என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உபேர் கோப்பை பேட்மிண்டன் - ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்தது இந்தியா
Byமாலை மலர்21 May 2018 11:44 PM GMT (Updated: 21 May 2018 11:44 PM GMT)
பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் அணி 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. #UberCup #INDvAUS
பாங்காக்:
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பிரான்சை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்றைய 2-வது ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 5-0 என வெற்றி பெற்றது. முதலில் எச்.எஸ்.பிரனோய், ஆண்டனி தாசை எதிர்கொண்டார். இதில் 21-19, 21-13 என நேர் செட்களில் பிரனோய் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் - ஷ்லோக் ராமசந்திரன் ஜோடி 21-11, 21-15 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சவு மேத்தீவ் - செரசிங்கே சவான் ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு ஒற்றையர் பிரிவில் சாய் பிரனீத் - ஜேகப் ஸ்கியுலரை 21-9, 21-6 என எளிதில் வென்றார். இதனால் இந்தியா 3-0 என போட்டியை கைப்பற்றியது.
இரண்டாவது இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜார்ஜ் அர்ஜூன் - ஷுக்லா சயாம் ஜோடி 21-16, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சைமன் விங் ஹேங் - டேம் ரேமண்ட் ஜோடியை தோற்கடித்தது.
கடைசி ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷியா சென், ஆஸ்திரேலியாவின் தியோ கை சென்னை 21-6, 21-7 என நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்தியா அடுத்த போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும். #UberCup #INDvAUS
Next Story
×