search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Camp"

    • அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார்.
    • ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார். ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஓ.பி.ஆர். நினைவு கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் ஒருங்கிணைந்து விளக்கவுரையாற்றினார். இதில் உதவிப் பேராசிரியர்கள் மலர்விழி, நித்தியபிரியா, மங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கடலூரில் நடைபெற்ற சைபர் குற்ற கருத்தரங்கில் பங்கேற்ற, வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளான சந்தோஷிகா, செல்வராணி, நந்தினி, கனிமொழி, கார்மேல் நிர்மல் ரோஷி, லாவன்யாஸ்ரீ, மரியா பாஷ்டினா ஆகியோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • காய்ச்சலுடன் வந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    முன்னாள் தலைவர் கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், சித்தா டாக்டர் ஹேமலதா, சுகாதார ஆய்வாளர் வேலாயுதம் உள்ளிட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் காய்ச்சல் வந்த நபர்கள் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் தெரிவித்து சிகிச்சை பெற ஆலோசனை வழங்கினர்.

    மேலும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு காய்ச்சல், ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி நன்றி கூறினார்.

    • மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் சிறுதானியத்தின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிறுவனத் தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் கலந்து கொண்டு சிறுதானிய வகைகள் பற்றியும், அவற்றின் நன்மைகள் குறித்தும் மாணவிகளோடு பகிர்ந்தனர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் சிறுதானியத்தின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    கல்லூரி மாணவிகள் சிறுதானியங்களில் பலவகையான உணவுகள் தயாரித்து அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கி கூறினர். மேலும், சிறுதானிய வகைகளைக் கொண்டு ரங்கோலி அமைத்தும் மகிழ்ந்தனர்.

    • மக்களை தேடி மருத்துவம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
    • இந்த முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு இலவச எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

     குன்னூர்

    தமிழக அரசின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதியவர்கள் பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் காசநோய் பிரிவு சார்பில் குன்னூர் வி.பி.தெருவில் தொழிலாளர்களுக்கு காசநோய் மற்றும் நுரையிரல் சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு இலவச எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் எம்.ஏ.ரகீம் மற்றும் தலைமை மருத்துவ சூப்பர்வைசர் சரத்குமார், ஆண்டனி செபஸ்டின், ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • துண்டு பிரசுரங்கள் வினியோகம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தில் நேற்று தனியார் பள்ளியில் சுகாதார துறை சார்பில் திருத்தியமைக்கப்பட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் அசோக் ஆலோசனைப்படி, காசநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுது.

    இந்த முகாமிற்கு கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நரேந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் வேலாயுதம், ராஜேஷ், உதவி தலைமையாசிரியர் ரவி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார்.

    திருவண்ணாமலை மாவட்ட காசநோய் நலக்கல்வியாளர் சேஷாத்திரி கலந்து கொண்டு பேசுகையில், "காசநோயின் அறிகுறிகள், அதற்கான பாதுகாப்பு, சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படுகிறது. மேலும் தமிழகம் காசநோய் இல்லாத மாநிலமாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    மேலும் மாணவிகளுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    இதில் சிசிச்சை மேற்பார்வையாளர் தினேஷ், களப்பணியாளர் மோகன்பாபு, ஆசிரியர்கள் சிவகுமார், இந்துமதி, சரண்யா, அனுராதா, பொற்செல்வி மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வேம்பத்தூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதில் பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினார்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை,

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேம்பத்தூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. இந்த முகாமில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் (சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர்கள் காளைஈஸ்வரன், கிரன்காளை ஆகியோர் சொத்துஉரிமைச்சட்டம், அடிப்படை உரிமைகள் பற்றி எடுத்துரைத்தனர். வேம்பத்தூர் ஊராட்சி தலைவர் சமயமுத்து வரவேற்று பேசினார். இதில் பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினார்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கீழச்சீவல்பட்டியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    முகாமில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு மாத்திரை வழங்கினர். இதில் காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், சிவகங்கை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராம்குமார், கால்நடை மருத்துவர்கள் பிரதீப், அருண், ஸ்ரீநாத், செல்வநாயகி, ரஞ்சிதா, கால்நடை அலுவலக ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவக் குழுவினரால் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • தனியார் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் தொழு நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதை எவ்வாறு தடுக்க முடியும் என்று விளக்கி கூறப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இந்த முகாமை ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமையில், ஏற்காடு வட்டார மருத்துவம்மல்லா மேற்பார்வையாளர் மாதேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் புருஷோத்தமன் ஆகியோர் நடத்தினர்.

