search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "koyambedu police station"

    • ஜெபாவிற்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து 5 வகையான உணவு விருந்து வழங்கப்பட்டது.
    • போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருபவர் ஜெபா. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் தனது கணவர் பரிசுத்த இமானுவேல் என்பவருடன் செங்குன்றத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை போலீஸ் நிலையத்தில் வைத்து நடத்த உடன் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் விமரிசையாக நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது ஜெபாவிற்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து 5 வகையான உணவு விருந்து வழங்கப்பட்டது.

    இதில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள், ஜெபாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை கோயம்பேட்டில் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.3¾ லட்சம் பணத்தை டிரைவர் பயணியிடம் ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவரை போலீசார் பாராட்டினர்.
    போரூர்:

    தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அசாருதீன். இவர் புதிய கார் வாங்குவதற்காக சென்னைக்கு வந்தார். கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர் ரூ. 3 லட்சத்து 80 ஆயிரத்துடன் ஆட்டோவில் ரோகிணி தியேட்டர்எதிரே உள்ள கார் ஷோரூமுக்கு சென்றார்.

    ஆட்டோவில்இருந்து இறங்கி பார்த்த போது பணப் பையை காணவில்லை. இதுபற்றி புகார் கொடுப்பதற்காக முகமது அசாருதீன் கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு ஏற்கனவே பணப்பையை உரியவரிடம் ஒப்பதற்காக அவர் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் பார்த்தீபன் என்பவர் இருந்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி ரூ. 3 லட்சதத்து 80 ஆயிரத்தை முகமது அசாருதீனிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர் பார்த்தீபனை போலீசார் பாராட்டினர்.
    ×