search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyappan"

    • குருசாமிகள் கன்னிசாமியிடம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்க கூடாது.
    • சுயநலங்களுக்கு உட்படாமல் அய்யப்பனுக்கும், அய்யப்பக்தர்களுக்கும் குருசாமிகள் சேவை செய்ய வேண்டும்.

    சபரிமலைக்கு 18 வருடங்களாக செல்லும் பக்தர்கள் குருசாமியாக இருப்பார்கள். அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இதோ:

    *குருசாமிகள் ஆண்டுதோறும் குறைந்தது 10 கன்னி சாமிகளை முறையாக 41 நாட்கள் விரதம் கடைபிடிக்கவைத்து சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

    *குருசாமிகள் கன்னிசாமியிடம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்க கூடாது.

    *குருசாமிகள் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து மற்ற அய்யப்ப பக்தர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்.

    *சுயநலங்களுக்கு உட்படாமல் அய்யப்பனுக்கும், அய்யப்பக்தர்களுக்கும் குருசாமிகள் சேவை செய்ய வேண்டும்.

    *கன்னிசாமிகளுக்கும், மற்ற சீடர்களுக்கும் அய்யப்பனின் பெருமை, சபரிமலை யாத்திரையின் உயர்வ விரத நெறி முறைகள் பற்றி குருசாமிகள் எடுத்துக்கூறி அவர்களை நல்லவழியில் நடத்தி செல்வது அவசியமாகும்.

    • 41 நாள் மண்டல காலத்தின் நிறைவு பூஜைதான் மண்டல பூஜையாக கொண்டாடப்படுகிறது.
    • சபரிமலை செல்ல முடியாத பெண்கள் தங்க அங்கியை வரவேற்று தரிசனம் செய்கிறார்கள்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடக்கும் பூஜைகளில் மண்டல, மகரவிளக்கு பூஜை முக்கியமானது. 41 நாள் மண்டல காலத்தின் நிறைவு பூஜைதான் மண்டல பூஜையாக கொண்டாடப்படுகிறது. இதையட்டி அன்று அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியின் எடை 420 பவுன் ஆகும். இது திருவிதாங்கூர் மகாராஜாவினால் அய்யப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டதாகும். இந்த அங்கி மண்டல பூஜைக்காக 2 நாட்களுக்கு முன்பு ஆரன் முழா அருள்மிகு பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

    சபரிமலை கோவில் மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விசேஷ அலங்காரத்துடன் இதை சந்நிதானத்துக்கு கொண்டு வருகிறார்கள். சபரிமலை செல்ல முடியாத பெண்கள் தங்க அங்கியை வரவேற்று தரிசனம் செய்கிறார்கள்.

    • சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் விண்ணை அதிர செய்யும்.
    • காந்தமலை பொன்னம்பல மேட்டில் மிகப் பிரகாசமாக ஒளியாக மகரஜோதி தென்படுகிறது.

    சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் மகர சங்கராந்தி தினத்தன்று (தை மாதாம் 1-ந் தேதி) பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பல லட்சம் மதிப்புள்ள கற்பூரம் கொளுத்தப்படும். மாலை 6.40 மணியில் இருந்து 6.50 மணிக்குள் சபரிமலை கோவிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் மிகப் பிரகாசமாக ஒளியாக மகரஜோதி தென்படுகிறது. இந்த ஜோதியை தரிசனம் செய்யும் லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பும் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் விண்ணை அதிர செய்யும்.

    பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ அய்யப்பன் அன்று காந்தமலையில் இருந்து சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.

    • விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.
    • ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.

    சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஅய்யப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்கர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி அய்யப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.

    இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்து நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும்.

    விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரதகாலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.

    விரதத்தின்போது வீட்டு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும்.

    விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக்கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம்.

    மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம். 

    • பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார்.
    • இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார்.

    அய்யப்பனின் தரிசனத்தைப்போல அவரின் அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.

    காலவ மகிஷியின் மகளான லீலாவதி, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள்.

    பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.

    காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான் இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்குகிறாள்.

    சதி திட்டம் தீட்டப்படுகிறது. ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.

    பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யப்பனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள்.

    அய்யப்பன் தான் நித்ய பிரம்மச்சாரி என்றைக்கு தன்னைத்தேடி கன்னி அய்யப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைப்புறத்து மஞ்சள்மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.

    இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு மிரண்டராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அய்யப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டுகிறார். ராஜசேகர மன்னன் கலங்குகிறான்.

    பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான். பரசுராமர் அங்கு அய்யப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகினியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று அய்யப்பன் ஜோதிவடிவில் அருள்பாலிக்கிறார்.

    • அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா, பந்தளம், சபரிமலை என 5 இடங்களில் அய்யப்பன் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • ஆரியங்காவு அய்யப்பனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.

    செங்கோட்டை:

    அண்டை மாநிலமான கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சாஸ்தாவான அய்யப்பன் ஐந்துமலைக்கு அதிபதியாவர். அவர் அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா, பந்தளம், சபரிமலை என 5 இடங்களில் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கல்யாணம்

    இதில் ஆரியங்காவு கோவிலில் குடி கொண்டுள்ள அய்யப் பனுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மகோற்சவ விழா கூடுதல் தனிசிறப்பாகும். இந்த விழா முடிவில் பகவதி அம்மனுடன் திருமணம் நடைபெறுவது ஐதீகம்.

    நிறைவு நாளுக்கு முன்பு அய்யப்பன் கோவிலில் நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் சுவாமி- அம்பாள் தனித்தனியாக அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் கோவிலை வலம் வந்து வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.

    பாண்டி முடிப்பு

    அதன்படி கடந்த 16-ந் தேதி மகோற்சவம் விழா தொடங்கியதையடுத்து ஆரியங்காவு அய்யப்பனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் பாண்டி முடிப்பும் நடைபெற்றது.பெண் அழைப்பு நிகழ்ச்சியானது ஆரியங்காவு அருகே மாம்பழத்துறை பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக நடந்தது.

    தொடர்ந்து மணப் பெண்ணிற்கு பட்டு, மாலை வழங்குதல், சீர்வரிசை செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறியது.நேற்றிரவு அய்யப்பனும், அம்பாளும் அலங்கரிக்கபட்ட தனி சப்பரத்தில் கோவில் வெளிபிரகாரத்தை வலம் வந்து பின் வசந்த மண்டபத்தில் கல்யாண வைபோகம் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்று அய்யப் பனின் திருமண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். முடிவில் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கபட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

    • ஐயப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
    • ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

    திண்டுக்கல் அருகே குட்டியப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த ஸ்ரீஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழுவினர், ஆண்டுதோறும் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி மண்டல பூஜை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மதியம் 1.30 மணிக்கு ஸ்ரீஹரிஹரசுதன் மணிமண்டபத்தில் எழுந்தருளிய ஐயப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.

    அதன்பின்னர் மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக சாலை சந்தன கருப்பணசாமி கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு, மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக மகா காளியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

    அங்கு மகா காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியை சுற்றிலும் பூக்களை வைத்திருந்தனர். மேலும் எங்க கருப்பணசாமி எனும் பக்தி பாடல் ஒலித்து கொண்டிருக்க, காளி மற்றும் கருப்பணசாமி வேடம் அணிந்தவர்கள் ஆக்ரோஷமாக ஆடி கொண்டிருந்தனர்.

    அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்த மஞ்சள் நிற சேலையை ஐயப்ப பக்தர்கள் எடுத்து வந்தனர். பின்னர் தகதகவென காணப்பட்ட பூக்குழியில் அந்த மஞ்சள் சேலையை விரித்தனர்.

    அடுத்த நொடியே மஞ்சள் சேலை தீப்பிடித்து எரிந்தது. அவ்வாறு தீப்பிடித்து எரிந்த சேலை மேலே எழும்பி வானத்தில் பறந்து சென்றது. அது வானில் நெருப்பு பிழம்பு பறப்பது போன்று இருந்தது. இதனை ஐயப்ப பக்தர்கள் உள்பட ஏராளமான பொதுமக்களும் அதிசயத்துடன் பார்த்தனர்.

    மேலும் காணிக்கையாக செலுத்திய மஞ்சள் சேலையை மாரியம்மன் ஏற்று கொண்டதாக பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். பூக்குழியில் போர்த்திய மஞ்சள் சேலை தீப்பற்றி வானில் பறந்த சம்பவம் அனைவரையும் பரவசமடைய செய்ததது. இதைத்தொடர்ந்து பூக்குழி கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

    • அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கூடலூர்,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணா நகர் செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சார்பில், திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பஜனை வழிபாடு மூலம் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சூண்டி திருக்கல்யாண மலையை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெரிய சூண்டி சித்தி விநாயகர் கோவிலை இரவு 11 மணிக்கு அடைந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அய்யப்பன் அவதார நட்சத்திர தின விழா நடந்தது.
    • அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தின் சார்பில் கலியுக வரதன் சபரிமலை அய்யப்பன் அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு விசேஷ பூஜை நடந்தது. சங்கத் தலைவர் முத்து இருளாண்டி தலைமை தாங்கினார்.

    செயலாளர் முத்துராஜ், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை-தீபாராதனை நடந்தது. அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர். அன்னதானம் நடந்தது.

    • கொடி மரத்தின் உச்சியில் ஐயப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது.
    • சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான்.

    மகர சங்கரம பூஜை

    சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு (தை முதல் நாள்) கடக்கும் வேளையில் மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இவ்வேளையில் புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிக் குளிப்பவர்களும், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்பவர்களும் புண்ணிய பலன்களைப் பெறுகிறார்கள். சங்கரம வேளையில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யினை ஒரு துளி சாப்பிட்டால் கூட எல்லாவித நோய்களும் குணமாகும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

    திருவாபரணங்கள்

    ஐயப்பனின் திருமுகம், ஐயப்பனின் உடல் பாகம் பொன்னால் செய்யப்பட்ட 2 வாள்கள், தங்கத்தால் செய்யப்பட்ட 2 யானைகள், 2 லட்சுமி உருவங்கள், தங்க ஒட்டியாணம், தங்கச்சங்கு, அழகிய முத்து மணி மாலைகள் இன்னும் பல கலைப்பூர்வமான ஆபரணங்கள் அதில் உள்ளன.

    கடுத்த சுவாமிக்கு சுருட்டு

    ஐயப்பனுடைய படையில் சிறந்த சேனாதிபதியாகவும், பிரதான வீரராகவும் கடுத்த சுவாமி திகழ்ந்தார் என்று சொல்வார்கள். மேலும் பந்தள ராஜாவிற்காகயுத்தங்களில் வென்று வாகை சூடிய தாகக் கடுத்தசுவாமி பற்றி கூறப்படுகிறது. கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு. இவருக்குப் பொரி, அவல், மிளகு, பழம் நைவேத்தியமாக படைக்கிறார்கள். பதினெட்டுப் படிக்குக் கீழேயும் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். கடுத்த சுவாமிக்குச் சிலர் சுருட்டும் காணிக்கையாக வைக்கின்றனர். பதினெட்டாம் படிக்குத் தொட்டது போல் வடக்கு பக்கத்தில் கருப்பசாமி பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார். கருப்ப சாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.

    கொடி மரம் விசேஷம்

    சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான். கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள். கொடி மரத்தின் உச்சியில் ஐயப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது. கொடிமரத்தின் வலதுபுறம் கற்பூர ஆழி உள்ளது. சபரிமலையில் கொடிமரத்தின் முன் வீழ்ந்து பக்தர்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது. இக்கொடி மரத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம், அதன் நீண்ட பாகம் விஷ்ணுவைக் குறிக்கும். எனவே சபரிமலை ஆலய கொடிமரம் மும் மூர்த்திகளை குறிக்கிறது.

    • சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகள் சிறப்பு வாய்ந்தவை.
    • 18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு.

    18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது.

    ஒன்றாம் திருப்படி - குளத்துப்புழை பாலகன்

    இரண்டாம் திருப்படி - ஆரியங்காவு ஐயப்பன்

    மூன்றாம் திருப்படி - எரிமேலி சாஸ்தா

    நான்காம் திருப்படி - அச்சங்கோயில் அரசன்

    ஐந்தாம் திருப்படி - ஐந்துமலை அதிபதி

    ஆறாம் திருப்படி - வீரமணிகண்டன்

    ஏழாம் திருப்படி - பொன்னம்பல ஜோதி

    எட்டாம் திருப்படி - மோகினி பாலன்

    ஒன்பதாம் திருப்படி - சிவபாலன்

    பத்தாம் திருப்படி - ஆனந்தமயன்

    பதினோராம் திருப்படி - இருமுடிப்பிரியன்

    பனிரெண்டாம் திருப்படி - பந்தளராஜ குமாரன்

    பதிமூன்றாம் திருப்படி - பம்பாவாசன்

    பதினான்காம் திருப்படி - வன்புலி வாகனன்

    பதினைந்தாம் திருப்படி - ஹரிஹரசுதன்

    பதினாறாம் திருப்படி - குருநாதன்

    பதினேழாம் திருப்படி - சபரிகிரி வாசன்

    பதினெட்டாம் திருப்படி - ஐயப்பன்

    • நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஐயப்பன் மட்டும்தான்.
    • உலக உயிர்கள் அனைத்தையும் காக்கும் காவலனாக விளங்குகிறார்.

    சபரிமலை ஐயப்பன் தியானபிந்து ஆசனத்தில் அபயசின் முத்திரையிலும், கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராணா முத்திரையிலும், குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள்பாலிக்கிறார். இப்படி நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஐயப்பன் மட்டும்தான்.

    ஐயப்பன் லிங்க வடிவில் ஆண் தன்மையாகவும், சங்கு வடிவில் பெண் தன்மையாகவும் இரண்டறக் கலந்து உலக உயிர்கள் அனைத்தையும் காக்கும் காவலனாக விளங்குகிறார். ஐயப்பன் சிவனைப்போல் தியான கோலத்திலும் விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் அருள் பாலிப்பது மிகவும் விசேஷமாகும். மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.

    யோக நிலையில் காலை வைத்து, வயிற்றை அழுத்தி, மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்த சக்தியை ஞான சக்தியாக மாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் நிலையில் இருப்பதால் தான் தன்பக்கம் பக்தர்களை இவ்வளவு அதிகமாக ஈர்க்க முடிகிறது.

    ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.

    ×