search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness campaign"

    • ‘மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்’ என்ற பதாகையை ஏந்தி நின்றார்
    • நீதிபதி வழங்கி உள்ள இந்த தீர்ப்பு பைக் ரேஸ் பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.

    சென்னை :

    சென்னை தேனாம்பேட்டை- அண்ணாசாலையில் கடந்த மாதம் 7-ந்தேதி அன்று மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்று சாகசத்தில் ஈடுபட்ட வழக்கில் 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஐதராபாத்தை சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினாய் (வயது 22) என்ற 'யூடியூபர்' பிரபலத்தை போலீசார் தேடி வந்தனர்.

    அவர் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் ஜாமீன் வழங்கிய நிலையில், 'அந்த வாலிபர் எங்கு மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டாரோ, அதே இடத்தில் 3 வாரங்கள் திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் போக்குவரத்து விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும்.

    மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்க்கு உதவியாக இருக்க வேண்டும்' என்று நிபந்தனையும் விதித்தார்.

    அதன்படி வாலிபர் கோட்லா அலெக்ஸ் பினாய் காலை மற்றும் மாலை வேளையில் அண்ணாசாலை-தேனாம்பேட்டை சந்திப்பில், 'சாலை விதிகளை கடைபிடிப்போம். சாலை விதிகளை மதிப்போம். விபத்துகளை தவிர்ப்போம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    'இரு சக்கர வாகனத்தை கொண்டு சாலையில் சாகசங்கள் எதுவும் செய்ய மாட்டேன்' என்ற வாசகங்கள் அடங்கிய பாதகையை கையில் ஏந்தியபடி நின்றார்.

    மேலும் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டக்கூடாது. குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களையும் வாகன ஓட்டிகளிடம் வினியோகம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'இனி நான் எங்கேயும் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்' என்று உறுதியுடன் கூறினார்.

    நீதிபதி வழங்கி உள்ள இந்த தீர்ப்பு பைக் ரேஸ் பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.

    • அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்து வாகனத்தை பார்வையிட்டு தாய்மார்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், ஊராட்சிமன்ற தலைவர் ஏ.கே.முருகன், நகர செயலாளர் பூங்காவனம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கதிர் ஆனந்த் எம்.பி.தொடங்கி வைத்தார்
    • நாள் ஒன்றுக்கு 50 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல், குறித்து சமுதாய வளர் உறுப்பினர்கள் உதவியுடன் நாள் ஒன்றுக்கு 50 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை விழிப்புணர்வு பிரசார வாகனம் வரவுள்ளது.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கதிர் ஆனந்த் எம்‌.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அமலு விஜயன் எம். எல். ஏ., வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1075 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல் நோக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சரா வாகனம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைந்து பஞ்சாயத்துகள் மற்றும் நகர்புற வார்டுகளில் வாகன மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    • சமயநல்லூர் சரக பள்ளிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • போதையினால் ஏற்படும் தீமைகளை விளக்கி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    வாடிப்பட்டி

    சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை, சோழவந்தான், காடுபட்டி, வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போதைஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. போதையினால் ஏற்படும் தீமைகள், நோய்கள், பாதிப்புகள், ஒழிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கி உறுதிமொழிகள், கருத்தரங்குகள், வினாடி-வினாபோட்டி, பேச்சு, ஓவிய, கட்டுரைபோட்டி நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    அதேபோல் பள்ளிகள், கோவில்கள், பஸ்நிலையங்கள், மார்கெட்டுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ''காவல்துறைஅறிவிப்பு'' என்ற தலைப்பின்கீழ் போதைபொருட்களான கஞ்சா, புகையிலை, குட்கா, மது போன்றவை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தெரியவந்தால் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், காவல்நிலையங்களின் தொலைபேசி, கைபேசி எண்களை குறிப்பிட்ட பதாதைகள் வைக்கப்பட்டு சமயநல்லூர் போலீஸ்சரகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரத்தில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் "தூய்மை பணி" குறித்து என் பள்ளி என் பெருமை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட கலெக்டர்மோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, விழுப்புரம் நகரசபை தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி கமிஷனர் சுரேந்தர்ஷா, மாவட்ட கல்வி அலுவலர்காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலக மேற்பார்வையாளர் பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா ஆகியோர் பங்கேற்றனர். 

    நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக சர்கார் பட கதையை முன்வைத்து ‘49பி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். #49P #Sarkar #LokSabhaElections2019 #ElectionCommission
    சென்னை:

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’.

    அமெரிக்காவில் இருக்கும் விஜய் தேர்தலில் தன் வாக்கை செலுத்துவதற்காக இந்தியா வருவார். ஆனால் அவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘49 பி’ பிரிவைப் பயன்படுத்தி, தன் வாக்குரிமையைப் பெறுவார். பெரும்பாலானவர்களால் அறியப்படாத இந்த சட்டப்பிரிவு ‘சர்கார்’ படத்துக்கு பிறகு பரவலாக தெரியவந்தது. ‘நோட்டா’ வின் சட்டப்பிரிவான ‘49 ஓ’ போல, ‘49 பி’யும் மக்கள் கவனத்துக்கு வந்தது.

    நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக சர்கார் பட கதையை முன்வைத்து ‘49பி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். இந்த சட்டப்பிரிவு குறித்த சுவரொட்டி மூலம் இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

    அதில், ‘உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை வேண்டாம் 49பி பிரிவை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ், “மகிழ்ச்சி, தேர்தல் ஆணையம் ‘49 பி’ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் இது தொடர்பான அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    ஒருவர் தன்னுடைய வாக்கை செலுத்த வரும் போது அவர் வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தெரிந்தால் முதலில் அவருடைய அடையாள ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் அவரிடம் இருந்து 2 ரூபாயை கட்டணமாக பெற்றுக்கொண்டு அவர் கூறுவது உண்மையா என்று விசாரணை நடத்த வேண்டும்.

    விசாரணையில் அவர் வாக்கு கள்ள வாக்காக பதியப்பட்டு இருந்தால் அவரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அவர் கூறியது பொய் என்று தெரிந்தால் அவரது 2 ரூபாய் கட்டணத்தை திருப்பி அளித்துவிட்டு அவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு வாக்களிக்கும்போது அந்த வாக்கு தனியாக வாக்கு சீட்டில் தான் பதியப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய அனுமதிக்க கூடாது.’

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #49P #Sarkar #LokSabhaElections2019 #ElectionCommission
    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் நேற்று விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    கோவை:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை டவுன்ஹாலில் நேற்று வாகன பிரசாரம் தொடங்கப்பட்டது.

    இதனை மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்தபடி பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன், தனித்துணை தாசில்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி சார்பில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வாகன பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் 2 வாகனங்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருக்கும். இந்த வாகனங்கள் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பரமக்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுவிலக்கு பிரசாரம் நடைபெற்றது.
    பரமக்குடி:

    பரமக்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுவிலக்கு பிரசாரம் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தை சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமக்குடி தாசில்தார் பரமசிவம், தனி தாசில்தார் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் காந்தி சிலை முன்பு இருந்து புறப்பட்டு பஸ் நிலையம் சென்று மீண்டும் காந்தி சிலையை அடைந்தது.

    இதில் சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, கீழமுஸ்லிம் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் காளஸ்வரன், தினகரன், சியாம் சுந்தர், திட்ட அலுவலர்கள் காஜா முகைதீன், சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    பெரம்பலூர் நகரில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகள் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய வணிகர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.
    பெரம்பலூர்:

    சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீர்நிலைகள் மற்றும் வளிமண்டல சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஜனவரி 1-ந் தேதி முதல் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை செய்து உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அரசின் உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக ஓட்டல்களில் சாப்பாடு, கலவைசாதங்கள், டிபன் வகைகளை மடித்து தருவதற்கு பட்டர் பேப்பருக்கு பதிலாக வாழை இலைகள் மற்றும் காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. சாம்பார் சட்னி ஆகியவற்றை வினியோகிக்க அலுமினியம் பாயில் தாள்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறு, சிறு கவர்கள் பயன்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு பதிலாக ஓவன் கேரி பைகள் வினியோகிக்கப்பட்டது.பெரம்பலூரை பொறுத்தவரையில் முதல் நாளன்றே பெரும்பாலான ஓட்டல்கள் அரசின் கொள்கை முடிவை முழுமையாக கடைபிடித்தன. அதேபோல பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் கப் விற்பனைக்கு பதிலாக பேப்பர் கப் விற்பனை செய்யப்பட்டது. பிளாஸ்டிக் கேரி பைகள் விற்பனை தடை செய்யப்பட்டதால், பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் வெகுவாக குறைந்திருந்தது.

    இதனிடையே பெரம்பலூர் நகரில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகள் பயன்பாட்டை அதிகரிக்க செய்யவும், ஓட்டல்கள், உணவுப்பொருட்கள், இறைச்சி வாங்க செல்லும்போது பாத்திரங்களை கொண்டு செல்வதற்காக வணிகர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார இயக்கம் நேற்று நடத்தப்பட்டது.பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த பிரசார இயக்கத்தை அதன் தலைவர் சத்யா நடராஜன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பொது செயலாளர் நல்லதம்பி, மாவட்ட அவைத்தலைவர் தனபால், துணைதலைவர் முகமது ரபீக், பொருளாளர் விநாயகா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பழைய பஸ் நிலையம், சூப்பர் பஜார்தெரு, பால் நிலையத்தெரு, பள்ளிவாசல் தெரு, கடைவீதி போன்ற பகுதிகளில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். #tamilnews
    மானாமதுரை ரெயில்நிலையத்தில், பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுபடையினர் பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    மானாமதுரை:

    மானாமதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாட்டுப்பாடி, தாளம் தட்டி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்வது குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவுப்படி மானாமதுரை ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் ரெயில்வே போலீசார், பயணிகளிடம் பாரம்பரிய முறைப்படி வேட்டி, தலைப்பாகை அணிந்து தண்டோரா போட்டு ஆடலுடன் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அவர்கள் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது, ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படி பொருட்கள் இருந்தால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும், விதிகளை மீறி பட்டாசு கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை பாட்டுப்பாடி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நேற்று மதியம் மானாமதுரை வழியாக சென்ற ரெயில் பயணிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் வித்தியாசமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
    வேட்டவலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.செல்வமணி முன்னிலை வகித்தார்.

    பள்ளி மாணவர்கள் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி பள்ளியில் இருந்து அரண்மனை வீதி, கடை வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.

    இதில் வேட்டவலம் அரிமா சங்கத்தலைவர் ஜான்பீட்டர், இளங்கோவன், ரமேஷ், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் வெற்றிவேலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 
    திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத்துறையின் சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை நேற்று, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு கஷாயத்தினை வழங்கி னார்.

    இதன் பின்னர் அவர் பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் துரிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உள்பட தீவிர காய்ச்சல் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாகன பிரசாரம் மாவட்டம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் மருத்துவ அலுவலர்கள் உள்பட 1500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் அபேட் மருந்து தெளித்தல், நீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்து தெளித்தல், கொசு ஒழிப்பு புகை தெளிப்பான், கொசு ஒழிப்பு பணிகள், மருத்துவ முகாம் நடத்துதல், நிலவேம்பு கஷாயம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகின்ற இடங்களான சிமெண்டு தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், கிணறுகள், சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காதவாறும் வீட்டுப்புறங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையற்ற குப்பைகள், பழைய டயர்கள் உள்ளிட்டவைகளை அகற்ற துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையினை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தங்களது பகுதிகளுக்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள வரும் சுகாதார பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு கொசுவை முழுமையாக ஒழித்து உடல் ஆரோக்கியத்துடனும், முழு சுகாதாரத்துடனும் பராமரித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1 கோடி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 816 கால்நடை மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் (பொறுப்பு) மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×