search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baby Shower"

    • கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை வட்டார ஆட்மா தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

    கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, பாண்ட மங்கலம், பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணை தலை வர் பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் சித்ரா மருத்துவ அறிவுரைகள் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சீர்த்தட்டு, புடவை, வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.

    முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மனோஜ் நன்றி கூறினார். விழா விற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை குழந்தை வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் ஜானகி, மேற்பார்வையாளர்கள் அன்னபூரணம், ராமாயி, மணிமேகலை இளநிலை உதவியாளர் சாந்தி மற்றும் அலுவலக உதவியாளர் முகமதுதாவூத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஜெபாவிற்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து 5 வகையான உணவு விருந்து வழங்கப்பட்டது.
    • போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருபவர் ஜெபா. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் தனது கணவர் பரிசுத்த இமானுவேல் என்பவருடன் செங்குன்றத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை போலீஸ் நிலையத்தில் வைத்து நடத்த உடன் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் விமரிசையாக நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது ஜெபாவிற்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து 5 வகையான உணவு விருந்து வழங்கப்பட்டது.

    இதில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள், ஜெபாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    • மேக்ஸ்வெல், வினி ராமன் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • இருவரது திருமணம் தமிழ் முறைப்படி நடைபெற்றது.

    பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். மேக்ஸ்வெல் தமிழ்ப் பெண் வினி ராமனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் வினி ராமன் கர்ப்பமாகியுள்ளார். அதனால் அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேக்ஸ்வெல் 2015 உலகக் கோப்பை மற்றும் 2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 339 ரன்களையும், 128 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,490 ரன்களை குவித்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடி 2159 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளையும், டி20-ல் 39 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்.

    • தென்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் ஒன்றாக இணைந்து ஏட்டு பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
    • போலீசார் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் வழங்கினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாரதி. இவருக்கும் அவருடைய உறவினரான அருண் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது பாரதி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு பிறக்க இருக்கும் முதல் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமையில் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னமயில், பெரியகுளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாட்சி தென்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் ஒன்றாக இணைந்து ஏட்டு பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

    இதில் பங்கேற்ற டி.எஸ்.பி. மற்றும் பெண் போலீசார் பாரதிக்கு நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, வளையல் அணிவித்து, மலர் தூவி குழந்தை நலமுடன் பிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் வழங்கினர். மேலும் போலீஸ் நிலையத்தில் உடன் பணியாற்றும் பெண் காவலருக்கு அனைத்து போலீசாரும் ஒன்று சேர்ந்து தாயுள்ளத்தோடும் சொந்த பந்தங்களாக கூடி நின்று வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • தோழிகளான சக பெண் காவலர்கள் சந்தனம், குங்குமம் இட்டு, கைநிறைய வளையல் போட்டு, சீர்வரிசை தட்டு, தாம்பூலம் கொடுத்தனர்.
    • வளைகாப்பு நிகழ்ச்சியில், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோரும் பங்கேற்று மோகனாவை வாழ்த்தினர்.

    வாழப்பாடி:

    சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் அடுத்த பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகனா (வயது 27). இவர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

    கர்ப்பிணியான இவரை மகிழ்விக்க, வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்திட திட்டமிட்டனர்.

    அதன்படி, நேற்று காவலர் மோகனாவை வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்பு அவருக்கு தோழிகளான சக பெண் காவலர்கள் சந்தனம், குங்குமம் இட்டு, கைநிறைய வளையல் போட்டு, சீர்வரிசை தட்டு, தாம்பூலம் கொடுத்தனர். இதையடுத்து மோகனாவுக்கு அறுசுவை விருந்து கொடுத்து மகிழ்ந்தனர்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த மோகனா சக போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோரும் பங்கேற்று மோகனாவை வாழ்த்தினர்.

    பெண் காவலருக்கு போலீஸ் நிலையத்திலேயே, சக பெண் போலீசார் வளைகாப்பு நடத்திய நிகழ்வு, பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    • கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு யாக கால பூஜையுடன் கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வளைகாப்பிற்காக பொதுமக்கள் பூ, பழம், வளையல்கள், கலவை சாதங்கள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுக்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரியம்மை உடனுறை மேலகங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு யாக கால பூஜையுடன் கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வளைகாப்பிற்காக பொதுமக்கள் பூ, பழம், வளையல்கள், கலவை சாதங்கள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுக்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    இதனைதொடர்ந்து கோமாதாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி நீராடி மாலை அணிவித்து, காலில் சலங்கை கட்டியும், பசு மாட்டிற்கு வளையல்களை அணிவித்தும் வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோமாதாவிற்கு அன்னம் ஊட்டியும் மஞ்சள் பூசியும் வழிபாடு செய்தனர்.

