search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உபேர் கோப்பை பேட்மிண்டன் - இந்தியாவை வெளியேற்றியது சீனா
    X

    உபேர் கோப்பை பேட்மிண்டன் - இந்தியாவை வெளியேற்றியது சீனா

    பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் அணியை, சீனா அணி 5-0 என வீழ்த்தியது. #UberCup #INDvCHN

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பிரான்சை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 5-0 என வென்றது.

    இந்நிலையில் நேற்றைய 3-வது ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 5-0 என சீனாவிடம் தோல்வியடைந்தது. முதலில் எச்.எஸ்.பிரனோய், லாங் சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-9, 21-9 என்ற நேர் செட்களில் சீன வீரர் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஒற்றையர் பிரிவில் சாய் பிரனீத் - யூகி ஷி ஆகியோர் மோதினர். இதில் யூகி ஷி, 21-9, 15-21, 21-12 என்ற செட்களில் வென்றார். 

    கடைசி ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷியா சென், ஆஸ்திரேலியாவின் டான் லெனிடம், 21-16, 9-21, 8-21 என தோல்வியடைந்தார். இதனால் சீனா 3-0 என போட்டியை கைப்பற்றியது.

    இரட்டையர் பிரிவு போட்டிகளிலும் சீன வீரர்களே வெற்றி பெற்றனர். இதனால் இந்தியா 5-0 என சீனாவிடம் தோல்வியடைந்தது.  இதனால் இந்தியா தொடரை விட்டு வெளியேறியது. #UberCup #INDvCHN
    Next Story
    ×