search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    • சமயநல்லூர் சரக பள்ளிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • போதையினால் ஏற்படும் தீமைகளை விளக்கி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    வாடிப்பட்டி

    சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை, சோழவந்தான், காடுபட்டி, வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போதைஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. போதையினால் ஏற்படும் தீமைகள், நோய்கள், பாதிப்புகள், ஒழிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கி உறுதிமொழிகள், கருத்தரங்குகள், வினாடி-வினாபோட்டி, பேச்சு, ஓவிய, கட்டுரைபோட்டி நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    அதேபோல் பள்ளிகள், கோவில்கள், பஸ்நிலையங்கள், மார்கெட்டுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ''காவல்துறைஅறிவிப்பு'' என்ற தலைப்பின்கீழ் போதைபொருட்களான கஞ்சா, புகையிலை, குட்கா, மது போன்றவை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தெரியவந்தால் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், காவல்நிலையங்களின் தொலைபேசி, கைபேசி எண்களை குறிப்பிட்ட பதாதைகள் வைக்கப்பட்டு சமயநல்லூர் போலீஸ்சரகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×