    முகாமில் தொழு நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதை எவ்வாறு தடுக்க முடியும் என்று விளக்கி கூறப்பட்டது. மேலும் உடலில் ஏற்படும் நிறமாற்றம், சிவந்த வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், தோலில் எண்ணெய் பூசியது போன்ற மினுமினுப்பு, காது மடல்கள் தடித்திருந்தல் போன்ற ஆரம்ப அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

    பின்னர் இது குறித்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மலை கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி, நோய் அறிகுறிகள் உள்ளதா என்று சோதனை செய்தனர்.

    முகாமில் ஏராளமான மாடுகள், எருமைகள், நாய்கள் மற்றும் ஆடுகள் கலந்து கொண்டன. அவைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் சினை ஊசி போடப்பட்டது.

    அவிநாசி:

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை திருப்பூர் மாவட்டம் சார்பில் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்குட்பட்ட சின்னேரிபாளையம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் சாலையூரில் நடைபெற்றது. இதில் சிறந்த கிடாரிக்கன்றுகள் மற்றும் அதிகமான கால்நடைகள்வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் ஏராளமான மாடுகள், எருமைகள், நாய்கள் மற்றும் ஆடுகள் கலந்து கொண்டன.

    அவைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் சினை ஊசி போடப்பட்டது. சிறந்த கால்நடைகள் மற்றும் விவசாயிகளுக்கு சின்னேரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தண்டபாணி பரிசுகளை வழங்கினார். முகாமில் அவிநாசி கால்நடை மருத்துவர் மணிவண்ணன் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்தது

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள பைங்கினர் கிராமம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மைதானத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநாய் கடி நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

    கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை தாங்கினாாார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் வி.பாபு, கால்நடை உதவி இயக்குனர் ராமன், கால்நடை மருத்துவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு வெறிநாய் கடி நோயைப் பற்றி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாமை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பாலகோபால், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், தினகரன், வழக்கறிஞர் சான்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் நாய்களுக்கு வெறி நாய் கடி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

    • நோய்கள் தடுப்பு குறித்து டாக்டர்கள் எடுத்துரைத்தனர்
    • விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    நாட்டறம்பள்ளி ஒன்றியம் எக்லாஸ்புரம் கிராமத்தில் கால் நடை பராமரிப்புதுறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஈ.எஸ்.பாரதி சேட்டு தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் ஈ.பி.விஜயன், மண் டல துணை தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு இருந்த கால்நடைகளுக்கு டாக்டர் கோகிலாசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தும், கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்கள் குறித்தும் அதன் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

    முகாமில் கால்நடை மருத்துவர்கள் பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள், விவசா யிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • குழந்தைகளுக்கான பல்வேறு சட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது. அவர் பேசுகையில், குழந்தைகள் சாலைபாதுகாப்பு விதிகளை நன்கு தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சாலை பாதுகாப்பு தொடர்பாக இங்கு விளக்கப்பட்ட காணொலியில் சாலைப்பாதுகாப்பு விதிமிறல்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை தவிர்கும் வழிமுறைகள் பற்றியும், பள்ளி குழந்தைகள் சாலைவிதிகளை பின்பற்றினால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும் என்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். குழந்தைகளுக்கான பல்வேறு சட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இதில் துணை போக்குவரத்து ஆணையர் ரவிசந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் குலசேகரமந்திர செல்வி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு சாலைபாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் சுமார் 750 மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ×