என் மலர்

  வழிபாடு

  சபரிமலை ஐயப்பன் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்
  X

  சபரிமலை ஐயப்பன் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடி மரத்தின் உச்சியில் ஐயப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது.
  • சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான்.

  மகர சங்கரம பூஜை

  சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு (தை முதல் நாள்) கடக்கும் வேளையில் மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இவ்வேளையில் புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிக் குளிப்பவர்களும், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்பவர்களும் புண்ணிய பலன்களைப் பெறுகிறார்கள். சங்கரம வேளையில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யினை ஒரு துளி சாப்பிட்டால் கூட எல்லாவித நோய்களும் குணமாகும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

  திருவாபரணங்கள்

  ஐயப்பனின் திருமுகம், ஐயப்பனின் உடல் பாகம் பொன்னால் செய்யப்பட்ட 2 வாள்கள், தங்கத்தால் செய்யப்பட்ட 2 யானைகள், 2 லட்சுமி உருவங்கள், தங்க ஒட்டியாணம், தங்கச்சங்கு, அழகிய முத்து மணி மாலைகள் இன்னும் பல கலைப்பூர்வமான ஆபரணங்கள் அதில் உள்ளன.

  கடுத்த சுவாமிக்கு சுருட்டு

  ஐயப்பனுடைய படையில் சிறந்த சேனாதிபதியாகவும், பிரதான வீரராகவும் கடுத்த சுவாமி திகழ்ந்தார் என்று சொல்வார்கள். மேலும் பந்தள ராஜாவிற்காகயுத்தங்களில் வென்று வாகை சூடிய தாகக் கடுத்தசுவாமி பற்றி கூறப்படுகிறது. கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு. இவருக்குப் பொரி, அவல், மிளகு, பழம் நைவேத்தியமாக படைக்கிறார்கள். பதினெட்டுப் படிக்குக் கீழேயும் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். கடுத்த சுவாமிக்குச் சிலர் சுருட்டும் காணிக்கையாக வைக்கின்றனர். பதினெட்டாம் படிக்குத் தொட்டது போல் வடக்கு பக்கத்தில் கருப்பசாமி பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார். கருப்ப சாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.

  கொடி மரம் விசேஷம்

  சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான். கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள். கொடி மரத்தின் உச்சியில் ஐயப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது. கொடிமரத்தின் வலதுபுறம் கற்பூர ஆழி உள்ளது. சபரிமலையில் கொடிமரத்தின் முன் வீழ்ந்து பக்தர்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது. இக்கொடி மரத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம், அதன் நீண்ட பாகம் விஷ்ணுவைக் குறிக்கும். எனவே சபரிமலை ஆலய கொடிமரம் மும் மூர்த்திகளை குறிக்கிறது.

  Next Story
  ×