புள்ளிகள் வரை அஜய் ஜெயராம் கடும் நெருக்கடி கொடுத்தார். அதன்பின் 16-21 என முதல் செட்டை இழந்தார். ஆனால் 2-வது செட்டில் பெரிய அளவில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 9-21 என 2-வது செட்டை இழந்தார்.

    மற்றொரு வீரரான சவுரப் வர்மா ஏற்கனவே தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
    10 ஆண்டுகளாக காதலித்து வந்த சாய்னா நேவால் தற்போது 32 வயதான காஷ்யப்பை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் டிசம்பர் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. #SainaNehwal #ParupalliKashyap #Badminton
    ஐதராபாத்:

    இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.

    ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் என சர்வதேச போட்டிகளில் பல வெற்றிகளை பதித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால் சக பேட்மின்டன் வீரரான காஷ்யப்பை காதலித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவர் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

    10 ஆண்டுகளாக காதலித்து வந்த சாய்னா நேவால் தற்போது 32 வயதான காஷ்யப்பை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் டிசம்பர் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. இரு வீட்டு பெற்றோரும் பேசி முடிவு செய்து இதை அறிவித்து உள்ளனர்.



    சாய்னா-காஷ்யப் திருமணத்துக்கு 100 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படும்.

    திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 21-ந்தேதி திருமண வரவேற்பு நடக்கிறது. சாய்னா திருமணம் செய்ய இருக்கும் காஷ்யப்பும் முன்னணி பேட்மின்டன் வீரர் ஆவார். 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றவர்.

    தினேஷ் கார்த்திக்- தீபிகா பல்லிகல், இஷாந்த்சர்மா- பிரதீமா சிங், கீதா போகட்- பவன் குமார், ஷாக்சி மாலிக்- சத்யவர்த் காடியன் ஆகியோர் வரிசையில் சாய்னா நேவால்- காஷ்யப் இணைகிறார்கள். #SainaNehwal #ParupalliKashyap #Badminton
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினார். #AsianGames2018 #PVSindhu
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், இந்தோனேசிய வீராங்கனை பிட்ரியானியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தார்.

    அதன்பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பி.வி. சிந்து, இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியாவை எதிர்கொண்டார். . பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-12, 21-15 என்ற நேர்செட்களில் பிவி சிந்து வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 34 நிமிடங்களில் போட்டியை முடித்துள்ளார் சிந்து.

    முன்னதாக நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, சீனாவின் சென் கிங்சென்- ஜியா இபான் ஜோடியிடம் 11-21, 22-24 என தோல்வியடைந்தது. #AsianGames2018 #PVSindhu
    பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் அணியை, சீனா அணி 5-0 என வீழ்த்தியது. #UberCup #INDvCHN

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பிரான்சை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 5-0 என வென்றது.

    இந்நிலையில் நேற்றைய 3-வது ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 5-0 என சீனாவிடம் தோல்வியடைந்தது. முதலில் எச்.எஸ்.பிரனோய், லாங் சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-9, 21-9 என்ற நேர் செட்களில் சீன வீரர் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஒற்றையர் பிரிவில் சாய் பிரனீத் - யூகி ஷி ஆகியோர் மோதினர். இதில் யூகி ஷி, 21-9, 15-21, 21-12 என்ற செட்களில் வென்றார். 

    கடைசி ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷியா சென், ஆஸ்திரேலியாவின் டான் லெனிடம், 21-16, 9-21, 8-21 என தோல்வியடைந்தார். இதனால் சீனா 3-0 என போட்டியை கைப்பற்றியது.

    இரட்டையர் பிரிவு போட்டிகளிலும் சீன வீரர்களே வெற்றி பெற்றனர். இதனால் இந்தியா 5-0 என சீனாவிடம் தோல்வியடைந்தது.  இதனால் இந்தியா தொடரை விட்டு வெளியேறியது. #UberCup #INDvCHN
    பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் அணி 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. #UberCup #INDvAUS

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பிரான்சை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என தோல்வியடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய 2-வது ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 5-0 என வெற்றி பெற்றது. முதலில் எச்.எஸ்.பிரனோய், ஆண்டனி தாசை எதிர்கொண்டார். இதில் 21-19, 21-13 என நேர் செட்களில் பிரனோய் வெற்றி பெற்றார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் - ஷ்லோக் ராமசந்திரன் ஜோடி 21-11, 21-15 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சவு மேத்தீவ் - செரசிங்கே சவான் ஜோடியை வீழ்த்தியது. 

    மற்றொரு ஒற்றையர் பிரிவில் சாய் பிரனீத் - ஜேகப் ஸ்கியுலரை 21-9, 21-6 என எளிதில் வென்றார். இதனால் இந்தியா 3-0 என போட்டியை கைப்பற்றியது.

    இரண்டாவது இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜார்ஜ் அர்ஜூன் - ஷுக்லா சயாம் ஜோடி 21-16, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சைமன் விங் ஹேங் - டேம் ரேமண்ட் ஜோடியை தோற்கடித்தது. 

    கடைசி ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷியா சென், ஆஸ்திரேலியாவின் தியோ கை சென்னை 21-6, 21-7 என நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    இந்தியா அடுத்த போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும். #UberCup #INDvAUS
    பேட்மிண்டனில் ஒரு சில நபர்கள் அல்ல, எல்லோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் என பிவி சிந்து தெரிவித்துள்ளார். #PVSindhu
    ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் பேட்மிண்டன் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சாய்னா நேவால் - பிவி சிந்து பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் சாய்னா வெற்றி பெற்று தங்கம் வென்றார். பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். இருவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள்.

    ஒரு சில தனிப்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் மட்டுமல்ல, எல்லோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்று பிவி சிந்து கூறியுள்ளார்.



    இதுகுறித்து பிவி சிந்து கூறுகையில் ‘‘வெற்றித் தோல்வி என்பது விளையாட்டு வாழ்க்கையின் ஒரு பகுதி. முடிவு எப்போதும் நமக்கு சாதமாக இருக்க முடியாது. நான் என்னுடைய முயற்சிகள் அனைத்தையுமே வெளிப்படுத்தினேன். ஆனால் சாய்னா சிறப்பாக விளையாடினார்.

    அன்றைய நாள் அவருக்குரியதாக இருந்தது. அவருக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து ஏராளமாக  கற்றுக் கொண்டார். தற்போது அதிலிருந்து வலிமையாக திரும்பியுள்ளேன்.

    முதல்முறையான நமது கலப்பு அணி தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. நாம் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்’’ என்றார்.
    ×