    • ரமேஷ் குடும்பத்தினர் பைரவன் என்ற ஆண் நாய் மற்றும் பைரவி என்ற பெண் நாய் ஆகிய 2 நாய்களை செல்லமாக வளர்த்து வருகின்றனர்.
    • வளைகாப்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மொய் பணம் வைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி (28). இவர்கள் கடந்த சில வருடங்களாக வீட்டில் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

    தற்போது ரமேஷ் குடும்பத்தினர் பைரவன் என்ற ஆண் நாய் மற்றும் பைரவி என்ற பெண் நாய் ஆகிய 2 நாய்களை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதில் பெண் நாய் பைரவி கர்ப்பம் அடைந்தது. இதை அறிந்த ரமேஷ் குடும்பத்தினர், பைரவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று பைரவிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அருகில் இருந்த உறவினர்களும் வந்திருந்து வளைகாப்பில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வளையல், பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்டவைகளை அணிவித்து பைரவிக்கு வளைகாப்பு நடத்தினர். மேலும் தக்காளி, எலுமிச்சை, புளி உள்பட 3 கலவை சாதம், இனிப்பு வகையில் கச்சாயம், கார வகையில் போண்டா, அப்பளம் உள்ளிட்டவைகளை தலைவாழை இலையில் வைத்து பரிமாறினர்.

    வளைகாப்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மொய் பணம் வைத்தனர். தங்கள் வீட்டு பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் நாய்க்கு வளைகாப்பு நடத்திய ரமேஷ் குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

    • சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குட்பட்ட இ.பி.நகரில் தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத் திமுக மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி ஒன்றிய சேர்மன் கனிமொழி சுந்தர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லலிதா சண்முக சுந்தரம், ஆகியோர் மாலை மற்றும் வலையல்களை அணிவித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் 350-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.கள் சிவானந்தம் தயாநிதி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளை கணேசன், நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மோகன், துரைமாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், ஒன்றிய குழு துணை சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், வட்டார மருத்துவ அலுவலர்கள் எம்நாத், சுரேஷ், பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சி கூட்டரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்துகொண்டு கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன், வட்டார மருத்துவ அலுவலர் பூங்குழலி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயந்தி, சரஸ்வதி உள்பட மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், வந்தவாசி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவில் மருதாடு, கடைசிகுளம், கல்லாங்குத்து, வழூர், கீழ்கொடுங்காலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 106 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

    விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் பா.கந்தன் தலைமை தாங்கினார். சென்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வீரராகவன், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கம் மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார திட்ட அலுவலர் கே.அபிராமி வரவேற்றார்.

    திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணி வேந்தன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல். ஏ. கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

    விழாவில் நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், தி.மு.க. ஒன்றியச் செயலா ளர்கள் எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மனமகிழச்சியுடன் இருந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்–துறை ஒருங்–கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேராவூரணி என்.அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக பேராவூரணி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நவீனாரெட்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சேர்ந்த 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணியும் விழா நடைபெற்றது. பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.சவுந்தராஜன் பேசியதாவது:-

    கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவு உண்ண வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மனமகி ழச்சியுடன் இருந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றார். தி.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுப சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீது ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் வழங்கப்பட்டது. நிறைவாக சேதுபாவாசத்திரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அனுசியா நன்றி கூறினார்.

    • 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை
    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த சாலை கிராமம் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு 300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசை வழங்கினார்.

    அரக்கோணம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணி அலுவலர்கள் தான்யா, அம்சபிரியா, ஒன்றிய குழு தலைவர்கள் நிர்மலா சவுந்தர், பெ.வடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா பாபு, சுந்தராம்பாள் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் சவுந்தர், தமிழ்ச்செல்வன், பெருமாள், பசுபதி, நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி, துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, வாழப்பாடி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.

    வாழப்பாடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்ரவர்த்தி, பேளூர் நகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, பேளூர் பேரூராட்சி தலைவர் ஜெயசெல்வி பாலாஜி , வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    சிங்கிபுரம் ராம்கோ நிறுவன பணியாளர்கள் மணிவேல், முனியசாமி, வடிவேல், துளி அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் ஆசிரியர் ராஜசேகரன், உதயா அறக்கட்டளை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர், 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கினர்.

    ×